Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் ஹீரோ, கமல் வில்லன் உருவாகும் புது திரைக்கதை - தெறி பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பேட்டி!

தோட்டா தெறிக்க தெறிக்க... வேட்டா வெடிக்க வெடிக்க... பாட்டா படிக்க படிக்க... வாரான் புழுதி பறக்க... 
தீ தான் பறக்க பறக்க... போர் தான் நடக்க நடக்க... எவன் தான் எதுக்க எதுக்க.... இவன் தான் தெற்ற்ற்றிறிறிறிறி.....

பாட்டு செமயா இருக்கே, யாரென்று தேடிப்பிடித்தோம். டப் தெறி ஸ்டெப் பாடலை எழுதி, பாடவும் செய்திருக்கிறார் அருண்காமராஜ். “ராஜாராணி” படத்தில் ஆர்யாவிற்கு நண்பராக கருப்பா ஒருத்தர் வருவாரே அவரே... நடிகராக நமக்கு பரிச்சயமான இவர், ஒரு பாடலாசிரியர், பாடகர், எதிர்கால இயக்குநர்.

விஜய் - தெறி - அட்லி  இவர்களுடனான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அருண்காமராஜ்.

பாட்டு செம.. எழுதுறதுக்கு எவ்வளவு நாள் எடுத்துக்கிட்டீங்க?

“ஜி.வி.பிரகாஷ் கூப்பிட்டு, ஒரு ராப் பாடல் விஜய்க்கு பண்ணணும்னு சொன்னார். அதுக்கான மியூசிக்க கேட்டுட்டே இருந்தேன், பத்தே நிமிசத்துல எழுதிக் கொடுத்துட்டேன். தெறி படத்தில் எனக்கான வேலையை வெறும் 15 நிமிடத்துல முடிச்சிட்டேன்னே சொல்லலாம்”.

அட்லிக்கும் உங்களுக்குமான நட்பு எப்படி உருவானது?


“நானும் சிவகார்த்திகேயனும் நண்பர்கள். அட்லி இயக்கத்துல சிவகார்த்திகேயன் நடிச்ச குறும்படம் “முகப்புத்தகம்” நினைவிருக்கா, அந்த நேரத்துல இருந்தே அட்லியோட நல்ல நட்பு ஆரம்பிச்சிடுச்சி. என்ன பண்றோம்னு தெரிஞ்சி பண்ணுறவர் தான் அட்லி. பெரிய இடத்துக்குப் போறோம்னு டீம விட்டுக் குடுக்கவும் மாட்டாரு. நாம ஒரு விஷயத்த செஞ்சிட்டு, அது இவ்வளவு பெரிய வெற்றியடையும்னு யோசிச்சே பார்க்கலனு சொல்லுவோம், ஆனா அவரு செய்யும்போது, அதற்கான ரீச் எப்படி இருக்கும்னு
தெரிஞ்சி தான் கிரியேட்டே பண்ணுவார். அதான் அட்லியோட ப்ளஸ்.”.

விஜய் “டப் தெறி ஸ்டெப்” பாடலுக்கு என்ன சொன்னார்?

“அவர முதல் முறையா பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். ஒரு ரசிகனா விஜய் படத்த முதல் நாளே பார்த்து ரசிச்ச நானே அவர் படத்துக்கு, அதுவும் அவருக்கே பாடல் எழுதுனதே சந்தோஷமான விஷயம். பாட்ட கேட்டதும் “பாடல் வரிகள் சூப்பரா இருக்கு”னு சொன்னது எனக்கு டபுள் சந்தோஷம். 

ராஜாராணி படத்துல ஏன் அப்டி கத்துறீங்க..

“படத்துக்காக மட்டுமில்ல, நான் எப்போதுமே இப்படிதான் பாஸ். ரூம்ல இருக்கும் போது, காலைல தூங்கி எந்திரிச்சதுமே அப்டி தான் கத்துவேன். என் ப்ரெண்ட் பக்கத்து ரூம்ல இருந்துட்டு, அவனும் பதிலுக்கு கத்துவான். அதுவந்து குட்மார்னிங் சொல்லுறது மாதிரி. நைட்டு தனியா இருந்தாலும் இப்படித்தான் கத்திகிட்டே இருப்போம். இத அட்லி பார்த்துட்டு, உடனே ராஜாராணில யூஸ் பண்ணலாம்னு சென்னார். இந்த கோமாளி வேலையெல்லாம் நீ பண்ணாதான் சரியா இருக்கும்னு என்னையே நடிக்கவும் வச்சிட்டார்.

உங்க வாழ்நாள் லட்சியம் என்ன பாஸ்?

“பட இயக்குநராகணும் அதான் என் லட்சியமே. மக்கள மகிழ்விக்கணும் அப்டியொரு கதைய ரெடிபண்ணிட்டே இருக்கேன். ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, விஜய்சார் ஹீரோவா நடிக்க கமல்சார் வில்லனா பண்ணனும், அப்டியொரு கதை யோசிச்சிருக்கேன். அந்த கதையோட ரெண்டுபேரயும் மீட்பண்ணா நிச்சயம் என்ன தொறத்திவிட்டுருவாங்க. முதல்ல நல்ல இயக்குநர்னு பெயர் எடுக்கணும். அப்றம் ரெண்டுபேரயும் மீட் பண்றேன், படத்தையும் எடுக்குறேன்”.

தொடர்ந்து  நடிச்சிட்டு இருக்கீங்களா?

பென்சில், காத்திருப்போர் பட்டியல், யானும் தீயவன் அப்புறம் சிவகார்த்திகேயனோட ரெமோ படத்துல ஒரு குட்டி சீன்ல நடிச்சிருக்கேன்.

வேட்டைமன்னன் படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சிருக்கீங்க, எப்போதான் ரிலீஸாகும்?

வேட்டை மன்னன் படம் 60% பட வேலைகள் முடிஞ்சிடுச்சி. ஆரம்பத்துல சிம்புக்கும் நயன் தாராவுக்கும் பிரச்னை இருந்துச்சி, அடுத்து இதுநம்ம ஆளு படம் நடிக்கலையா அது  மாதிரி சீக்கிரமே சிம்புவும், ஹன்சிகாவும் இந்த படத்தை சேர்ந்து முடிச்சி கொடுப்பாங்க, அப்டி நடந்தா சீக்கிரமே வேட்டைமன்னன் ஆன் தி வே தான். படம் ரிலீஸான நிச்சயம் ஹிட் அடிக்கும் பாஸ்.

பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்