Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பெப்சி உமாதான் பெஸ்ட் விஜே’ - கொண்டாடும் ‘பாலிமர்’ ரஞ்சித்!

த்தனையோ ஜாம்பாவான்களான சேனல்கள் தமிழ்ல இருக்கு .. நான் வேலை செய்யற பாலிமர் சேனலுக்கு சிறந்த நியூஸ் சேனலுக்கான விருது குடுத்த விகடனுக்கு முதல் நன்றி... அப்படியே சிறந்த நியூஸ் ரீடர் விருதும் சேர்த்துக்கங்களேன்... கொஞ்சம் பொறுப்பான ஆளாகவே பேசுகிறார் ரஞ்சித்!

உங்களப் பத்தி சொல்லுங்களேன்!

”2002ல பி.ஏ. ஆங்கிலம் முடிச்சேன்.... எல்லார் மாதிரியும் ஒரு கேள்வி என்ன பண்ணப் போறோம்னு. எனக்கு வாய்ஸ் நல்லா இருக்கும். அதனால ஆர்ஜே அல்லது விஜே அப்படின்னு முடிவு பண்ணேன். அப்பதான் என் தமிழ் மேல ஒரு நம்பிக்கை வந்து நியூஸ் ரீடர் ஏன் ஆகக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரு கேள்வி. ஏழு வருஷம் முயற்சி. அப்பறம் சன் டிவியில வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட். அப்பறம் எனக்கு நியூஸ் ரீடிங் சான்ஸ் தானா அமைஞ்சது. அங்கையே நியூஸ் ரீடரா வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அப்பறம் பாலிமர் வாய்ப்பு. ஒரு நாலு வருஷமா பாலிமர்ல லைஃப் போயிட்டு இருக்கு.ரொம்ப நல்லா இருக்கு பாலிமர்லம் ரொம்ப குறுகிய காலத்துல பெரிய அளவுல ரீச்.. எல்லா கிட்டயும் பாராட்டுகள். அப்பறம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் மனைவி பேரு பிரியா.. அவங்க தான் என் உலகம்!”

ஆங்கிலம் படிச்சிட்டு தமிழ் நியூஸ் ரீடரா?

”எனக்கு தமிழ் , ஆங்கிலம் ரெண்டுமே ஒண்ணுதான். அதே சமயம் ரெண்டுலயும் உச்சரிப்புல ரொம்ப கறாரா இருப்பேன்!”

விஜே டூ நியூஸ் ரீடரா என்ன சவால்னு நினைக்கிறீங்க?

”விஜே மட்டுமில்ல ஆர்ஜே’வும் சேர்த்துக்கலாம். அவங்களுக்கு குரல் சரியில்ல, ஏதோ ஜலதோஷம், தொண்டை கட்டிக்கிச்சு அப்படின்னா அப்படியே, ‘சாரி ஃப்ரண்ட்ஸ் எனக்கு குரல் கொஞ்சம் பிரச்னை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு ஜாலியா செரிமிகிட்டே பேசலாம். ஆனால் நியூஸ் ரீடிங்ல அப்படி இல்ல. கட்டாயம் லீவுதான் போடணும். இன்னும் சொன்னா நமக்கு கிடைச்ச ஒரு நாளை நம்ம இழந்துடுவோம். அதே சமயம் விஜேக்கள ஈஸியா ரீச் பண்ணி ஹாய் ஹவ் ஆர் யூ சொல்லிடுவாங்க ஆனா நியூஸ் ரீடர்ஸ மக்கள் சந்திக்கிற விதம் ஒரு மதிப்போட இருக்கும்!”

நியூஸ் தாண்டி டிவி நிகழ்ச்சிகள் பார்க்கறதுண்டா?

”கண்டிப்பா....ஆனா கொஞ்ச நாளா நம்ம எல்லாரும் மீடியாப் பசிங்கற நோய்க்கு ஆளாகிட்டோமோன்னு ஒரு பயம் வந்துடுச்சு. என்னையும் சேர்த்து தான் சொல்றேன்... எல்லாத்தையும் நியூஸ், எதுக்கெடுத்தாலும் நியூஸ் ஏன் ரியாலிட்டி ஷோக்கள எடுத்துக்கங்க கால்ல விழுந்து, அழுது, சீன் கிரியேட் பண்ணி எல்லாரும் மறைமுகமா மக்களோட உணர்வுகளோட விளையாடிட்டு இருக்கமோன்னு தோணுது. அதக் குறைக்கணும்.!”

பிடிச்ச ஹீரோயின்?

”சிம்ரன், அப்பறம் நஸ்ரியா... ஆனா இப்போ பிரியா... அப்படி ஒரு ஹீரோயினான்னு ஆச்சர்யப்படாதிங்க. அவங்க என் மனைவி. என் ஹீரோயின் இப்போ அவங்க தான்!” நியூஸ் ரீடரா பிடிச்ச விஜே யாரு? முதல்ல பெப்ஸி உமா.. இப்ப இருக்க எல்லாருக்கும் அவங்க தான் முன்னோடி செம விஜேங்க. அப்பறம் டிடி,ஷோவுல என்ன நடந்தாலும் பிரச்னைன்னாலும் செம அழகா மெயிண்டெயின் பண்ணுவாங்க. அப்பறம் ரியோ செம ஜாலியா பேசியே காலர மனசுக்கு நெருக்கமா மாத்திடுவாரு. அவர பிடிக்கும்!"

  நியூஸ் ரீடரா நீங்க பாத்து வியந்த ரீடர் யாரு?

"தூர்தர்ஷன் ஷோபனாவ மறக்க முடியுமா... ஒரு கலர்ஃபுல் ஜுவல்ஸ், சேலை, ஒரு பில்டப் எதும் கிடையாது, ஏன் நம்ம வீடுகள்ல அப்போ பிளாக்&ஒயிட் டிவி தான் அதுலயே அவங்க செம கெத்து காட்டுவாங்க. ஊரே அவங்கள பார்க்கறதுக்காக நியூஸ் பார்த்த காலம் அது. ஆனால் முக்கியமான விஷயம் அவங்களோட வார்த்தை உச்சரிப்பு அவ்ளோ நல்லா இருக்கும்!"

நியூஸ் ரீடரா உங்களுக்கு கிடைச்ச வெகுமதி என்ன?

"என் நம்பர்லாம் வாங்கி என் கிட்ட கால் பண்ணியே பாராட்டுவாங்க. நானே இப்போ வரைக்கும் ஆச்சர்யமா நினைக்கறது சேலத்துலருந்து ஒரு தம்பதி சென்னை வந்து ரெண்டே கால் சவரன்ல ஒரு தங்க செயின் குடுத்துட்டு போனாங்க. நான் வேண்டாம்னு சொல்லியும் ரெண்டு பேரும் வற்புறுத்தி குடுத்துட்டு போனாங்க. என் ஃப்ரண்ட்ஸ் லாம் கூட இப்பவும் என்ன கலாய்ப்பாங்க இந்த செயின் வெச்சுகிட்டு...ஆனால் அப்படி ஒரு பரிசு குடுத்து என்ன பாராட்டும் போது எனக்கு எவ்ளோ பொறுப்பு இருக்குன்னு உணர்ந்தேன். அத காப்பாத்தணும்!"

-ஷாலினி நியூட்டன் -

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்