ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

‘ஏமிக்கு வாய்ஸ் நல்லா இருந்துச்சு!’ - ரஜினியின் இந்த லைக்ஸ் யாருக்கு?

வைரலாக வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்பதில்லை. அவரைச் சந்திந்து ஒரு படம் எடுத்துக் கொண்டாலே வைரலாகலாம் என்பதற்கு ரவீணா ரவி ஒரு உதாரணம். யார் இந்த ரவீணா ரவி என்கிறீர்களா..? தெரியாதவர்கள் தெரிஞ்சுக்கோங்க... சிறு வயது முதலே தனது டப்பிங் பேசி வரும் ரவீணா ரவி, தற்போது பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கத்தி’, ‘ஐ’, ‘அனேகன்’, ‘தெறி’ என பல முன்னணி தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் டப்பிங்கில் செம பிஸியாக இருப்பவர், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமாகிறார். 

‘சூப்பர் ஸ்டாருடனான சந்திப்பை பற்றி ரவீணாவிடம் கேட்டபோது, “என்னோட தாய்மாமா ஜோதிஷ், துபாயில இருந்து சென்னைக்கு ட்ரீட்மெண்டிற்காக வந்திருந்தார். என் மாமா தீவிர ரஜினி ரசிகர். என் பாட்டி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தபோது, கிட்டதட்ட 30 வருஷத்திற்கு முன்னாடி என் மாமாவை ரஜினி சாரை பார்க்க வெச்சிருக்கார். அதுக்கப்பறம் மாமா துபாய்க்கு போயிட்டனா சாரை பார்க்க முடியலை. இப்போ சென்னை வந்தனால மறுபடியும் சாரை பார்க்கணும்னு ஆசைப்பட்டார். ‘ட்ரீட்மெண்ட் முடிஞ்சதுக்கு அப்பறம் ரஜினி சாரை பார்க்க முடியுமா..? முடிஞ்சா ட்ரை பண்ணு’னு சொல்லியிருந்தார். என் குடும்ப நண்பர் மூலமா முயற்சி பண்ணி ரஜினி சாரை சந்திச்சோம். இப்போ மாமாவும் ஹாப்பி, நானும் ஹாப்பி” என்றவர், தொடர்ந்தார். 

“ரஜினி சார் காலையில 10.30 மணிக்கு வர சொல்லி டைம் கொடுத்திருந்தார். நாங்க காலையிலையே சீக்கிரமா எழுந்திருச்சு, கிளம்பி கரெக்ட்டா 10.20க்கு ஆஜர் ஆகிட்டோம். நாங்க போனதும் 5 நிமிஷத்துல சார் வந்துட்டார். அவர் வந்து 10 நிமிஷம் எங்ககூட இருந்தார். என்னை விட பல மடங்கு என் மாமாவுக்கு சந்தோஷம். எங்களோடு என் அப்பா-அம்மாவும் வந்திருந்தாங்க. என் அப்பா அம்மாவுக்கும் சாரை ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயசுல இருக்கும் போது ரஜினி சாரை பார்க்க அவங்க எனனை அழைச்சிட்டு போனாங்க. இப்போ நான் அவங்களை அழைச்சிட்டுப் போனேன். ரொம்ப சந்தோஷமான தருணம். நான் சின்ன வயசுல சாரை பார்க்கும் போது எடுத்த போட்டோவை அவர்கிட்ட கொடுத்தேன். அதை பார்த்துட்டு போட்டோவில் ஆட்டோக்ராப் போட்டு கொடுத்தார். நான் ஒர்க் பண்ணின படங்களை பற்றி சார்கிட்ட சொன்னேன். ‘ஐ’ படத்தில் நான் தான் சார் ஏமிக்கு டப்பிங் பண்ணிருந்தேன்னு சொன்னதும், ‘யா..யா... நான் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு’னு அவருக்கே உண்டான ஸ்டைல்ல சொன்னார்” என்ற ரவீணா, தற்போது நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 

“ ‘மாயவன்’, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’னு இரண்டு படங்கள் டப்பிங் பண்ணிருக்கேன். அதுக்கப்பறம் வித்தார்த்தோடு சேர்ந்து ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நடிச்சிருக்கேன். அந்த படத்தை திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருக்காங்க. ஜனவரி இல்லைன்னா பிப்ரவரியில படம் ரிலீஸாகும்” என்றார், ரவீணா ரவி. 

- மா.பாண்டியராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!