பிஆர்ஓ தொழிலில் போட்டி இருக்கலாம் குரோதம் வேண்டாமே! - நிகில்முருகன் வருத்தம்

மக்கள் தொடர்பாளர் ஃப்லிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு தன் இரங்கல் தெரிவித்தார் பிஆர்ஓ நிகில் முருகன். தொடர்ந்து அவர் பேசியதாவது,“சில வருஷங்களுக்கு முன்னாடி நான் பிஆர்ஓ சினி நியூஸ் செல்வம்கிட்ட அசிஸ்டண்டா வேலை பாத்துட்டு இருந்தேன்.அப்ப ஒரு பிரஸ் மீட் சமயத்துல எனக்குப் பின் வரிசையில உட்கார்ந்திருந்த ஆனந்தன் சார் “இவன் கூடிய சீக்கிரம் பெரிய ஆளா வருவான்”னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இன்னைக்கு பிஆர்ஓவா நின்னு இருக்கேன்.’’தன் நினைவுகளைப் பகிரும்  நிகில் தொடர்ந்து பேசும் போது,

“தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ ஃபிலிம் நீயூஸ் ஆனந்தன் அவர்கள் தான். சினிமா சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் புகைப்படங்களையும் பாதுகாத்து வைக்கும் விக்கிபீடியா என்று தான் இவரை சொல்ல வேண்டும். பிஆர்ஓ என்கிற தொழிலை தன்னோடு நிறுத்தி விடாமல் அதை எல்லோருக்கும் பரவச் செய்தவர் இவர்.
நம் குடும்ப புகைப்படங்களைக் கூட தவறவிடும் பலருக்கு மத்தியில் பல ஆண்டுகளுக்கான சினிமா தகவல்களை பொக்கிஷமாக பாதுகாத்த பெருமை இவருக்கு உண்டு. இதற்காக அவர் பலருடைய எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார்.இன்றைக்கு சினிமா துறையில் எண்ணற்ற பிஆர்ஓக்கள்  இந்த தொழிலில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என்றால் அதற்கு முன்னோடி இவர் தான்.எதையுமே ஆவணப்படுத்தனும் என்கிற விஷயத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் இவர்தான்.

சாகுறதுக்காக விக்குற விஷ பாட்டில்ல கூட எக்ஸ்பைரி டேட் போட்டிருப்பாங்க. அதனால எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பயனில்லாம தான் போகும்.
எந்த தொழிலா இருந்தாலும் சரி..அதுல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது.தன்னோடு இந்த தொழில் நின்று விடாமல் அடுத்தவரையும் வாழ வைத்த இவரின் இழப்பு எங்கள் எல்லோருக்குமே பேரிழப்பு தான்’’என்றார் வருத்தங்களுடன்.

- பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!