Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹேய்... விஜய் டி.வி. பிரியங்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுப்பா... அதுவும் காதல் கல்யாணம்!

’’என்ன திடீர்னு யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?’’ என்று கேட்டால் வழக்கம் போல கலகலவென சிரிக்கிறார் பிரியங்கா. தமிழகத்தில் செல்ல தொகுப்பாளினி.

‘’என்ன பண்றது... டிசைன் அப்படி. மாத்த முடியலை. சில நெருங்கிய ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும்தான் தெரியும். கல்யாணத்துல கூட ரொம்ப சில விருந்தினர்கள்தான். எதுக்கு பெர்சனலான ஒரு விஷயத்தை பெரிசுபடுத்தணும்னு தோணுச்சு. மத்தபடி அதுல ரகசியம்லாம் எதுவும் இல்லை!’’

’’ரகசியம் இல்லைனுதான் சொல்வீங்க... ஆனா, காதல் கல்யாணமா இருக்கும். ஆமாதானே..!”

’’ஆமாவே ஆமாம்... விஜய் டி.வி. சீனியர் புரோக்ராம் புரொடியூஸர் பிரவீன் குமார்தான் என் கணவர். ஆரம்பத்துல எங்க ரெண்டுப் பேருக்கும் ஆகவே ஆகாது. எப்பவும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைதான். உண்மையைச் சொன்னா அந்த மனுஷன் மேல ஒரு இன்ச் ஃபீலிங்ஸ் கூட வரலை. ஆனா, திடீர்னு பெரிய ஸ்பார்க். மணி அடிச்சு பல்பெல்லாம் எரிஞ்சு ஆரம்பிச்சது. சினிமா மாதிரி மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சுடுச்சு!”

’’யார் முதல்ல ’ஐ லவ் யூ’ சொன்னாங்க?’’     

’’எனக்குதான் முதல்ல காதல் ஸ்பார்க் அடிச்சது. ஆனா, நாம எப்படி சொல்றதுனு ஒரு கெத்து காட்டணுமேனு காத்திருந்தேன். ஆனா, பார்த்தா அவரும் சொல்லலை.அப்புறம் ஒரு மாதிரி அசடு வழிஞ்சு ரெண்டு பேருமே சொல்லிக்கிட்டோம். ’உன் வீட்ல ஓ.கே சொல்வாங்களா... என் வீட்ல ஓ.கே வாங்கிடுவேன்’னுதான் பேசவே ஆரம்பிச்சோம். வீட்ல நினைச்சதைவிட கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன்தான். வெட்டுக் குத்துதான் நடக்கல. ஆனா, ஒரு வழியா சமாளிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!’’

’’காதலிச்சதே தெரியலை... அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க என்ன அவசரம்?’’

’’வீட்ல காதலுக்கு பச்சை கொடி லவ்வுக்கு பச்சைக் கொடி காட்டினதும் ஜாதகம் பார்த்தோம். பிரவீன் ஜாதகத்துல உடனே கல்யாணம் பண்ணனும்... இல்லேன்னா ஆறேழு வருஷம் தள்ளிப் போயிடும்னு இருந்துச்சு. ஆறேழு வருஷம் கழிச்சு நான் பாட்டி ஆகிடுவேன்... அவர் தாத்தா ஆகிடுவாரே!  அதான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!. ஆனா, ஒண்ணு சொல்லியே ஆகணும்ங்க... அவ்ளோ செலவு பண்ணி ட்ரெஸ்லாம் எடுத்து மேக்கப், ஹேர் ஸ்டைலிங்லாம் பண்ணிட்டு வந்தா அஞ்சு நிமிஷத்துல கல்யாணம் முடிஞ்சிருச்சு. ’அவ்வளவுதான்... கிளம்புங்க’னு சொன்னாங்க. ’அடப்பாவிகளா... இதுக்கா இவ்ளோ பில்டப்’னு தோணுச்சு!’’

’’கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?’’

“சூப்பர் குட். என் மாமியார் தங்கமானவங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் கூட பகல் 12 மணி வரை தூங்கிட்டு இருக்கேன். ஆனாலும் ரொம்பப் பாசமா எழுப்பி சாப்பாடெல்லாம் ரெடி பண்ணி வைச்சுட்டு கூப்பிடுவாங்க. அவங்க செமத்தியா சமைப்பாங்க. அவங்ககிட்ட நிறைய கத்துக்கணும். சின்னச் சின்ன விஷயம் அவங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கணும். ஜீன்ஸ் போடும்போதும் பூ வெச்சுக்க, பொட்டு வெச்சுக்கன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி விஷயங்கள் மட்டும் நான் சொல்லிக் கொடுக்கணும்!’’

’’பிரவீன் கொடுத்ததுல மறக்க முடியாத பரிசு என்ன?’’

“பிறந்த நாளுக்கு புடவை வாங்கிக் கொடுத்தார். அதுவும் ராத்திரி 12 மணிக்கு வீட்ல கொண்டு வந்து கொடுத்துட்டுப் போயிட்டாரு. அம்மாகிட்ட ஃப்ரண்ட்ஸ் கொடுத்தாங்கனு சொல்லிச் சமாளிச்சிட்டேன். எனக்கு ஆங்ரி பேர்ட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, நானே ஒரு ஆங்ரி பேர்ட்தான். அதனால ஆங்ரி பேர்ட்ஸ் கீ செயின், பென்சில், வாட்ச்னு ஏதாச்சும் கொடுத்துட்டே இருப்பார்!’’

’’நீங்க சலசலனு பேசிட்டே இருப்பீங்க. அவர் எப்படி?’’

’’நான் இவ்ளோ பேசுறேனே... சின்னதா ஒரு சிரிப்பு சிரிக்கிறாரானு பாருங்க. எதுக்கும் அலட்டிக்க மாட்டார். ஆனா, என்னை மாதிரியே கோபக்காரர். அதனால சண்டை வந்தா யார் எப்படி விட்டுக் கொடுக்கப் போறோம்னுதான் தெரியலை!’’

’’தொடர்ந்து காம்பியரிங் பண்ணுவீங்களா?’’

“அதெல்லாம் அப்படியேதான் இருக்கும். பிரியங்காவை எப்பவும் டிவில பார்க்கலாம்!”

- ஷாலினி நியூட்டன்

 

பிரபலங்கள் கலந்துகொண்ட பிரியங்கா திருமண நிகழ்ச்சி ஆல்பத்திற்கு: http://bit.ly/1n4hNFA

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்