Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”தலதளபதி ரசிகர்களை பகைச்சுக்க முடியாதே” ஆதித்யா சேனல் டி.எஸ்.கே ஜாலி பேட்டி!

தலதளபதி நிகழ்ச்சியில் கெத்து, எந்த வாய்ஸும் வரும்  என மிமிக்ரியில் அசால்ட்  காட்டும் ஆதித்யா சேனலின் டிஎஸ்.கே சரவணனுக்கு குட்டீஸ் ரசிகர்கள் அதிகம்.

என்ன பாஸ் உங்கள பல வருஷமா நாங்க டிவிகள்ல பாக்குறோமே,

"ஆமா பத்துவருஷமாச்சு மீடியாக்குள்ள வந்து , சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில 16 வயசுலயே மிம்க்ரி பண்ண ஆரம்பிச்சு ரெண்டு எபிசோட்ல அசத்தல் மன்னன் அவார்டு வேற கிடைச்சது. அப்பறம் விஜய் டிவி அது இது எதுல சிரிச்சாப் போச்சு ரவுண்ட்ல அப்பப்போ வந்தேன்,. கலைஞர் டிவி, சில லோக்கல் சேனல் இப்படி எல்லா டிவிகள்லயும் தலையக் காமிச்சாச்சு. அப்பறம் தான் டவுட்டு செந்திலோட சேர்ந்து சின்னவனே பெரியவனே நிகழ்ச்சி ரெண்டரை வருஷம் பண்ணேன். இப்போ தலதளபதி ஷோ”

திடீர்னு சினிமாவுல தலை காட்டினீங்களே?

“ ஆமாம் இதெல்லாமே சினிமாக்குள்ள வர்றதுக்குத்தானே, மகான் கணக்கு படம் மூலமா தான் சினிமா என்ட்ரீ. அப்பறம் யமுனா, காவல், வாராயோ வெண்ணிலா படங்கள்னு இதெல்லாம் தாண்டி புறம்போக்கு அந்தப் படத்தால நல்ல பேரு கிடைச்சது. இந்த வருஷம் கூட ரெண்டு படங்கள் இருக்கு..பார்க்கலாம்”

இசை ஆர்வம் உங்களுக்கு அதிகமோ?

“ ஆமாங்க நிறைய ஆல்பம் ரிலீஸ் பண்ணணும். நானே பாடி சில பாட்டுகள் யூடியூப்ல ரிலீஸ் ஆகியிருக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்கு. எனக்கு பிரச்னைனு ஒரு ஆல்பம் அதுல ரியோ நடிச்சிருக்காரு,. அந்த ஆல்பத்த சிவகார்த்திகேயன் சாரும், விஜய் சேதுபதி சாரும் சேர்ந்து ரிலீஸ் பண்ணாங்க. ரெண்டு பேரும் நல்ல வெல்விஷர். அப்பறம் சிவகார்த்திகேயனுக்காக எங்கள் வீட்டுப் பிள்ளைனு ஒரு பாட்டு ரிலீஸ் பண்ணி செம ரீச். இன்னும் நிறைய பாட்டு, ஆல்பம் ரிலீஸ் பண்ணணும்”

முறைப்படி இசை கத்துக்கிட்டீங்களா?

“அதெல்லாம் இல்ல ஆனா சின்ன வயசுல ஆர்வம் இருந்துச்சு வீட்ல வழக்கம் போல ஒழுங்காப் படிடான்னு திட்டி அடக்கிட்டாங்க”

என்ன படிச்சிருக்கீங்க?

” நான் திருச்சிக்காரன், படிச்சது எம்.பி.ஏ. என் லைஃப்ல மறக்க முடியாத விஷயம் அப்துல்கலாம் சார் எங்க ஸ்கூலுக்கு வந்தாரு. அப்போ நான் என்.சி.சில அவருக்கு பாதுகாப்பா நின்னேன்.அவருக்குப் பாதுகாப்பா நிக்க வேண்டிய நானே அவர பார்த்த உடனே எக்ஸைட் ஆகி கையெல்லாம் குடுத்து பேசிட்டேன், எங்க என்.சி.சி. சார் செம திட்டு. ஆனால் செம லக்கு அவரு கிட்ட பேசியிருக்கேன். இருந்தாலும் நீங்களே சொல்லுங்க அவர பார்த்துட்டு  சும்மா இருக்க முடியுமா? (சத்தியமா முடியாது பாஸ்)

உங்க மிமிக்ரிக்குக் கிடைச்ச சர்ப்ரைஸ் பாராட்டு எது?

“ விஜய் சேதுபதி சாரோட வாய்ஸ் நான் தான் முதல் முதல்ல பேசி எல்லார் கிட்டயும் பாராட்டுகள் கிடைச்சது. ஒரு நாள் அவருகிட்டயே போன்ல பேசி பாராட்டு வாங்கினேன். அவரு நல்ல வெல்விஷர் எனக்கு”

டைனோசருக்கே உப்புமா குடுத்து அலப்பற குடுத்தீங்களே பாஸ்? 

“ ஆமாங்க குழந்தைகள்லாம் எங்க போனாலும் உப்புமா அங்கிள்னு கூப்பிடுறாங்க, அந்தப் பொண்ண அப்பட்டமா உப்புமானே கூப்ட ஆரம்பிச்சுட்டாங்க, சும்மா பாடுங்க ஜி நிகழ்ச்சி அது செம ஜாலி ஷோ. இப்போ தலதளபதி நிகழ்ச்சினு ஆதித்யா சேனல் மூலமா நல்ல அங்கீகாரம் கிடைச்சுருக்கு”.

மீடியா என்ன சொல்லிக்குடுத்துருக்கு?

“லிமிட்டா பேசணும், ஸ்க்ரீன் முன்னாடி ஜாலியா என்ன வேணும்னாலும் பேசலாம், ஆனால் தேவையில்லாத இடத்துல தேவையில்லாம வாய் விட்டா பிரச்னை தான். அததான் முதல்ல கத்துக்கிட்டேன், ஃபாலோ பண்றேன்”

இந்தக் காலாகாலத்துல நடக்க வேண்டிய விஷயம் எப்போ ?

“ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறேன். அவங்க மீடியாவுக்கு சம்மந்தமே இல்லாதவங்க. அவங்க வீட்ல செம பிரச்னை. ஒரு 10 பேரு நம்மள தேடுவாய்ங்க மொமெண்ட் தான். கொஞ்சம் இறங்கி வரணும்னு நினைக்கிறேன்... ரொம்ப கோபமா இருக்காங்க அந்தப் பொண்ணு வீட்ல, பார்க்கலாம், ஆனா அவங்க மனச கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கோம்”...

தலதளபதி ங்கிற இந்தப் பேருக்கே பஞ்சாயத்து வந்துருக்கணுமே?

” தினமும் ஏழு மணிக்கு அந்த நிகழ்ச்சி வருது, முதல்ல வைக்கும் போது நீங்கள்லாம் தலதளபதியா’னு செம கலாய் அப்பறம் இவிய்ங்க என்னா கலாய்ச்சாலும் அடங்க மாட்றானுங்கன்னு ஒரு ஸ்டேஜ்ல ரசிகர்கள் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்ன சில நேரத்துல மிமிக்ரி பண்ணச்  சொல்லி கேப்பாங்க, நாமளும் எந்த வாய்ஸ்னாலும் கேளுங்கன்னு சொல்லிட்டு கெத்தா நின்னா, எங்க பாகவதர் மாதிரி பேசுங்க, ஒபாமா மாதிரி பேசுங்கன்னு கோர்த்துவிடுவாங்க பாருங்க, ஆனாலும் என்ன பண்ண?   தலதளபதி ரசிகர்களாச்சே நேரடியா கால்ல விழுந்துடுவோம், நாங்க உங்க வீட்டுப் பிள்ளைங்ணா ரேஞ்சுக்கு , அவங்கள பகைச்சுக்க முடியாதே. ஆனா அந்தப் பேருதான் ஒரு பெரியக் கூட்டத்த உருவாக்கியிருக்கு”

தலதளபதி ரெண்டு பேர்ல யார பிடிக்கும்?

“ அய்யோ! என்ன விட்ருங்க பாஸ்.... ரெண்டு பேரும் இல்லாம தமிழ் சினிமாவை யோசிக்க முடியுமா சொல்லுங்க... அப்படி தான் என்னாலயும் ரெண்டு பேரையும் விட்டுக்கொடுக்க முடியாது..மாஸ் ஆஃப் தமிழ் சினிமா அவங்க தான..அப்பாடா எஸ்கேப்!”..

 - ஷாலினி நியூட்டன் -

 தலயா? தளபதியா ? யாரு மாஸ் - சித்தார்த் பதில் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்