Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? முதன்முறையாக ராஜமௌலி பதில்!

சிறந்த படம், சிறந்த விஷுவல் என இரு தேசியவிருதுகளை ஜெயித்த படம் பாகுபலி....இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் ராஜமௌலி பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திற்குக் கொடுத்த ஆங்கில பேட்டியின் தமிழாக்கம்...

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த உங்களது மனநிலை எப்படி இருக்கிறது?

“ எனக்கு பறக்கணும் போல இருக்கு...நான் வெற்றிபெறும்னு நினைச்சேன். ஆனால் அதையும் தாண்டி என்னென்னமோ சாதனையெல்லாம் படைச்சிருச்சு. என் வாழ்க்கைல பிரிக்க முடியாத விஷயம் பாகுபலி!”

பாகுபலி உருவாக்கத்தின் போது எப்படிப்பட்ட சவால்களை சந்தித்தீர்கள்?

“ நிறைய சவால்கள்.... 380 நாட்கள் படப்பிடிப்பு அதுவே பெரிய சவால். நாட்கள் ஆக ஆக டீமோட எனர்ஜி கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிச்சு.. அந்த எனர்ஜிய திரும்பத் திரும்ப பம்ப் பண்றதுதான் ஒரு இயக்குநரா ரொம்பப் பெரிய சவாலா இருந்துச்சு.. நானே ஒரு கட்டத்துல சோர்ந்துட்டேன். இன்னும் சொல்லணும்னா நான் முழு எனர்ஜியோட இருக்கற மாதிரி நடிக்க வேண்டி இருந்துச்சு!”

உங்க அப்பா தான் இந்தப் படத்தோட கதைய உருவாக்கினார். அவர் கிட்ட இந்தக் கதைக்கு உங்க இன்ஸ்பிரேஷன் என்னன்னு கேட்ருக்கீங்களா ?

“ உண்மையாவே எனக்கு தெரியலை, எந்த இன்ஸ்பிரேஷன் அவர இத எழுத வெச்சிதுன்னு தெரியல... அனேகமா நான் தான் அவரோட இன்ஸ்பிரேஷன்னு நினைக்கிறேன். என்னோட டைரக்‌ஷன் மேல அவருக்கு இருந்த நம்பிக்கை தான் இன்ஸ்பிரேஷன் நினைக்கிறேன்... என்னோட டைரக்‌ஷன் டேலண்டுக்கு அவர் வெச்ச சவாலா தான் இந்தக் கதைய நான் பார்க்கறேன்!”(கண்ணடிக்கிறார்)..

நினைச்சுப் பார்க்க முடியாத அளவு மொழிகளையெல்லாம் கடந்து சாதிச்சிருக்கு பாகுபலி, உங்க எண்ணங்கள் எப்படி இருக்கு?

“ சின்ன வயசுலருந்து சில ஐடியாக்கள நாமலும் யோசிப்போம்... ஆனா அத அப்படியே விடாம அதே ஐடியாவ இதயப்பூர்வமா முழுமனசோட செஞ்சா இங்க மொழிகள், கலாச்சாரம்லாம் ஒரு விஷயமாவே இல்லாமல் சாதனை படைக்கும். அடிப்படை மனித உணர்வுகளோட எந்த விஷயத்தையும் செய்யணும். அப்படித் தான் நான் செஞ்சேன் பாகுபலி ஹிட்!”

எப்படி 2000 - 3000 மக்களை உங்க குழுவும் நீங்களும் சமாளிச்சீங்க?

“ தயாரிப்பாளர் ஷோபுவுக்கு தான் நான் நன்றி சொல்லணும்...அவரு யோசிக்காம செய்த செலவு, ஒவ்வொரு ஃப்ரேமுக்கு என்னவெல்லாம் முக்கியமா கொஞ்சம் கூட தயங்காம செய்தார்... பாகுபலிய பொருத்த வரைக்கும் ஷோபுவோட பங்கு நம்மளால ஒப்பிடவே முடியாது.!”

முதல் பாகத்துல வெறும் கேரக்டர் அறிமுகத்துலயே முடிச்சிட்டீங்க... அடுத்த பாகம் கதையா? அதப் பத்தி சொல்லுங்களே!

“ எந்தக் கதைய எடுத்துக்கிட்டாலும் இதுதான் கிராஃப்... முதல்ல கேரக்டர்கள் அறிமுகம், அப்பறம் கேரக்டர்களுக்கான எமோஷன்கள், அப்பறம் கதை, க்ளைமாக்ஸ்... ஆனால் பாகுபலி பெரிய கதை. என்னோட கேரக்டர்கள் அறிமுகத்துக்கே ரெண்டுலருந்து ரெண்டரை மணி நேரங்கள் தேவைப் பட்டுச்சு. மொத்தமா பார்த்தா அஞ்சு மணிநேரம். அதனால தான் ரெண்டு பார்ட்டா பிரிச்சேன்!”

முதல் பாகம் முழுக்க விஷுவல் எபெக்டுகள்லயே காமிச்சீங்க... 2ம் பாகம் எப்படி இருக்கும்?

“ கண்டிப்பா முதல் பாகத்தை விட 2ம் பாகம் ரொம்பவே பிரம்மாண்டமா இருக்கும்.. பாகுபலி பல்லலதேவாவுக்கு நடுவுல என்ன நடந்துச்சு, பல்லலதேவா வுக்கும் தேவ சேனாவுக்கும் என்ன நடந்துச்சு இப்படி பல கேள்விகளுக்கு பதில் இரண்டாம் பாகத்துல தான் இருக்கு. கண்டிப்பாக ஆடியன்ஸால ஸ்க்ரீன விட்டு கண்ண எடுக்கவே முடியாது!”

பாகுபலி 2 எப்போ ரிலீஸ்?

“ 2016 கடைசியில வெளியாகும்... ஷூட் டிசம்பர்ல ஆரம்பிச்சு நடந்துட்டு இருக்கு!”

பாகுபலி முதல் பாகத்துல பிடித்த காட்சி, கஷ்டமான காட்சி எது?

“ பிடிச்சது பாகுபலி படத்தோட முதல் காட்சியில சிவகாமி கேரக்டர் கையில குழந்தையோட இருக்க ஷாட், கஷ்டப்பட்டது பிரபாஸ் ஒவ்வொரு சீன்லயும் ஜம்ப் பண்ணின காட்சிகள் தான். அவருக்குக் காயம்பட்டு நிறைய ஆபரேஷன்கள் நடந்துருக்கு!”

கடைசியா ஒரு கேள்வி “ ஏன் கட்டப்பா ஏன் பாகுபலியக் கொலை செஞ்சாரு ப்ளீஸ் சொல்லுங்களேன்?

“(விடாமல் சிரிக்கிறார்) ஏன்னா நான் அவர் கிட்ட கொல பண்ண சொன்னேன் .. அதனால செஞ்சாரு!” 

என்னா ஒரு வில்லத்தனம்!!!

வீடியோ பேட்டிக்கு:

தொகுப்பு : - ஷாலினி நியூட்டன் - 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்