Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இறுதிச்சுற்று இரண்டாம் பாகம் எடுக்க இயக்குநருக்கு இஷ்டமில்லையாம். ஏன்? - சுதா கொங்கரா பேட்டி

"இந்தப் படம் இந்தியில , தெலுங்குல ஹிட்டாகுதோ இல்லையோ ஆனால் கண்டிப்பா தமிழ் மக்கள் கிட்ட ஹிட் ஆகும்னு எனக்குத் தெரியும், ஏன்னா தமிழ் ஆடியன்ஸ் அப்டேட் ஆகிட்டாங்க" - படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த பூரிப்பில் இருக்கிறார் இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா.

“என்ன படிச்சிருக்கீங்க?”

“நான் படிச்சது பி.ஏ ஹிஸ்ட்ரி. அப்பறம் சினிமா துறைக்காக மாஸ் கம்யூனிகேஷன் . சினிமாவுல செம ஆர்வம், கிரேஸ். ஒரு ஸ்க்ரீன் பிளே எழுதிக் காட்டின உடனே, மணிரத்னம் சாருக்குப் பிடிச்சுப் போச்சு. அப்பறம் அவர் கிட்டயே 6 வருஷம் அஸிஸ்டெண்ட் டைரக்டர்”

“’சினிமாவா’ன்னு கேட்டு வீட்ல திட்டியிருப்பாங்களே.....”

“ஹைய்யோ, ஏன் கேக்கறீங்க.. செம திட்டு. சினிமாவெல்லாம் நமக்கெதுக்கு. அது ரொம்ப டேஞ்சர். அப்படி இப்படினு. அவங்களுக்கு சினிமா தெரியாது. எடுத்த உடனே ரேவதி மேம் கிட்ட வேலை செஞ்சேன். சரி பொண்ணுகிட்ட தான் வேலை செய்யறா-ன்னு பேசாம விட்டுட்டாங்க. அப்பறம் மணிரத்னம் சார். ஏன் இங்க பொண்ணு கிட்ட வேலை செய்யற அப்படியே போக வேண்டியதுதான, இப்போ என்ன ஆச்சு . இப்படி எப்போ பார்த்தாலும் டோஸ் விழும். ஆனால் இப்போ வீட்ல எல்லாருக்கும் பெருமை!”

“உங்களுக்கும் மாதவனுக்கும் எப்பவுமே சண்டை நடந்துகிட்டே இருக்கும்னு கேள்விப்பட்டோமே?”

“ஆமா ரெண்டு பேருக்கும் எப்பவுமே பிரச்னை தான். எதாவது அட்வைஸ் பண்ணிக்கிட்டு.. எனக்கு டிப்ஸ் குடுத்துக்கிட்டு , நான் ஒரு கட்டத்துல செம டென்ஷன் ஆகி திட்டிட்டேன். மணிரத்னம் சார் செட்ல எப்போ பார்த்தாலும் எனக்கும் அவருக்கும் சண்டை தான் நடக்கும். ஆனால் இறுதிச்சுற்று படம் தான் எங்களுக்குள்ள இருக்க நட்ப வெளிய கொண்டு வந்துச்சு!”

“இந்தப் படத்துல பாக்ஸிங் பாலிடிக்ஸ் எல்லாத்தையும் சொல்லீட்டீங்க, நீங்க சொல்லாம விட்ட பிரச்னைகள் எதாவது இருக்கா?”

“அப்படி எதுவுமே இல்ல, நீங்க அந்த டிரெய்ன்ல நடக்கற பாலியல் சீண்டல் கூட உண்மை, அதுக்கு மேல ஒரு அநியாயம் இருக்குமா சொல்லுங்க, தப்பான லிஸ்ட்டுக்குள்ள விளையாட விடறது, மார்க் கம்மி பண்ணி போடறது எல்லாமே நடந்துகிட்டு இருக்கற உண்மைகள். எதையுமே நான் மறைக்கல, எதையுமே நான் பொய்யாக் காட்டல!”

“படம் செம ஹிட் செகண்ட் பார்ட் உண்டா?“

“ஹைய்யோ! நீங்க வேற நான் இந்தப் படத்த எடுக்கறதுக்குள்ளயே படாதபாடு பட்டு, பாதியாகிட்டேன். இதுக்கான டீட்டெய்லிங் ஒர்க்குக்காக ஊர் ஊரா சுத்தினேன்.  இதுல செகண்ட் பார்ட்டா! கண்டிப்பா செத்தே போயிடுவேன்!”

 “ஏன் மாதவன்? ஒரு வேளை அவரு ஒத்துக்கலைன்னா அடுத்த சாய்ஸ்ல யாரு வெச்சுருந்தீங்க?”

“மாதவன் மட்டும் தான் கரெக்ட் சாய்ஸ்னு நான் முடிவு பண்ணி வெச்சுருந்தேன். அவரு கண்டிப்பா சம்மதிப்பாருங்கறதுலயும் எனக்கு 100% நம்பிக்கை இருந்துச்சு, மாதவன் கிட்ட ஒரு ஸ்பெஷல் ஆட்டிடியூட் இருக்கும், அவரோட நடிப்போட ஸ்பெஷல் அதுதான். என் கிட்ட ஒரு திமிரு இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். கண்டிப்பா மாதவன் ஓகே சொல்வாருன்னு, ஒருவேள மாட்டேன்னு
சொல்லியிருந்தா சன்னி தியோல், அக்‌ஷய் குமார், இவங்க ரெண்டு பேரும் மைண்ட்ல இருந்தாங்க!”


“ரித்திகா சிங் பத்தி சொல்லுங்க...எங்க.. எப்படி உருவானாங்க மதி?”

“ எனக்கு முதல்ல பணத் தகுதியே இல்ல, அப்போ நான் ஒரு ஹீரோயின தேடிக்கிட்டு இருந்தேன். நிறைய பேர போயி பார்த்தேன். அய்யோ இந்தப் படத்துக்கு பலமே ஹீரோயின் தான, என்ன பண்ணப் போறோம்னு நினைச்சுட்டு எப்பவுமே ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்துகிட்டே இருப்பேன். அப்போ தான் ஒரு சேனல்ல ரித்திகா எஸ்.எஃப்.எல் (SFL) விளம்பரத்துக்கு வந்தாங்க. அங்க பிடிச்சேன். அவங்க கிட்ட ஒரு துறுதுறுப்பு இருந்துச்சு. அப்பறம் எங்கெங்கோ சுத்தி எஸ்.எஃப்.எல்’ஓட ஓனர் பிடிச்சா அவர் மாதவனுக்கு ஃப்ரண்டாம். அப்பறம் ரித்திகா எங்க டீம் குள்ள எண்ட்ரீ ஆனாங்க!”

“சமீபத்துல ஒரு இயக்குநரா உங்கள இம்ப்ரஸ் பண்ண ஹீரோயின் யாரு, கேரக்டர் எது?”

“ மலர் ... சாய் பல்லவி... என்ன ஒரு எதார்த்தமான ஹீரோயின். பிரேமம், நல்ல படம் வேற. பிடிச்ச ஹீரோயின் தீபிகா படுகோனே!”

 “இந்தப் படம் பார்க்கணும்னு மைக் டைசன் ஸ்டேட்டஸ் போட்டிருந்ததப் பார்த்ததும் என்ன தோணுச்சு?”

“ நம்ம சினிமாவ கடல் கடந்து யார் யாரோ, எங்க எங்கையோ பார்த்துட்டு இருக்காங்கன்னு அதிகாரப்பூர்வமா புரிஞ்சுகிட்டேன். நான் இந்தப் படத்துல பயன்படுத்தின எல்லாமே எல்லா ஸ்போர்ட்ஸ் வீரர்கள் மத்தியிலயும் ஏதோ ஒரு தாக்கத்த ஏற்படுத்தியிருக்கும். அதுவும் முகம்மது அலி, மைக் டைசன் வாழ்க்கை வரலாற அவ்ளோ ஆர்வமா படிச்சுருக்கேன். அவரே என் படம் பார்க்கணும்னு ஆசை படறது சூப்பர்ல!”

“ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் பார்க்கும் போது என்ன ஃபீல் பண்ணீங்க?”

“ இந்தப் படத்த பார்த்து கை தட்டுற பொண்ணுங்கள விட எனக்கு அதிகமா பசங்க தான் தென் பட்டாங்க. ஒரு பொண்ணு அங்க ஜெயிக்கறத பார்த்து இவங்க கை தட்டுறாங்க. அதுதான் எனக்குக் கிடைச்ச வெற்றின்னு நான் சொல்லுவேன். எல்லாரும் பாராட்டராங்க, எல்லாத்துக்கும் மேல மீடியாக்கள் படத்தக் கொண்டாடுறாங்க. அந்த வகையில் நான் நல்ல படம் எடுத்துருக்கேன்னு எனக்கே ஒரு திருப்தி வந்துடுச்சு!”

 “ஒரு பெண் இயக்குநரா சினிமா துறைல நீங்க சந்திச்ச பிரச்னைகள் என்ன?”

“ தாங்க் காட் .. நான் வேலை செஞ்ச எல்லா இடமும் நல்ல இடம். மணி சார் மாதிரி பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கற ஆள பார்க்கவே முடியாது, அவரோட படங்கள்ல எப்படி பெண் கேரக்டர்கள் வலிமையா இருக்குமோ, அப்படிதான் அவர் லைஃப்லயும் பெண்கள மதிப்பாரு. எனக்கு அமைஞ்ச தயாரிப்பாளர்களும் அப்படிதான். எனக்கு படம் எடுக்கத் தெரியுமா இல்லையா அப்படின்னு மட்டும் தான் பார்த்தாங்க. நான் பொண்ணா , ஆணா அப்படின்னு பார்க்கல!”

“ஏன் மாதவன அவ்ளோ நல்லா கோச்சா காட்டிட்டு, ரிங்ல சண்டை போட்ற மாதிரி ஒரு சீன் கூட வைக்கல?”


“படத்துல ஒண்ணு ரெண்டு கேரக்டர் தவிர்த்து எல்லாருமே ரியல் பாக்ஸர்ஸ். அவங்க மத்தியில மாதவன நான் ரிங்ல வெச்சு சண்டை போட விட்டா நல்லாருக்குமா சொல்லுங்க,மாதவன் பாக்ஸர் கிடையாது, எனக்கு படம் எதார்த்தமா இருக்கணும், ஹீரோயிஸம் தேவையில்லாத படம், அதுவும் இல்லாம ஒரு கோச்சா மாதவன் தூரமா நின்னு நடிச்சா தான் அந்தக் கேரக்டருக்கு பலம்!”

“மணிரத்னம் என்ன சொன்னாரு?”

”முதல் காப்பி பார்த்தாரு இன்னும் படம் முழுசா பார்க்கல அவரு. அவரோட சேர்ந்து தான் படம் பார்க்கணும்!”

“பாலா சார் என்ன சொன்னாரு?அவரு கூட பரதேசி படத்துல வொர்க் பண்ணீங்களே?”

”அவரு என்னென்னமோ சொன்னாரு, ஆனா அவரு எப்பவுமே முகத்துக்கு நேரா நம்மள பாராட்ட மாட்டாரு, “ம்ம்.. நல்ல படம், நல்ல டைரக்‌ஷன் அப்படின்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தாரு.எனக்கு அவரு அண்ணன் மாதிரி, பரதேசி படத்துல இஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்தக் கட்டத்துல தான் என் படம் ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துச்சு அதனால தான் நான் பரதேசி ரிலீஸ் ஆகறதுக்குள்ள விலக வேண்டியதா இருந்துச்சு!”

“காளி வெங்கட் பணத்துக்காக மதம் மாறிடர மாதிரி காமிச்சீங்களே, பிஜேபி டைம்ல இந்த சீன், ஏதோ அவங்களுக்கு சப்போர்ட் மாதிரி தெரியுதே?”

“நான் பணத்துக்காக மதம் மாறினதா காமிச்சிருந்தா கடைசி ஃபைட் சீன்ல அவரு பொண்ண நினைச்சு ஏசப்பான்னு பிரேயர் செய்யறத காமிச்சுருக்க மாட்டேனே, அவரு உண்மையா மதம் மாறினதாதான் காமிச்சுருப்பேன், இன்னொன்னு முதல் காட்சியில பணத்துக்காக மதம் மாறிட்டியான்னு அவரோட ஒயிஃப் தான் கேப்பாங்க. ஓ மை காட் எவ்ளோ நுணுக்கமா சீன நோட் பண்ணியிருக்கீங்க!”

 “அதென்ன நார்த் இந்தியன் பொண்ணுங்க, ஒயிஃப்... கலர் லாஜிக் வந்துட கூடாதுன்னா?”

“எக்ஸாக்ட்லி அதுக்காக தான். குப்பத்துப் பொண்ணுங்க ஏன் இவ்ளோ கலரா இருக்காங்கன்னு கேள்வி வந்துடக் கூடாது, இன்னொன்னு நான் ரித்திகாவை உக்கார வெச்சு மேக்கப் போட்டு, மாநிறமா ஆக்கி காமிச்சா அங்க மதியோட எதார்த்தம் காலியாகிடும், படம் இந்தியிலயும் வருது அதுக்கும் சரியா பொருந்தணுமே, இன்னும் சொன்னா ரொம்ப கலரான ரித்திகா ஃபிக்ஸ் ஆனோன தான் இந்த வட இந்தியா பொண்ணுங்க, ஒயிஃப் கேரக்டர் டிசைன் பண்ணேன்!”

“ஆண்- பெண் உங்க கருத்து என்ன?”

“தயவு செஞ்சு உங்க பொண்ணுக்கு பாதுக்காப்பா இருன்னு சொல்லிக் குடுக்கறத விட உங்க பசங்க கிட்ட பொண்ணுங்களுக்கு நீ தான் பாதுக்காப்புன்னு கிளாஸ் எடுங்க அதுவே போதும், ஒவ்வொரு அம்மாவோட கடமை அதுதான்!”

காஷ்மீர் முதல், கன்னியாகுமாரி பாக்ஸிங் பத்தின தேடல் பிரயாணம் எப்படி இருந்துச்சு?


“ சில உண்மையான கதைகள்லாம் சேர்ந்த கலவைதான் இறுதிச்சுற்று. எவ்வளவோ பாக்ஸிங் பொண்ணுங்க, எவ்வளவோ வலிகள், சில சோகங்கள் என்ன அழ வைச்சிடுச்சு, சில விஷயங்கள் எனக்குக் கோபத்த வரவழைச்சிது. மேரிகோம் ஒரு போட்டியில ஜெயிச்சுட்டு ரிங்ல மணிப்பூரி நடனம் ஆடியிருக்காங்க, அத மேரி கோம் படத்துல கூட வைக்கல, ஆனால் அதோட இன்ஸ்பிரேஷன் தான் , மதி ரிங்ல குத்தாட்டம் போடறது, ஒரு பாக்ஸர் கிட்ட கேட்டேன் ஏன் கவர்ன்மெண்ட் வேலைக்காக பாக்ஸிங் பண்றீங்க உங்களுக்கெல்லாம் வெறி இல்லையா அப்படின்னு, அதுக்கு அந்தப் பொண்ணு முதல்ல நீங்க என் வயித்துப் பசிய தீர்த்துடுங்க, அப்பறம் நாங்க வெறி என்னன்னு காமிக்கறோம்னு சொன்னாங்க. எனக்கு கண்கலங்கிடுச்சு !”

-ஷாலினி நியூட்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement