Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரவணன் மீனாட்சி சீரியல் எப்போ முடியும்? - உண்மை சொல்கிறார் ‘வேட்டையன்’

திருச்சி ஹோலிகிராஸ் காலேஜ்-காட்சி தகவல் தொடர்பியல் துறை நடத்திய " மீடியா டாட்காம்"என்னும் திருச்சி மாவட்ட கல்லூரிகள் அளவிலான போட்டி ,கலக்கல் சரவணன் மீனாட்சி வேட்டையனுடன் களை கட்டியது.ஸ்கூல். சுட்டிகளுக்கான ஓவியப் போட்டிகள் " தி பிட்சரா" என்ற தலைப்பில் நடத்தப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவின் பரிசுகளை வழங்கினார்.சுமார் 3000 பேர் சூழ்ந்திருந்த கல்லூரி மாணவ நெரிசலை சமாளித்து சந்தோஷமாய் வெளியேறிய கவினைச் சந்தித்தோம்.

நடிப்பு  மீதான ஆர்வம் எப்படி ? வீட்டில் என்ன ரியாக் ஷன் ?

எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் கிடையாது, முதன்   முதலில் ஹலோ F.M - ஆர்.ஜே க்கு ஆள் எடுத்தாங்க சென்னைல. அதுல கலந்துகிட்டேன்,அப்ப அந்த ஒரு வாரம் மீடியாவ பத்தி ஒரு புரிதல் மனசுல வந்தது.அப்பதான் இனி மீடியா தான் நம்ம லைஃப்ன்னு முடிவு எடுத்தேன்.நல்ல நண்பர்கள் செட்டானாங்க. நண்பர்கள் மூலமாகவே குறும்படங்கள்  நடிக்க ஆரம்பிச்சேன். முறையாக நடிக்க கத்துக்கணும்னு ஒரு ஆசை வந்தது, அப்போதான் கூத்துப்பட்டறை என்ற அமைப்பில் போய் 3 மாதம் வரை டிரெயினிங் எடுத்துகிட்டேன்.

வீட்டுல யாரும் ஒத்துழைக்கல. மீடியாக்குள்ள நிறையப் பேர் இருக்காங்க,நீ மீடியாக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி படிச்சு முடின்னு சொன்னாங்க.ஆனா,  " மச்சான் நீ மீடியாக்குள்ள நுழைஞ்சிட்டா, நீ முன்னாடி என்ன படிச்சன்னு கேட்க மாட்டாங்க, என்ன நடிச்சன்னு தான் கேட்பாங்க.." என்ற என் நண்பர்களோட  உந்துதலான வார்த்தைகள் தான் இன்னக்கி என்ன ஊரே பார்த்து ரசிக்கிற மீடியால எனக்குன்னு ஒரு அடையாளத்த கொடுத்துருக்கு.

'திராவிட முகம்' கொண்ட கலைஞர்ன்னு நீயா நானா கோபிநாத் சொன்னப்போ எப்படி இருந்தது?    
                       

எனக்கு முதலில் அதற்கான முழு அர்த்தம் புரியல, அப்புறம் கோபி அண்ணன்ட்டயே என்ன அர்த்தம்னு கேட்டேன், அவர் தான் நல்ல ஒரு தமிழ் முகம்,பக்கத்து வீட்டுப் பையன்னு தோணக்கூடிய முகம்ன்னு பாராட்டினார்.

இயல்பு வாழ்க்கைல அம்மா,சகோதரிகள்,பெண் தோழிகள் கூட பேசும் போது தொட்டுக்கூட பேச மாட்டோம். ஆனா, நடிப்புத் துறை அதற்கு முழுவதும் எதிர்மறையாக இருக்குமே அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறீங்க?

" நடிப்புக்கு வெக்கம்,மானம்,சூடு,சுரணையை இழந்தால் தான் நல்லது''.முதலில் மீனாட்சி அக்கா கூட நடிக்கும் போது கூட கூச்சமாகத் தான் இருந்தது.நடிப்புக்கு என்னை நான் பக்குவப்படுத்திக்கிட்டேன். காதல் சீன்கள்ன்னு வந்துட்டா 20 வயசு பொண்னோ இல்ல 60 வயசு கிழவியோ நடிப்புன்னு வந்துட்டா ஒரே ரியாக் ஷன் தானே கொடுக்கணும்.

உங்க வீட்டில் நீங்க நடிக்கும் சீரியலைப் பார்த்து என்ன சொன்னாங்க?


மீடியா ஸ்கிரீன்ல தொடர்ந்து என் முகம் தெரிய ஆரம்பிக்கும்
போது வீட்டில் ரொம்ப சந்தோஷப்படுறாங்க.

மறக்க முடியாத பாராட்டுகள் ஏதாவது ?

மறக்க முடியாத பாராட்டுன்னா என் நண்பர் ஒருவரின் தாயார்,கணவனை இழந்தவர். அவர் சோகத்தை மறந்து " சரவணன் மீனாட்சி " சீரியலைப் பார்த்து சிரித்து மகிழ்ந்து மனதார என் நடிப்பைப் பாராட்டினார்,
அந்தப் பாராட்டு என்னால் மறக்க முடியாது.

வெள்ளித்திரையில் நடிக்க வருவீர்களா?

டி .வி ,மீடியா ஒரு உலகம், வெள்ளித்திரை ஒரு வகை  உலகம்.அதனுள் வரும் போது என் திறமைகளை முழுமையா வளர்த்துகிட்டு வருவேன். நான் "தல" ரசிகன். நடிகைன்னு பார்த்தா "திரிஷா" பிடிக்கும், திரிஷா கூட தம்பியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கூட நடிப்பேன்.

சரவணன் மீனாட்சி சீரியல் எப்ப முடியும்?

" எப்பயும் போலதான் 9 மணிக்கு முடியும்", என்று கூறி புன்னகையுடன் முடித்தார் வேட்டு...
 

ரா . நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்- N .G .மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?