கணிதன் கணக்கு சரியா வருமா? - அதர்வா பேட்டி | Kanithan Actor atharva Interview

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (25/02/2016)

கடைசி தொடர்பு:21:09 (25/02/2016)

கணிதன் கணக்கு சரியா வருமா? - அதர்வா பேட்டி

பாணா காத்தாடி, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புகுதிரை, சண்டிவீரன், ஈட்டி என படத்துக்குப் படம் வெரைட்டி காட்டி வெளுத்துக்கட்டும் அதர்வா 'கணிதன்' பட அனுபவம் பற்றி பேசியதிலிருந்து...

'கணிதன்'ல ரிப்போர்ட்டரா நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

இந்த படம் நான் செலக்ட் பண்ணதுக்கு இந்த ரோல் ஒரு முக்கியமான காரணம். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு வித்யாசம் காட்டணும். எல்லா ரோலும் ஒரே மாதிரி இருக்கக் கூடாதுன்னு கொஞ்சம் மெனக்கெடுறேன். ஈட்டில ஒரு அத்லெட் ரோல் பண்ண வேண்டி இருந்தப்போ ஃபர்ஹான் அக்தர் நடிச்ச 'பாஹ் மில்கா பாஹ்' நல்ல ரெஃபரன்ஸா இருந்தது. அதே போல 'கணிதன்'ல ரிப்போர்டர் ரோலுக்கு நான் சந்திச்ச உங்களப் போல ரிப்போர்டர் தான் ரெஃபரன்ஸ். நிஜமா இது ஒரு ஃப்ரெஷான அனுபவமா இருந்தது.

தொடர்ந்து புதுமுக இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பது எப்படி இருக்கு?

அவங்க கூட பண்ணும் போது நாம மறுபடி முதல்ல இருந்து நடிக்க கத்துக்கற மாதிரி ஒரு அனுபவம் கிடைக்கிது. அதோட அவங்க கத்துக்கும் விஷயங்கள கூடவே இருந்து நாமளும் கத்துக்க முடியும். கணிதன் பட இயக்குநர் சந்தோஷ் அதுல வேற லெவல். அவர் இந்த கதை எக்ஸ்ப்ளைன் பண்ண விதம், அதை எக்ஸிக்யூட் பண்ண விதம் எல்லாமே பக்காவா இருந்தது. இந்தப் படத்தில் எடுத்துக்கிட்ட விஷயமே ரொம்ப புதுசான ஒன்னு. போலி சான்றிதழ் மோசடிகள் பற்றி பேசற த்ரில்லர். படம் படு ரேஸியா இருக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் முடிஞ்ச அளவு அதிகம் மெனக்கெடுறீங்க, அது எவ்வளவு முக்கியம்னு நினைக்கறீங்க?


நிச்சயமா அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஒரு படத்தில் நம்முடைய பங்களிப்புங்கறது அதுல நம்மள எவ்வளவு இன்வால்வ் பண்ணிக்கறோம்ங்கறதில தான் இருக்கு. அந்த மெனக்கெடல, நான் பெரிய விஷயம்னு தலைல ஏத்திக்க மாட்டேன், அதை இன்வால்வ் ஆகற விஷயமா தான் பாக்கறேன்.

தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகறீங்க போல?

ஆமாங்க. கிக்ஆஷ் என்டர்டெயின்மென்ட்'னு என்னோட பேனர் புத்தாண்டு அப்போ ஆறம்பிச்சேன். அதில் முதல் படமா என்னை 'பாணா காத்தாடி' படம் மூலமா நடிகரா அறிமுகப்படுத்தின பத்ரி சார் தான் இப்போ என்னை தயாரிப்பாளராவும் அறிமுகப்படுத்தறார். நல்ல சினிமாக்கள், நல்ல திறமைகள அடையாளப்படுத்தனும்ங்கற நோக்கத்தோட ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் நல்லபடியா வரும்.

நடிகரா அறிமுகமாகி 5 வருஷம் ஆகிடுச்சு, எப்படி இருக்கு இந்த அனுபவம்?

நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். ஒவ்வொரு படத்திலும் பண்ண தப்புகள திருத்திகிட்டே இருக்கேன். ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்கள கத்துக் கொடுக்குது. நிஜமா இவ்வளோ நாள் கழிச்சு திரும்பிப் பார்க்கும் போது நானும் சொல்லிக்கற மாதிரி சில விஷயங்கள் பண்ணியிருக்கேன்னு தோணுது.

 

கூட்டிக்கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்னு சூப்பர் ஸ்டார் டயலாக் இருக்கு. இந்த கணிதன் கணக்கு எப்டி?  ஆடியன்ஸை எந்த விதத்தில் திருப்திபடுத்தும்?

நிச்சயம் இது ஒரு புது அனுபவமா இருக்கும். பலரும் போலிச் சான்றிதழால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரிஞ்சிருக்கமாட்டாங்க. அது எவ்வளவு சீரியஸான விஷயம், இதனால ஒருத்தனுடைய அடையாளமே திருடப்படுதுங்கற விஷயத்தை அவ்வளவு அழகா சொல்லியிருக்கோம். ஒரு புது விஷயத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டிப்பா கணிதன் கொடுப்பான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்