ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் படத்தில் ஆக்‌ஷனா ரொமான்ஸா.. எது அதிகம்? #மகள் ஐஸ்வர்யாவின் பதில்

எங்க நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என்று தேடினால் பிஸியாக படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்! 

படத்தின் பெயர்?

‘காதலின் பொன் வீதியில்’

என்னப்பா.. ஆக்‌ஷன் கிங் டைரக்ட் பண்ற படம் பேரு இவ்ளோ ரொமாண்டிக்கா இருக்கே என்று அந்தப் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூனிடம் கேட்டோம். அவரது பேட்டிதான் கீழே வீடியோவில் நீங்கள் பார்க்க இணைத்திருக்கிறோம்.

அந்த ஸ்கிரிப்ட்ல லவ், ஆக்‌ஷன் எது நல்லா வந்திருக்கு?, அவரோட ஸ்கிரிப்ட்ல நடிச்ச அனுபவம் போன்றவற்றை சுவையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். படத்தின் வசனங்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறதாம். படத்தில் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அமைப்பில் ஒரு பாடல் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என்கிறார்.  

நீங்க சண்டைக்காட்சில நடிச்சீங்களா என்பதற்கு அவர் சொன்ன பதிலைப் பார்த்தால், இவரின் தங்கை கூடிய சீக்கிரம் நடிக்க வருவார் என்று தோன்றுகிறது. சரி.. சினிமாவில் இவருக்குப் பிடித்த அம்சம் என்ன, இவர் என்ன படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார் என்பதெல்லாம் தெரியுமா?

நீங்களே பாருங்கள்!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!