நிறைய பேர் எனக்கு ஸ்கெட்ச் போட்ருக்காங்க! - சரவணன் ‘மீனாட்சி’ ரட்ஷிதா #10Q10R

"ஏலோ எலேலேலேலோ " ன்னு காலர் டியூன் வெச்சு நம்மள வரவேற்கறாங்க ஆறடி கூந்தல் அழகி, நம்ம சரவணனோட மீனாட்சி ரட்சிதா. ஷூட்டிங்லேர்ந்து கொஞ்சம் பிரேக் எடுத்து ரிலாக்ஸ் செஞ்சவங்கக்கிட்ட ஒரு ராபிட் பயர் ரவுண்ட் நடத்தினோம்.

1. கணவர்க்கிட்ட பொய் சொல்லி மாட்டிக்கிட்ட அனுபவம்?

ஒரு விளம்பர ஷூட்டிங். ஆனா என்ன பிராண்டுன்னு எல்லாம் நான் சொல்லல. ஷூட்டிங்குக்கு முந்தின நாள் டிசைனர் வந்து அளவெல்லாம் எடுத்துக்கிட்டு போனார். அவர்கிட்ட என் கணவர் என்ன பிராண்ட், என்ன விளம்பரம்ன்னு எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு நான் சொல்லலன்னு சின்னதா சண்டை போட்டார்.

2. . மறக்க முடியாத பல்ப்?
 
ஒரு தடவை ஷூட்டிங்ல ரொம்ப எமோஷனலான சீன். நாங்க பயங்கரமா பெர்பாமன்ஸ் குடுத்து நடிச்சிக்கிட்டு இருந்தோம். கொஞ்சம் நேரம் கழிச்சுதான் தெரியுது கட் சொல்லி அரை மணி நேரம் ஆச்சுன்னு. அவங்க பேக்கப் பண்ணி கேமராவை தூக்கிக்கிட்டு வேற லோகேஷனுக்கே போயிட்டாங்க. எங்களுக்குதான் பல்ப் ஆகிடுச்சு.

3. பேய் அனுபவம் இருக்கா?

இது வரைக்கும் பார்த்ததில்ல. வந்தா த்ரில்லிங்கா இருக்கும். ஆனா பேய் என்னை பார்த்து பயப்படாம இருக்கணுமே?

4. பப்பி லவ் ?

சின்ன வயசுலேர்ந்து நிறைய பேர் எனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்காங்க. ஆனா எனக்குதான் க்ரஷ்ஷே இல்லை. ஒரே போர். என் வாழ்க்கைல வந்த முதல் க்ரஷ் என் கணவர் தினேஷ்தான்.

5. உங்களுக்கு நீங்களே ஒரு டைட்டில் வெச்சுக்கோங்கன்னா என்ன வைப்பீங்க?

"தமிழ்நாட்டு மருமகள் " ரட்ஷிதா

6.நம்ம அருணாச்சலம் ரஜினிகாந்த் மாதிரி ஒரே நாள்ல ஒரு கோடி செலவு பண்ணனும்ன்னா என்ன பண்ணுவீங்க?

எல்லா பார்வையற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு பிரிச்சு குடுத்துடுவேன். அதையும் மீறி பணம் இருந்தா ஏழை குழந்தைங்களோட படிப்புக்கு குடுத்துடுவேன்.

7. நீங்க ஆஸ்கருக்கு நாமினேட் ஆநீங்கன்ன என்ன மெசேஜ் குடுப்பீங்க?

உலகத்துல பல நாட்டு ஹீரோயின்கள் கூட போட்டி போட்டு வந்து அந்த இடத்துல நிக்கறதையே ரொம்ப பெருமையா நினைக்கிறேன்னு சொல்லுவேன்.

8. நீங்க பையனா பொறந்திருந்தா?
 

பையனாவா? அந்த பேச்சே வேண்டாமே!

9. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் பிரதமர் ஆனா என்ன பண்ணுவீங்க?

லீவ் போட்டுடுவேன். பாலிடிக்ஸே வேண்டாங்க.


10. உங்கள நீங்களே பாராட்டிக்கோங்க இல்லை திட்டிக்கோங்க

பாராட்டிக்கற அளவு பெரிய ஆளும் இல்லை திட்டிக்கற அளவு மோசமும் இல்லை. ரெண்டுக்கும் நடுவுல இந்த மீனாட்சி!
 

தா. நந்திதா  மாணவபத்திரிக்கையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!