நடிகர் சங்கத்தில் ஊழலுக்கே இடமில்லை- விஷால் #HBDVishal | There is no place for corruption in Nadigar Sangam says vishal

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (29/08/2016)

கடைசி தொடர்பு:14:33 (29/08/2016)

நடிகர் சங்கத்தில் ஊழலுக்கே இடமில்லை- விஷால் #HBDVishal

விஷால் பிறந்த நாள் இன்று... மெர்சி ஹோம்ஸில் உள்ள முதியோர் இல்லத்தில், தன் ரசிகர்கள் மற்றும் முதியவர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடிய விஷால், அங்கு உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இதையடுத்து, திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் விஷால். இவ்விழாவை விஷால் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். விஷாலுடன் இந்நிகழ்வில் வரலட்சுமி உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பங்ஷன் மூடில் இருந்த விஷாலிடம், சில கேள்விகளை முன் வைத்தோம்.

 

துணை நடிகர்கள் சிலருக்கு நடிகர் சங்கம் வேலை கொடுப்பதில்லை" என்று ARO சங்கையா போன்றோர்கள் புகார் சொல்கிறார்களே? 

"நடிகர் சங்கம் செயல்படுவது, துணை நடிக, நடிகைகளுக்கு வேலை கொடுப்பதற்குத் தான். திடீரென்று இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். நாங்கள் குருதட்சணை என்ற பெயரில் ஓய்வூதியம் கொடுத்து வருகிறோம்.  கிட்டத்தட்ட 16 ஹீரோக்கள் சேர்ந்து 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம்2000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். முன்பெல்லாம் துணை நடிகர்கள் 5 வருடம் 10 வருடம் என ரசீதை வைத்து கொண்டு உதவித்தொகையே வராமல் சிரமப்பட்டார்கள்.  தற்போது நாங்கள் தயாரிப்பாளர்களுக்கு, "நீங்கள் அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கொடுத்தால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்" என புரிய வைத்துள்ளோம். இப்போது அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைத்து வருகிறது. சர்ச்சைக்குரிய நபர்கள் தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். எங்களுக்கு பதவி ஆசையெல்லாம் இல்லை. துணை நடிகர்கள் அனைவருக்கும் பொறுப்புகளும் பலனும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் பொறுப்புக்கு வந்தோம்.  நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்..." என்றார் நடிகர் விஷால்

வாராஹி தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி ?

அவர் ஆதாரத்தோடு அதை நிருபிக்கட்டும் நாங்கள் நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார்.ஏனென்றால் அவர் சிவகுமார் அய்யா குடும்பத்தில் இருந்து வந்தவர்.  இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதை கொண்டு வரட்டும்.

பி.எஸ்

குழந்தைகளுடன் விஷால் பிறந்த நாள் விழா ஆல்பத்திற்கு: http://goo.gl/pHPeh5

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்