வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (10/02/2016)

கடைசி தொடர்பு:15:53 (10/02/2016)

அஜித், விஜய்க்காக அடிதடி நடந்தப்ப நான் அஜித் பக்கம் நின்னேன்! - வேட்டையன் கவின்

சந்திரமுகி வேட்டைய ராஜாவுக்கு அப்பறம் தமிழ் நாட்ல செம ஃபேமஸ் விஜய் டிவி "சரவணன் மீனாட்சி" வேட்டையனா தான் இருப்பாரு.. ஏகப்பட்ட பெண் ரசிகைகள்!

”அட நீங்க வேற எனக்கு நீங்க பேசறதெல்லாம் பார்த்தா என்ன வெச்சு செய்யற மாதிரியே இருக்கு. சொந்த ஊரு திருச்சி.. பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி ஆனாலும் படிப்புல பெரிசா ஆர்வம்லாம் இல்ல. அப்பா வெல்டர், அம்மா ஹோம் மேக்கர், மீடியா எண்ட்ரி அப்படின்னு சொன்னோன கொஞ்சம் திட்டினாங்க வீட்ல. ஆனா எனக்கு மீடியா ஆர்வம் சென்னை வந்ததுக்கு அப்பறம் தான் அதிகமா ஆச்சு. அப்பறம் இப்போ அவங்களுக்கு ஓகே... கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி முதல் சீரியல், தாயுமானவன் இப்படி ரெண்டு சீரியல்கள்ல சின்னச் சின்ன கேரக்டர். இப்போ ரெண்டாவது சரவணன் மீனாட்சில தான் பெரிய ரோல். அப்பறம் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஷோ!”

"பி.எஸ்.சி கெமிஸ்ட்ரியா சைன்ஸ் அவ்ளோ பிடிக்குமா?"

"ம்க்கும்... கலாய்க்காதிங்க நானே, 'காலேஜ் இன்கம்ப்ளீட்.. டிகிரி முடிடா.. அப்பதான் மீடியா இல்லன்னா கூட வேற வேலை பார்த்துக்கலாம்னு வீட்ல சொன்னாங்க. ஆனால் எனக்கே ஒருவேளை டிகிரி முடிச்சுட்டா மீடியா வாய்ப்புக் கிடைக்கலன்னா வேற வேலைக்குப் போயுடுவோமோன்னு ஒரு எண்ணம் அதனாலயே முடிக்கல!”

"திடிர்னு சரவணன் மீனாட்சி ஹீரோவ ஒவர் டேக் பண்ணிட்டீங்களே!"

"ஆக்சுவலி இர்ஃபான் தான் சீரியல் ஹீரோ. திடீர்னு அவன் படத்துல புக் ஆகிட்டாரு. இர்ஃபான் ஏற்கனவே ரெண்டு படத்துல ஹீரோ, கனா காணும் காலங்கள் இப்படி அவருக்கு பெரிய மக்கள் கூட்டம். அதனால அவர் இடத்த இன்னொருத்தர் பிடிக்கறது கொஞ்சம் லேட் ஆகும். அப்பறம் வந்த பிரேம் சரியான இடத்த பிடிக்கறதுக்குள்ள வில்லனா அடுத்த இடத்துல இருந்த என்னை மேல தூக்கிடுச்சுன்னுக் கூட சொல்லலாம். ஒரு லக் தான்!”

"விஜே ஆகிட்டீங்களே?"

!ஆமா என்னையும் நம்பி ஒரு நல்ல ஷோ குடுத்துருக்காங்க...சந்தோஷமா இருக்கு.. எனக்கு கோ விஜேவும் என்னோட ஃப்ரண்ட் பிரியா பாவானி ஷங்கர் தான். சீரியல்ல என்னோட கேரக்டருக்கு மட்டும் தான் நான் வேலை செய்யணும். கவின் எப்படின்னு அந்த கேரக்டர்ல தெரியாது. ஆனால் விஜே அப்படி இல்ல, நம்ம ஒரிஜினல் முகம், எல்லாருக்கு தெரிய வரும். இதுக்காக நான்
காத்துக்கிட்டு இருந்தேன்னு கூட சொல்லலாம்!”

"உங்க முதல் சம்பளம் பத்தி சொல்லுங்களேன்!”

"நல்லா ஞாபகம் இருக்கு 1000 ரூபாய்...ஒரு ஸ்டேஜ்க்கு மேல வீட்ல பணம் குடுக்கறத கட் பண்ணிட்டாங்க. அப்போ சும்மா சுத்திகிட்டு இருக்கறதுக்கு எதாவது பாக்கெட் மணிக்காகவாவது வேலை
செய்யலாமேனு சென்னை பஜார்ல என் ஃப்ரண்ட் சிடி ஷாப், அங்க ஒரு 10 நாள் வேலை செஞ்சேன், 1000 ரூபாய் குடுத்தாங்க. என் அம்மாவுக்கு சேலை வாங்கினேன். அப்பறம் நிறைய ஸ்டேஜ் நிகழ்ச்சிகள், எம்.சி இப்படியே முன்னேறினேன்!”

”உங்களுக்கு பிடிச்ச ஹீரோ!”

”என்றும் தல எதிலும் தல.... திருமலை, ஆஞ்சேநேயா ரிலீஸ் டைம் அப்போ திருச்சி சோனா, மீனா தியேட்டர்ல ஒரு பெரிய ரகளை நடந்துச்சே. பெரிய சண்டை போலீஸ் எண்ட்ரீ, அடிதடி அப்போ ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு சிக்கின ஆட்கள்ல நானும் ஒருத்தன். ஆனாலும் அசராம படம் பார்க்க காத்துக்கிட்டு இருந்தேன். அவ்ளோ டை ஹார்ட் அஜித் விசிறி!”

"உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின்!"

"த்ரிஷாவுக்கு தம்பியா நடிக்க சான்ஸ் கிடைச்சா கூட ஓகே சொல்லிடுவேன்...கண்டிப்பா என் கூட அவங்க ஹீரோயினாலாம் நடிக்க மாட்டாங்க, அதனால நாமளே மனச தேத்திக்கிட்டு தம்பியா நடிக்க ரெடியாகிடுவோம்!”

'கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ... நிகழ்ச்சி எப்படி போகுது?"

“ஹைய்யோ! நிறையா கத்துக்கணும். விஜே ஃபீல்ட் பத்தி இன்னும் நிறையப் புரிஞ்சுக்கணும்., ஏற்கனவே பிரியா நிறைய டிவி ஷோக்கள் பண்ணியிருக்காங்க அதனால் எனக்கும் நிறைய  சொல்லிக்குடுக்கறாங்க!”

"கவினோட டைம் பாஸ் என்ன?"

“ஒரு தியேட்டர்ல ஒரு ஓரமா தங்கிக்கோனு சொன்னா ஜாலியா தங்கிப்பேன்... அப்படி ஒரு சினிமா கிரேஸ்,அவ்ளோ சினிமா பார்ப்பேன். பொங்கல் அன்னிக்கு ரிலீஸ் ஆன நாலு படத்தையும் ஸ்கெடியூல் போட்டு ஒரே நாள்ல பாத்தேன்.. இப்போ கொஞ்ச நாளா எல்லாப் படங்களையும் பார்க்க முடியல. அதுதான் வருத்தம்!”

“பிடிச்ச விஜே? பிடிக்காத விஜே?”


”எப்பவுமே சிவகார்த்திகேயன் அண்ணா, டிடி அக்கா மை ஃபேவரைட்.... பிடிக்காத விஜே... ஆமாங்க சொல்லணும்னு நினைச்சேன். இந்த லோக்கல் சேனல், சில டுபாக்கூர் சேனல்லல்லாம் சில விஜேக்கள் உண்மையாவே இவங்களுக்கு விஜே தெரியுமா இல்ல அந்த டிவிக்காரங்க இப்படி பண்ண வைக்கிறாங்களா ஆனால் அவங்கள பார்த்தா பாவமா இருக்கும். ப்ளீஸ் விட்ருங்க!”

“எந்த ஷோ மேல செம கிரேஸ்!”

”குடுத்த ஷோவ சரியா பண்ணனும், அப்பறம் ஜோடி நம்பர் ஒன் ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்கு பதிலா அதே மாதிரி கிடைச்சிருக்க ஷோ தான் கிங்ஸ் ஆஃப் டான்ஸ்!”

”ஒரு நாள் நீயா நானா ஷோல கோட் மாட்டிக்கிட்டு ஹோஸ்ட் பண்ண சொன்னா பண்ணுவீங்களா?

“அந்த ஷோ நல்லா போறது உங்களுக்குப் பிடிக்கலையா...என்ன கோபிநாத் அண்ணன் விஷம் வெச்சு கொன்னுடுவாரு... இன்னும் அதுக்கெல்லாம் வளரணும்!”

“பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ண ஒரு ஆண் எப்படி நடந்துக்கணும்?”

“ஒரிஜினலா இருக்கணும், நாம நாமளா இருந்தாலே பொண்ணுங்களுக்கு பிடிக்கும். கேஷுவலா, எதுக்கும் பில்டப் குடுக்காம, நம்ம வேலைய நாம செஞ்சா போதும் , பொண்ணுங்க மட்டும் இல்ல எல்லாருக்கும் நம்மள பிடிச்சுடும்!”

“உங்க வாழ்க்கைத் துணை எப்படி இருக்கணும்?”

“பார்த்த உடனே மனசுல நான் ஃபீல் பண்ணணும். ஒரு ஸ்பார்க் வருமே அது. அழகு , அறிவு இதெல்லாம் வெச்சு வராது. கண்டிப்பா நம்ம ஹார்ட்டுக்கு டச் ஆகும் அப்ப தான் கல்யாணம். என்னை சேர்ந்த விஷயங்கள அவங்க மதிக்கணும், அதே மாதிரி அவங்கள சேர்ந்த விஷயங்கள நானும் மதிப்பேன்!”

“உங்க கிட்ட இந்தக் கேள்வியக் கேட்கலைன்னா எப்டி? லவ் புரபோஸல் பத்தி சொல்லுங்க?”

“எனக்கு ஸ்கூல் படிக்கும் போது ஒரு மூணு , நாலு வந்துச்சு.... கொஞ்சம் சுமாரா இருந்துச்சா அதனால அப்படியே விட்டுட்டேன். அது சரி சூப்பரா இருந்தா நம்ம கிட்ட எதுக்கு லவ்வ சொல்லப்போறாங்க... ஸ்கூல் படிக்கும் போது நான் ரொம்ப மொக்கையா இருப்பேன். என் லைஃப்ல ஒரு லவ் இருக்கு. ரொம்பச் சின்னப்புள்ளத் தனமா ரெக்கார்ட் நோட்ல அந்த லேமிநேட் பண்ணியிருபோம்ல அதுக்குள்ள வெச்சு குடுத்தாங்க. நானும் ஓகே சொல்லிட்டு அதே நோட்ல லெட்டர் வெச்சு குடுத்தேன். ஆனா அது ஒரு விளையாட்டுத்தனமான லவ் !”

“சினிமா எண்ட்ரீ எப்போ?”

“வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஒரு சில வாய்ப்புகள் வருது. ஆனா ரொம்பப் பெர்ஃபெக்டா பண்ணனும். உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை, சினிமா பெரிய விஷயம் கொஞ்சம் தடுக்கினாலும் நம்ம காலி. அதனால நல்ல கேரக்டர்ங்கறத விட நல்ல தொடக்கத்துக்காகக் காத்துட்டு இருக்கேன்!”

ஷாலினி நியூட்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க