Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

’நாஞ் சொல்றேன்ணே... விஷால் அரசியலுக்கு வரமாட்டாப்ல!’ - ‘ரோலக்ஸ்’ ஆர்.கே.சுரேஷ்

 

 'என்னா மருது.. நீந்தான ச்சொன்ன? அடிக்கறதுல மூணு ரகம். ஒண்ணு - பேசறதுக்கு முன்னாடி அடிக்கறது. ரெண்டு - பேசிட்டிருக்கும்போதே அடிக்கறது. மூணு... பேசவிட்டு அடிக்கறது. இதுல மருது மொதொ ரகம்னா ரோலக்ஸு மூணாவது ரகம்” என்று மதுரை பாஷையில் மிரட்டி, ‘ரோலக்ஸ் பாண்டியனா’க கண்களில் வெறிமின்ன வில்லத்தனத்தில் கலக்கிய ஆர்.கே.சுரேஷுக்கு, இது இரண்டாவது படம். தாரை தப்பட்டையில் கருப்பையாவாக அறிமுகமான இவர், வில்லன் க்ளப்பிற்கு புதுவரவு.

 ‘என்னை மொதல்ல ஃபோட்டோ ஷூட் எடுத்தது சங்கிலி முருகன் அங்கிள்தான். காலேஜ்க்கு முன்னாலயே நான் கேரளாபோய் ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்து நடிப்பு கத்துகிட்டேன். ‘பவர் ஃபாஸ்ட்’ மாஸ்டர்கிட்ட ஃபைட்டிங் கத்துகிட்டேன். நடனம் மூணு மாஸ்டர்கள் கிட்ட கத்துகிட்டிருக்கேன்.

புதுப்பேட்டைல அடியாட்கள்ல ஒருத்தரா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. கொஞ்சம் பெரிய வேஷமா இருந்தா பரவால்லைன்னு அத மிஸ் பண்ணிட்டேன். இப்பவும் செல்வராகவன் அண்ணன் படம் கூப்டா கண்டிப்பா நடிப்பேன்.  சாட்டைல ஆரம்பிச்சு, பல படங்கள் விநியோகஸ்தரா இருந்தேன். அப்பறமா சலீம் படம் தயாரிச்சேன். இப்ப விஜய் சேதுபதி நடிப்புல ‘தர்மதுரை’ தயாரிப்புல போய்ட்டிருக்கு. பரதேசி விநியோகஸ்தரா இருந்தப்ப பாலா அண்ணன்கிட்ட கேட்டு, அவர்மூலமாத்தான் தாரை தப்பட்டைல அறிமுகமானேன்’ என்றவரிடம் தொடர்ந்து உரையாடியபோது..

ரெண்டே படத்துல போஸ்டர் ஒட்ற அளவுக்கு ரசிகர்கள். இது தானா சேர்ந்த கூட்டமா...

(கேள்வியை முடிக்கும் முன் இடைமறிக்கிறார்) காசு குடுத்தெல்லாம் சேர்க்கலைண்ணே. எமக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். எங்கப்பா அப்பவே முரளியை வெச்சு படம்லாம் தயாரிச்சவரு. ஊர்ல யாருக்கு எதுன்னாலும் ஹெல்ப் பண்றவரு. பேரே “ ‘வள்ளல்’ களஞ்சியம்”தான். அவர் பையன் சினிமால வந்திருக்கேன்னதும் கொண்டாடுறாங்க பசங்க. நானும் வேணாம்டானு சொல்லிப்பாத்துட்டேன். கேட்டாய்த்தானே. இதெல்லாம் கூட பரவால்ல.. அன்னதானம், திருவிழான்னு ஊரே களை கட்டிருக்கும். இவங்க துப்பாக்கியோடல்லாம் என் ஃபோட்டோ போட்டு பேனர் வைப்பாய்ங்க. கலெக்டர் வந்து ‘யார்ரா இவன்’ன்னு கேட்டதெல்ல்லாம் நடந்திருக்கு. என்னமோ போண்ணே.. சந்தோஷமா இருக்கேண்ணே..

“யாருக்கு வில்லனா நடிக்க ஆசை?”

தல அஜித் அண்ணனுக்குத்தான். அவருகூட வில்லனா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. காத்துகிட்டிருக்கேன்.

நம்பியார் / பிரகாஷ்ராஜ் / ரகுவரன்..?

இவங்க பாதிப்பு இல்லாம வில்லனா பண்றதெல்லாம் சாத்தியமே இல்ல. ரோகிணி அக்கா கூப்டப்ப நான் சொன்னேன். ‘தாரை தப்பட்டை’ல ரகுவரன் ரெஃபரன்ஸ் பண்ணிருப்பேன். சான்ஸே இல்லை. இப்பவும் எங்ககூட வாழ்ந்துட்டிருக்காங்க. நான்லாம் இவங்கள மாதிரி மிமிக்ரி பண்ணுவேன். பிரகாஷ்ராஜ் டூயட் லேர்ந்து கோ-2 வரைக்கும் விடாம பார்த்திருக்கேன். யார் ஷாட்ல இருந்தாலும் இவரு உள்ள வந்தா தூக்கிச் சாப்டு போய்ட்டே இருப்பார். நம்பியார் ஏற்கனவே சொல்லிட்டேன். இவங்கள்லாமே ஒரு டிக்‌ஷ்னரி மாதிரி. காலத்துக்கும் ரெஃபர் பண்ணிட்டே இருக்கலாம்.


வில்லனுக்கெல்லாம் வில்லன் ராதாரவி. நீங்க அவருகிட்டயே வில்லத்தனத்த காட்னீங்க. எப்டி இருந்துச்சு செட்ல?

அவரா வில்லன்? நீங்க வேற. ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ்னா என்னான்னு அவர்கிட்ட கத்துக்கணும். ஆனா ஸ்கிரீனுக்கு வெளில எப்டி நடந்துக்கறதுன்னு நான் அவர்கிட்ட கத்துகிட்டேன். மருது ‘செட்’டுக்கு வந்தாலே, டைரக்டர் கிட்ட போய் அவ்ளோ பணிவா வணக்கம் வெச்சுட்டுதான் வருவார். எத்தனை படம். எத்தனை பேரப் பாத்தவரு. கேட்டா ‘ஒரு டைரக்டர்தாண்டா நாம ஸ்க்ரீன்ல எப்டி தெரியறோம்’ங்கறதுக்கு எல்லாமே. அவர் நினைச்சாதான் எல்லாமே நடக்கும். அவருக்குண்டான மரியாதைய நாம குடுத்தே ஆகணும்’ங்கறார். இப்படி அவர்கூட இருந்த நாளெல்லாம் டெய்லி ஒரு பாடம் படிச்சேன்.

நடிகர் சங்க செயலாளர் விஷால் என்ன சொல்றாரு?

மொதல்ல விஷால் எனக்கு ‘ஹாய் பாய்’ ஃப்ரெண்ட்தான். ஆனா மருதுல கல்யாண மண்டபம் சீன். ‘அவன் ஏன் மாத்தணும்??”ன்னு சொல்லிட்டே நான் ஸ்கிரீனுக்கு நான் வரணும். கல்யாணத்துக்குள்ள என்டர் ஆகி படபடன்னு சிங்கிள் ஷாட், சிங்கிள் டேக்ல பண்ணிட்டு வெளில வந்துட்டேன். ‘அப்பத்தா.. பத்திரம்’ன்னு மிரட்டிட்டு டைரக்டர் ‘கட்’ சொன்னதும் விஷால் கேரவனுக்குள்ள கூப்டு பேசினார். ‘அடேய் சண்டாளா.. என்னடா இப்டிப் பண்ற! கண்லயே நிக்குதுடா.. பாலா படத்துல அப்டிக் காமிச்சுட்டாரு அடுத்து என்ன பண்ணப்போறான்’ன்னு நெனைச்சேன். நீ வேற லெவல்ல இருக்கடா’ன்னு பாராட்டினார்ணே. ஒரு நடிகனா ரெண்டாவது படம் பண்ற எனக்கு இதைவிட என்ன வேணும்!

விஷால் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்தானே? அவர் அரசியலுக்கு வந்துடுவார் போலயே..

(பலமாக சிரிக்கிறார்) விஷால் பண்ற பல உதவிகள் வெளில பல பேருக்கு தெரியாது. இப்ப ப்ளஸ் டூ ரிசல்ட் வந்திருக்கு. புக்ஸ், நோட் வாங்க க்யூவுல நிப்பாங்க அவர் ஆஃபீஸ்ல. ஆனா எல்லாமே ‘எதாச்சும் நல்லது பண்ணுவோம் மச்சி’ங்கற மாதிரிதான். மத்தபடி அவரு அரசியலுக்கெல்லாம் வர சான்ஸே இல்ல. மத்தவங்க சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்கொண்ணுன்னா வந்து நிக்கறவரு விஷால். அவ்ளோ நல்ல ஃப்ரெண்ட், நானே சொல்றேன். போதுமா?வசன உச்சரிப்பும் உங்க ஸ்பெஷாலிட்டிதான். அதப்பத்தி யாரும் சொல்லிருக்காங்களா?

நான் படிச்சதெல்லாம் இங்க்லீஷ் கான்வென்ட். ஆனாலும் ரத்தத்துல இருக்கற மொழி போகுமாண்ணே? அதான் விடாம இருக்குது. தமிழ் புத்தகங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் மதுரைல இருந்ததால அந்த ஃப்ளோ கரெக்டா வந்துடுச்சு. ரெண்டு மாசம் கோண வாயா ‘என்னா பண்ற?’ன்னு பேச டிரை பண்ணினேன். படம் முடிஞ்சு, தாடி எடுத்தப்ப ஃப்ரெண்ட்ஸ்லாம் ‘டேய் நீ பேசறப்ப வாய் கோணுதுடா’னாங்க. மாத்தறதுக்குள்ள மெனக்கெட்டுட்டேன். மிமிக்ரிலாம் கொஞ்சம் பண்ணுவேன். அதுனால வசன உச்சரிப்பு கொஞ்சம் சுலபமா கை வந்துடுச்சு.

அடுத்த ப்ராஜக்ட்ஸ்?

தாரை தப்பட்டை கருப்பையாவுக்கு கெடச்ச பேரை, மருது ரோலக்ஸ் பாண்டியன் தக்க வெச்சிருக்கான். அதே மாதிரி, பேசப்படற கதாபாத்திரம்னா நான் ரெடியா இருக்கேன். சிக்ஸ் பேக் வைக்கணுமா, தாடி வைக்கணுமான்னு எதுனாலும் சரி. ரெண்டு மூணு ப்ராஜக்ட்ஸ் பேசிட்டிருக்காங்க. இன்னும் முடிவாகலை.

பேட்டி முடித்து கீழே வந்து அவர் டிராக்டரிலோ, ராயல் என் ஃபீல்டிலோ போவார் என்றுதான் எதிர்பார்த்தோம்.
அவர் Posrshe கார், 1314ல் பறந்தார். ஆனால் அப்போதும் கண்ணாடியை இறக்கிவிட்டு ‘டிராப் பண்ணணுமாண்ணே?’ என்றார்.

பாசக்காரபய தான் சார் சுரேஷ்!

-பரிசல் கிருஷ்ணா
-படங்கள்:.வி.செந்தில்குமார்

பேட்டியின் வீடியோ வடிவம் காண:

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement