‘குக்கூ’ வெற்றிக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து வருகிறார் ராஜூமுருகன். ஜோக்கர்.
உங்கள் கேள்விகளுக்கு போகும் முன் ‘ஜோக்கர்’ படம் பற்றி மனம் திறக்கிறார்..
’நம்மளைப் பொறுத்தவரைக்கும் ஒரு கட்சியோட ஒரு தலைவனோட ஒரு சித்தாந்தத்தோட சம்பந்தப்படுத்திப் பேசறதுதான் அரசியல்னு ஒரு கண்ணோட்டம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை, சக மனிதனுக்காக குரல் கொடுக்கற எல்லாமே அரசியல்தான். அரிசி, ரேஷன்னு எல்லாத்துக்குமே அரசியலோ தொடர்பு இருக்கு. அப்படிப் பார்க்கறப்ப, ஆமாம்.. இது அரசியல் படம்தான்.
நவீன இந்தியாவோட குறுக்குவெட்டுத் தோற்றத்தை சொல்ல முயற்சித்திருக்கேன். எப்படின்னா, கைல ஸ்மார்ட் ஃபோன் இருக்கும். ஆனா கழிப்பிடம் இருக்காது. உலகமயமாக்கல் கொடுத்த பரிசு இதுதான். இதத்தான் வளர்ச்சின்னு கொண்டாடிட்டு இருக்கோம்.
இன்னொரு பக்கம், சோஷியல் மீடியா ஏற்படுத்திருக்கற தாக்கம். ஒரு எளிய மனிதன், அவன் தெருவுல நடக்கற அநீதியை வெளியிட முடியுது. அப்படியான ஒரு குரல்தான் இந்த ‘ஜோக்கரோ’ட குரல். இன்னைக்கு நாட்ல எல்லாமே காமெடியாத்தானே பார்க்கப்படுது.. இந்தப் படமும் அப்படித்தான். படம் முழுக்க சிரிக்க வைக்கற ஜோக்கர், கடைசியா ஒரு கேள்வியை உங்கமுன்னாடி வைக்கறான். அந்தக் கேள்விதான் இந்தப் படம்.
ஆரண்யகாண்டம் ஜமீன்தார், ஜிகிர்தண்டா ‘கோச்’னு ஸ்கோர் பண்ணின சோமசுந்தரம் இதுல பண்ணிருக்கறது வேற லெவல். மன்னர் மன்னனா, அவரோட கேரக்டர் நிச்சயம் அவருக்கான ரூட்டா இருக்கும்.
இனி... ட்விட்டரில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்.. ராஜு முருகனின் பதில்களும்..
@thoatta
அப்படி இல்ல. அடிப்படைல அந்த உணர்வுகள் இருந்தாலும் ஜனங்களுக்கான அரசியலைப் பேசும். எல்லா ஜானரும் எடுக்கணும்னு ஆசை. எதுவானாலும், நல்ல சினிமா எடுக்கணும்!
இந்தப் படம் முழுமையான அரசியல் படம். ஆனா நான் திரும்பத் திரும்ப சொல்றதுதான்.. அரசியல்ங்கறது என்னாங்கறதுதான். ஜோக்கர், ஜனங்களுக்கான அரசியல் படம்.
ஆமா. ஷங்கர்தான் ‘அதைவிட அழுத்தமான படமா பண்ணுங்க’ன்னதால ஏழு வருஷமா பண்ணி வெச்சிருந்த குக்கூவ பண்ணினேன். ஷங்கர் சார்கிட்ட சொன்னது ஆட்டோகிராஃப் ஸ்டைலிலான காதல் படம். அதுனால அதை எடுக்கறதுக்கு விருப்பம் இல்லை.
சிவசு சித்தப்பா நலம். ராஜா சார் என் படத்துக்கு பண்ண, நான் தயாராத்தான் இருக்கேன். ஆனா பக்கத்துல போகத்தான் பயமா இருக்கு. நிச்சயமா, சார் தேவைப்படற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணிட்டு அவர்கிட்ட போவேன்.
ராஜா சார் பாட்டு, இப்பன்னு இல்ல எப்ப வேணா கேட்டுட்டே இருக்கத்தான் தோணும். இப்ப ரெண்டு நாளா ‘எச்சில் இரவுகள்’ படத்துல வர்ற ‘பூமேலே வீசும் பூங்காற்றே’ பாட்டையும், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துல வர்ற ‘உறவெனும் புதிய வானிலே’ங்கற பாட்டையும் திரும்பத்திரும்பக் கேட்டுட்டே இருக்கேன்.
அப்பப்ப, மனநிலை சார்ந்து எதாச்சும் பாட்டு இப்படி மனசுல உட்காரும், இப்ப இந்த ரெண்டு.
வண்ணதாசன் கதைன்னா நெறைய இருக்கு. டக்னு மனசுல தோணறது ‘கிருஷ்ணன் வைத்த வீடு’. படிக்கலைன்னா, தேடிப் படிங்க.
முதல் விஷயம். வட்டியும் முதலும் தொடரை, கதாபாத்திரங்கள் சம்பவங்கள்னு எல்லாத்தையும் இன்னமும் ஞாபகம் வெச்சிருக்கறதுக்கு நன்றி. மக்கள்கிட்ட இருந்து எடுத்து, எழுதி மக்களுக்கே குடுத்த விஷயம் அது. இன்னமும் எழுத முடியும்னு எனக்கு நம்பிக்கை குடுத்த விஷயம். இதையெல்லாம் எழுத முடியுமான்னு யோசிக்காம எழுத வெச்சது.
அப்பறம் தொடர்ந்து உறவுகள் மேலயும் பிரிவுகள் மேலயும் நமக்கு இருக்கக்கூடிய இம்சை, பரவசம்னு எதோ ஒரு விதத்துல அந்தத் தொடர் உங்களுக்குக் குடுத்திருக்குன்னு நம்பறேன்.
சந்தோஷ் நாராயணன் எப்பவும் நான் கூப்டா வர்ற நட்புலதான் இருக்கேன். கண்டிப்பா மறுபடியும் அவர்கூட சேருவேன்.
பாரதி பிரபு எழுதிய நவீன இந்தியாவின் தந்தைங்கற அம்பேத்கர் பத்தின புத்தகம்.
அடிப்படையான புரிதல் வேணும். கலை சார்ந்துன்னு இல்லாம யாரா இருந்தாலும், புரிதலோட இருக்கற துணை இருக்கணும். மத்தபடி இதப்பத்தி சொல்ல எனக்கென்ன அனுபவம் இருக்கு!
முதல் குக்கூ ஸ்கிரிப்ட்ல க்ளைமாக்ஸ்ல அவங்க சேர்றது இல்ல. அவன் போய் அஞ்சாம் நம்பர் படிக்கட்டுல தட்டிகிட்டே நிக்கறதுல படம் முடிஞ்சு அவன் தட்டிகிட்டே இருக்கற சத்தம் ஓவர்லாப்ல வர.. படம் முடியும். அப்பறம் அதைப் படிச்ச எல்லாருமே, கதை நாயகர்கள் இரண்டு பேருமே விழிச்சவால் உள்ளவர்கள். அவங்க சேர்ற மாதிரி முடிச்சா ஒரு நம்பிக்கை ஒளியைக் கொடுக்கும்னு ஃபீல் பண்ணினாங்க. அதுதான் சரின்னு பட்டுச்சு.
முழு வீடியோ பேட்டிக்கு..