“பூவே உனக்காக படத்தை கமலா தியேட்டர்ல 21 முறை பார்த்தேன். படமே 275 நாள் ஓடுன நேரம், விஜய்க்காக படம் பார்க்குறதுக்காக டிக்கெட் எடுக்காம நேர தியேட்டருக்குப் போய்டுவேன்” ஷோபா ஆச்சரியத்துடன் தன் மகன் விஜய்யை பற்றியும், கணவர் எஸ்.ஏ.சந்திர சேகர் பற்றியும் புதுப்புது சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்ட விடியோ பேட்டி ஒன்று இணையத்தில் பரவுகிறது. அதில் சில கேள்விகளும் விடைகளும்.
50 படங்களுக்கு மேல் ஸ்கிரிப்ட் செய்திருக்கீங்க! எப்படி வந்தது இந்த ஆர்வம்?
எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லா மொழிகளிலும் படம் பண்ணும்போதும், அவர் கூடவே இருந்தேன், அதுமட்டுமில்லாம ஒரு நாள் நான் சென்னையில இருந்தா கூட அடுத்த நாள் போன் பண்ணி கிளம்பி வாம்மானு சொல்லுவாரு, நானும் இட்லி, மிளகா பொடியலாம் எடுத்துட்டுப் போய்டுவேன். அவரோட இருந்தே ஸ்கிரிப்ட் எழுதுற ஆரவம் அதிகமாயிடுச்சி.
விஜய்யோட எல்லா படங்களுமே சூப்பர் தான். ஆனா விஜய்னு சொன்னதும் உங்களுக்கு பிடிச்ச மூணு படங்கள்?
ஆக்ஷன்லருந்து பேமிலி ஹீரோவா விஜய்ய மாற்றுனது பூவே உனக்காக தான். ஜோதிகா, விஜய் ஜோடி, படத்தோட பாடல்கள்னு குஷி கடைசியா துப்பாக்கி இந்த மூணு படம் தான் என் பேவரைட்.
விஜய் எப்போதுமே அமைதியா இருக்கக் காரணம் ?
சின்ன வயசுல ரொம்ப கலகலப்பாக தான் இருந்தார். அவரோட சகோதரி இறந்ததுக்குப் பிறகு ரொம்ப அமைதியாகிட்டாரு.
விஜய்யிடம் நீங்க பார்த்த முதல் திறமை எது? பாடகரா, நடிகரா அல்லது வேறு ஏதும்?
அண்ணாமலை படத்துல இருந்து ஒரு சீன் எடுத்து நடிச்சு காட்டுனாரு, நடிப்பு தான் அவரோட முதல் திறமை. அதுக்கு அப்புறம் தேவா சார் தான் விஜய்ய பாட வச்சாரு.
அஜித் படங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச படம்?
வாலி, ஆசை, காதல்கோட்டை உள்ளிட்ட படங்கள் தான் ரொம்பப் பிடிக்கும்.
அஜித்தை உங்கள் மகனுக்குப் போட்டியாகப் பார்க்கிறீர்களா?
அப்படியெல்லாம் கிடையாது, அஜித்துக்கு குழந்தை பிறந்தபோதுகூட போய்ப் பார்த்துட்டு தான் வந்தோம்.
விஜய்க்கு சரியான ஜோடி யார்னு நினைக்கிறீங்க?
சிம்ரன் தான். பிரியமானவளே, ஒன்ஸ்மோர் ரெண்டு படமுமே நல்லா இருக்கும்.
முழுமையான வீடியோவிற்கு: