வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (26/01/2017)

கடைசி தொடர்பு:09:06 (26/01/2017)

‘கமல், அஜித்னா அவ்ளோ பயம்..!’ - பார்வதி நாயர்

‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் மகனின் காதலியாகவும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் மனைவி கேரக்டரிலும் நடித்தவர் பார்வதி நாயர். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திலும் முத்திரை பதித்துள்ளார். அவரிடம் ‘எப்படி இருக்கிங்க’ எனக் கேட்டால், ‘ஆல் ஈஸ் வெல்’ என பாஸிட்டிவ் பதில். 
 
"நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?"

பார்வதி நாயர், கோடிட்ட இடங்களை நிரப்புக


"சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்புல ஆர்வம் இருக்கு. ஸ்கூல் படிக்கும்போது நாடகங்கள், குறும்படங்கள்னு நிறைய இடங்கள்ல நடிச்சிருக்கேன். டீச்சர்ஸோட ஆதரவும், வீட்டுல உள்ளவங்க தந்த சப்போர்ட்டும் எனக்கு பெரிய ப்ளஸ். ஸ்கூல் முடிச்சதுக்கப்றம் நான் நிறைய விளம்பரங்கள்ல நடிச்சேன். அதை பார்த்துதான் படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன வயசுல எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகனும்ங்கறதுதான் கனவு. நடிகை ஆனது திட்டமிடாம யதார்த்தமா நடந்தது."
 
"பார்த்திபன் கூட பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?"

"இந்த படத்துல என்னோட நடிப்பு இந்த அளவு வெளிவந்ததுக்கு காரணமே அவரோட பயிற்சிதான்தான். வேலை நேரத்துல அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு இயக்குநரா நடிகர்களை நடிக்க வைக்கவும், அவங்க பெஸ்ட்டை கொண்டு வரவும் அவரால முடியும். இந்த படத்துல அவர் என்ன சொல்லிருக்காரோ அதை நான் அப்டியே ஃபாலோ பண்ணி இருக்கேன். சில இடங்கள்ல என்னோட கருத்துகளையும் சொல்லி இருக்கேன். அதையும் அவர் ஏத்துக்கிட்டார். ‘அடுத்த படத்துல நீதான் டைரக்டர் போலயே’ன்னு என்னை அவர் கலாய்ச்சிருக்கார்.”

"கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் உங்கள் நடிப்பை பார்த்துட்டு என்ன சொன்னாங்க?"

"இந்த படம் என் கரியர்ல மறக்க முடியாத அனுபவம். நிறைய பேருக்கு இந்தப் படம் பிடிச்சிருக்கு. சிலருக்கு பிடிக்கலை. ஆனா படம் பார்த்த எல்லோரும் எங்கிட்ட சொன்னது ‘பார்வதி உங்க நடிப்பு நல்லாருக்கு’ன்னதுதான். ‘நீங்கதான் அடுத்த நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார்’ன்னு நிறைய பாராட்டு வந்தது. இதுக்கு முன்னாடி என் நடிப்பை பலர் பாராட்டி இருந்தாலும் என் திறமையை வெளிப்படுத்தறதுக்கான ஸ்கோப் இந்த படத்துலதான் கிடைச்சது. 20 நாளுக்குள்ள எடுத்த படம் இது. ரிகர்சல் பாக்கறதுக்கான நேரம் ரொம்பவே கம்மியாதான் இருந்தது. க்ளைமேக்ஸ் சீன்ஸ் எல்லாம் ஒரே ஷாட்ல எடுத்தது. ஒரு நடிகையா எனக்கே நம்பிக்கை கொடுத்த படம் இது."

                              பார்வதி நாயர்
 

"கமல் கூட ‘உத்தம வில்லன்’, அஜீத் கூட ‘என்னை அறிந்தால்’... ரெண்டு மாஸ் ஹீரோஸ் கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?"

"கமல், அஜீத் ரெண்டு பேருமே பெரிய நடிகர்கள். அதனால ஆரம்பத்துல அவங்க கூட நடிக்க ரொம்ப பயமா இருந்தது. ஆனா, அவங்க ரொம்ப ஹம்பிள் அண்ட் ஸ்வீட். அவங்க ரொம்ப எளிமையா இருந்தாங்க. வெரி ஃப்ரொபஷனல். புதுசா நடிக்க வர யாருக்கும் அவங்க கூட வொர்க் பண்றது நல்ல அனுபவமா இருக்கும். நிறைய கத்துக்கலாம்."  

"இப்ப நீங்க நடிச்சுட்டு இருக்கற’ என்கிட்ட மோதாதே’ படத்துல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க"

"என்னை அறிந்தால் படத்துல நடிச்சிட்டு  இருந்த சமயத்துல கமிட் ஆன கிராமத்து சப்ஜெட் படம் இது. ஒருவேளை ’கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்துக்குப் பிறகு இந்தப் படம் கிடைச்சிருந்தால் இதுல நடிச்சிருக்கவே மாட்டேன். ஏன்னா.. எனக்கு நடிப்புக்கான ஸ்கோப் அதிகம் இல்லாத படம் இது. ஆனா கிராமத்து பொண்ணு கேரக்ட்டர்ங்கறதுனால என்னோட லுக் இதுல வித்தியாசமா இருக்கும்."
 
"கேரள பெண்ணான நீங்க, ஜல்லிக்கட்டு பிரச்னையை எப்படி பார்க்கிறிங்க?"

"இந்தியாவை பொறுத்தவரை நம்ம, கலாசாரத்துக்கு கட்டுப்பட்டவங்க. அப்படி இருக்கும் போது எங்க இருந்தோ வந்த ஒரு அமைப்பு, தமிழ் நாட்டோட பாரம்பரியமான விளையாட்டை தடை பண்ணனும்னு நினைக்கறது தப்பு. இங்க விலங்குகளை துன்புறுத்தலை. நம்ம பண்பாட்டை பாதுக்காக்கறதுக்கான எல்லா உரிமையும் நம்ம கிட்ட இருக்கு. இத்தனை ஆயிரம் பேர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம போரடறதுங்கறது உண்மையிலயே ஆச்சரியமான விஷயம். என்னோட ஆதரவு அவங்களுக்கு எப்பவும் உண்டு." 
 
"சென்னை வந்தால் அடிக்கடி போற இடம்?"

ஃபுட் ரெஸ்ட்ரான்ட்ஸ்தான். மால், பீச், கோவில், தியேட்டர்ன்னு ஃப்ரண்ட்ஸ் கூட போயிருக்கேன். சென்னை அட்மாஸ்பியர் எனக்கு ரொம்ப பிடிக்கும்." 

 

                                                                                                                                                - ச.ஆனந்தப்பிரியா 
    

நீங்க எப்படி பீல் பண்றீங்க