Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”அடுத்த விஜய்யா நானா?!”... பதறும் ஆதித்யா டிவி அஸார்!

தித்யா டிவியில சின்னவனே பெரியவனேவிற்குப் பிறகு, மூன்று நான்கு படங்கள் என்று அடுத்த படிக்குத் தாவியிருக்கும் அஸாரிடம் ஒரு மினி பேட்டி:

உண்மைய சொல்லுங்க என்ன படிச்சிருக்கீங்க?

“ சத்தியமா நான் ஒண்ணுமே படிக்கலை.. ஆமாங்க டென்த் படிச்சேன், அப்பறம் டிப்ளமோ படிச்சேன். DCI அத முடிச்சிட்டு இன்ஜினியரிங் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா என்ன பண்ண டிப்ளமோவுலயே அரியர். அத முடிச்சுட்டு அப்படியே மீடியா எண்ட்ரீ ”

நயன்தாரா தான் உங்க அடுத்தப் பட ஹீரோயின்னா, உங்க மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?

“கண்ணா லட்டு திங்க ஆசையா?’ இதுதான் அந்த மைண்ட் வாய்ஸா இருக்கும்... ஆனால் இதெல்லாம் சாத்தியமான்னு கேட்டா கண்டிப்பா டவுட்டுதான். பார்ப்போம்... ஒருவேளை நடந்தாக் கூட, தம்பி ரோல்ல நடிக்க விட்ருவாங்க!”

நீங்க மட்டும் இல்லன்னா அந்த விஷயம் முடக்கமாயிடும், அப்படி எதாவது இருக்கா?

“ அப்படி ஒண்ணுமே இல்ல , நம்ம இருந்தா தான் எந்த விஷயமும் முடக்கமாகும்!”

லவ் லைஃப் , புரபோசல்கள் பத்தி குறிப்பு எழுதுங்க பாஸ்?

“ஹூக்கும்...இப்போ தான் என் ஃபேஸ்புக் போட்டோவுக்கே சில பொண்ணுங்க கிட்டருந்து லைக் விழ ஆரம்பிசிருக்கு, அப்பறம் கமெண்ட்ஸ், அப்பறம் ஜன்னலோரம் சீட்டு, அப்பறம் வளையோசை கலகல. இதுக்கெல்லாம் நிறைய காலம் இருக்கு... ஆனால் நான் நிறைய அப்ளிகேஷன்ஸ் குடுத்திருக்கேன்!”

பலகுரல்ல பேசுவீங்களாமே எங்க திருக்குறள்ல பேசுங்க பார்க்கலாம்?

“ இப்படி நம்மல அடிக்கடி வம்புல மாட்டி விடறதே வேலையாப் போச்சு... நான் திருக்குறள் மட்டும் இல்ல, அதுக்கு அர்த்தமும் சொல்லுவேனே... அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.. (குறளையும், பொருளையும் ரஜினிகுரலிலேயே சொல்லிமுடிக்கிறார்)

மீடியாவுக்குள்ள வரலைன்னா என்னவா ஆகியிருப்பீங்க?

கண்டிப்பா சேல்ஸ் ஃபீல்ட்லதான் இருந்திருப்பேன், இருந்துகிட்டே கடைசி வைரைக்கும் மீடியா, சினிமான்னு ட்ரை பண்ணியிருப்பேன்!”

விக்ரமன் படத்துல நடிச்சிருக்கீங்களே? அந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?

“ நான் ஒரு நண்பரோட நிகழ்ச்சியில மிமிக்ரி பண்ணிகிட்டு இருந்தேன், அப்போதான் விக்ரமன் சார் என்ன பார்த்து ஃப்ரண்ட் ஒருத்தர் கிட்ட பேசச் சொல்லி சொல்லியிருந்தாரு. நானும் கூலா கால் பண்ணி என்ன விக்ரமன் சார் பேச சொன்னாருன்னு கேட்டேன். அவரும் அவரோட வீட்டுக்கு வழியெல்லாம் சொல்றாரு, நான் பேசுறது விக்ரமன் சார்னே தெரியாம பேசி கடைசியில போய் பார்த்தா அவர் கிட்டதான் தெனாவெட்டா வழி கேட்டு போயிருக்கேன், சொல்லுங்க சார் என்ன ஃபங்ஷன்னு கேட்டேன், நடிக்கிறியான்னு கேட்டாரு, விட்ருவோமா?!”

உங்க ஓட்டு யாருக்கு?

“என் கிட்ட எந்த ரகசியமும் நிக்காது, இதாவது ரகசியமா இருக்கட்டுமே, கண்டிப்பா நல்ல ஓட்டா இருக்கும், கள்ள ஒட்டா இருக்காது!”

சினிமா அடுத்து பாடகர், அரசியல் இதுதான் பிளானா?

“ சத்தியமா பாட்டேல்லாம் பாட மாட்டேன், அரசியல்லாம் பெரிய விஷயம், நிறைய நடிப்பேன் அதுதான் என் ட்ரீம்!”

பிடிச்ச விஜே யாரு?

“எல்லார் கிட்டயும் ஒரு தனித்துவம் இருக்கும். அதனால எல்லாரையும் பிடிக்கும்.. முக்கியமா சிவகார்த்திகேயன் என் கிட்டயே நிறைய கேட்டு கேட்டு தெரிஞ்சுப்பாரு. கொஞ்சம் கூட ஹெட் வெயிட் இருக்காது. அவ்ளோ பாராட்டுவாரு, அவ்ளோ பணிவானவர். ரியோவும் பிடிக்கும்.. இப்படி விஜேக்கள் சொல்லிகிட்டே போகலாம்!”

பலம் பலவீனம் என்ன?

“ நான் எல்லார் கூடவும் ஈஸியா ஃப்ரெண்டாகிடுவேன், ஃப்ரெண்ட்ஸ் தான் அவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி அது தான் பலவீனம்!”

ஹையா ஜாலின்னு நீங்க ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கற படம் எந்த ஹீரோவோடதா இருக்கும்?

“ எனக்கு எல்லா ஹீரோவும் பிடிக்கும், ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாரையும் பிடிக்கும்!”

பொண்ணுங்க கிட்டதான் வயசு கேக்கக் கூடாது பாஸ்?

“ஜூன் 7, 1987 என்னோட பிறந்தநாள்...இப்போ சொல்லுங்க என்னோட வயசு என்னான்னு!”

செம மொக்க வாங்கின மொமெண்ட்?

“ மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் எல்லாருமே இந்த மொக்கைகள் வாங்கியிருப்போம்... இந்த ஸ்டேஜ் நிகழ்ச்சிகள்ல நாம அப்போ தான் கெத்தா விஜய் வாய்ஸ் பேசியிருப்போம், யாராவது கூட்டத்துல எழுந்து நின்னு சரி சரி விஜய் வாய்ஸ் பேசுன்னு சொல்லுவாங்க பாருங்க... செம பல்ப்பா இருக்கும்!”

கல்யாணம் எப்போ?

“ எனக்கு இப்பவே வெட்கமா இருக்கு... கல்யாணம் எப்போ ...ஆமா எப்போ... நானும் எங்க வீட்ல கேட்டுகிட்டு இருக்கேன்!”

அடுத்தடுத்தப் படங்கள் என்னென்ன?

“ சாரல், ஏண்டா தலையில எண்ணை வைக்கல, கடலைப் போட ஒரு பொண்ணு வேணும் மூணு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன்!”

விக்ரமன் உங்களை விஜய்யோட கம்பேர் பண்ணி பாராட்டியிருக்காரே?

“ விஜய் சாரோட கம்பேர் பண்றதுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, அவரோட டை ஹார்ட் ஃபேன் நான். விக்ரமன் சார் விஜய் சார புகழ்ந்துட்டு, அவரு மாதிரி இவனும் வரணும்னு சொன்னாரு. அவ்ளோதான். நடக்கணும். விஜய் ஸ்டைல்ல சொல்லணும்னா.. ஹே...ஹே...ஹே ஐ’ம் வெயிட்டிங்!

-ஷாலினி நியூட்டன் -

படங்கள்: ப.சரவணகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்