வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (05/01/2017)

கடைசி தொடர்பு:11:08 (05/01/2017)

”என் மாமனார் எனக்கு அப்பா சார்!” - நெகிழும் பாக்யராஜின் மருமகள் கீர்த்தி

 Keerthi

கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை... பல வருடங்களாக டி.வி.யில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் மருமகள் என சொன்னாலே சட்டென்று தெரியும் முகம்.  ’வீட்ல விசேஷங்க’ டைரக்டரின் மருமகளும் ரொம்பவே விசேஷம்தான். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே, எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறார் கீர்த்தி. ‘இதெப்படி சாத்தியம்?’ என்று அவரிடமே பேசினேன்.

''நான் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இப்பவும் இருக்கேன். என்னை மாத்திக்கணும்கிற அவசியம் ஏற்படலை. என் மாமனார், மாமியாரும் அதை எதிர்பார்க்கவும் இல்ல. நான் நானா இருக்கேன். அதுக்கு அவங்களுக்கு நன்றி சொல்லணும்''. 

 Keerthi


“அப்பா, அம்மானுதான் மாமனார், மாமியாரை கூப்பிடுறீங்களாமே?”

''திருமணத்துக்கு முன்னாடியே எங்க ரெண்டு குடும்பங்களும்  நல்ல நெருக்கம். என் அம்மா ஜெயந்திகிட்டதான் சாந்தனுவும், அவர் அக்கா சரண்யாவும் டான்ஸ் கத்துக்கிட்டாங்க. சின்ன வயசுப் பழக்கம். அப்போல்லாம் அங்கிள், ஆன்ட்டினுதான் கூப்பிடுவேன். திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படித்தான் கூப்பிட்டேன். அப்போ என் மாமியார், 'எங்களை அப்பா, அம்மானே கூப்பிடுனு சொல்லிட்டாங்க. நானும் சந்தோஷமா அவங்க சொன்னது போலவே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். இது என் அம்மா ஜெயந்திக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அப்படியே ஃபாலோ பண்றேன்''.

Shanthanu

'சாந்தனு நீங்க வந்த பிறகு எவ்வளவு மாறியிருக்கார்?''

''பெரிய அளவில் மாற்றம் இல்லைனாலும், டிரஸ் விஷயத்தில் ரொம்பவே மாறியிருக்கார். மாற்றியிருக்கேன். அவருடைய டிரஸ் செலக்‌ஷன் முழுக்க நான் தான் பார்த்துக்கிறேன். என் மாமனாருக்கு எப்பவும் என் மாமியார்தான் செலக்‌ஷன் பண்ணுவாங்க. என் மாமியார் பூர்ணிமாம்மா, ஏதாவது புதுசா டிரஸ் எடுக்கணும்னா என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. ‘இது பிடிச்சிருக்கா, அது பிடிச்சிருக்கா'னு கேட்டு செலக்ட் பண்ணிக் கொடுக்கச் சொல்வார்''.

''வீட்டில் உங்கள் மாமியார் பூர்ணிமா எப்படி?''

''திருமணத்திற்கு முன்னாடி ‘என் மாமனார் ஜாலியான டைப், மாமியார் தான் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க’னு நினைச்சிருந்தேன். ஆனா, அப்படியே எதிர்மறையா இருந்தது. மாமா அவ்ளோ சாஃப்ட். அவர் உண்டு, அவர் வேலை உண்டுனு இருப்பார். யாரையும் தொந்தரவு பண்ண மாட்டார். வேலை, வேலை, வேலைதான். பெரும்பாலான நேரங்களில் ஆபீஸ்லதான் இருப்பார். சாந்தனுவுக்கும், அவர் அம்மாவுக்கும் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப். ரெண்டு பேரும் சேர்ந்தா செம ஜாலியாப் பேசிப்பாங்க. எனக்கே பொறாமையா இருக்கும். எல்லா விஷயத்தையும் சாந்தனு மறக்காம அம்மாகிட்ட பகிர்ந்துப்பார். அதே போல என் நாத்தனார் சரண்யா என்கிட்ட அவ்வளவு ஃப்ரண்ட்லியா பழகுவாங்க!”

keerthi Shanthanu


''மாமனார், மருமகள் இணைந்து ஷோ பண்ணும் போது எப்படி இருந்தது?''

''அந்த சமயத்தை இப்ப நினைச்சாலும் சிரிப்புதான் வரும். அப்படி பயந்தேன்.' ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு என் மாமனார் நடுவர். நான் தொகுப்பாளினி. என்ன தான் என் மாமனாராக இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர், நடிகர், அனுபவசாலி. ‘என்ன நினைப்பாரோ'னு ஒரு பக்கம் பயம் இருந்தாலும், அவரை எப்படி கூப்பிடுறதுனு ஒரு பக்கம் தடுமாறினேன். அப்பானு கூப்பிடவா, சார்னு கூப்பிடவா? மாமானு கூப்பிட்டதே இல்ல. கடைசியா முடிவு பண்ணி சார்னு இரண்டு, மூன்று எபிசோட் கூப்பிட்டேன். ஃபேஸ்புக், ட்விட்டர் என சில பேர் 'அப்பா'னு கூப்பிடுங்கனு பதிவுப் பண்ணியிருந்தாங்க. பாக்யராஜ் அவர்கள்கிட்டயும் நிறைய பேர் போன் பண்ணி கீர்த்தியை, 'அப்பா'னு கூப்பிட சொல்லுங்கனு சொல்லியிருக்காங்க. ஒரு நாள் கூப்பிட்டு, 'நீ என்னை அப்பானே கூப்பிடுமா'னு சொன்னார். அதிலிருந்து நிகழ்ச்சியில் அவரை அறிமுகப்படுத்தும் போதும் சரி, கமெண்ட்ஸ் கேட்கும் போதும் சரி 'அப்பா'னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். எனக்கும் அதுதான் பிடித்திருந்தது!”

நீங்களும் பாக்யராஜும் வீட்டில் இந்த நிகழ்ச்சிக்காக டிஸ்கஸ் பண்ணுவீங்களா?''

''நிச்சயமா கிடையாது. வீட்டுக்கு வந்தபிறகும் சரி, ஷூட்டிங் ஸ்பாட்லயும் சரி எதையும் டிஸ்கஸ் பண்ணிக்க மாட்டோம். டைரக்டர் என்ன சொல்றாரோ அதைத் தாண்டி, 'எதையும் பேசிக்கிட்டது கிடையாது. என் வேலையை நானும், அவர் வேலையை அவரும் பார்ப்பார். எந்த தலையீடும் இருக்காது. கீர்த்தி, கீர்த்தியா.. புகுந்த வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கேன். என்னைப் பெற்ற அப்பா, அம்மாவைப் போல, இவங்களும் பார்த்துக்கிறாங்க. நான் 'நல்ல மருமகளா இருக்கேனா'னு அவங்ககிட்ட தான் கேட்கணும்''. 

-வே. கிருஷ்ணவேணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்