“பேயைப் பார்த்து சிரிக்கிறவங்க, ‘நயன்தாரா’வைப் பார்த்து பயப்படுவாங்க..!” - ‘டோரா’ ஸ்பெஷல் #VikatanExclusive | Dora movie director Doss Ramasamy interview

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (15/03/2017)

கடைசி தொடர்பு:16:13 (15/03/2017)

“பேயைப் பார்த்து சிரிக்கிறவங்க, ‘நயன்தாரா’வைப் பார்த்து பயப்படுவாங்க..!” - ‘டோரா’ ஸ்பெஷல் #VikatanExclusive

Nayanthara

‘மாயா’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’, ‘அறம்’ என கதாநாயகியின் கதாபாத்திரத்திரத்தை முக்கியமாகக் கொண்ட படங்களை அதிகம் தேர்வு செய்து வருகிறார் நயன்தாரா. இதில் ‘மாயா’ படத்துக்குப் பிறகு வெளிவரும் பேய்ப்படம் ‘டோரா’ என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தைப் பற்றி பேசலாம் என ‘டோரா’ படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமியைத் தொடர்பு கொண்டோம். 

Doss Ramasamyமுதலில் உங்களைப் பற்றி சொல்லுங்க பிரதர்..?

“எட்டு வருஷத்துக்கு முன்னாடி தொலைக்காட்சில ஒர்க் பண்ணிட்டு இருக்கும்போது இயக்குநர் சற்குணம் சார் பழக்கமானார். அதுக்கப்புறம் அவர்கிட்ட உதவியாளராக சேர்ந்தேன். ‘களவாணி’ படத்தில் இருந்து ‘சண்டிவீரன்’ படம் வரைக்கும் அவர்கிட்ட ஒர்க் பண்ணினேன். இப்போ இயக்குநரா என்னோட முதல் படத்தை முடிச்சிருக்கேன்.”

உங்களோட முதல் படத்துலையே நயன்தாரா நடிச்சிருக்காங்க, எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு..?

“இந்த வாய்ப்புக்கு கதைதான் காரணம். ‘நயன்தாரா மேடத்தோட கால்ஷீட் இருக்கு, நீ கதை சொல்றீயா’னு சற்குணம் சார் கேட்டார். அப்போ நான் வேற ஒரு கதையை ரெடி பண்ணிட்டு இருந்தேன். சார் சொன்னதும் நயன்தாரா மேடத்துக்காக ஒரு கதை ரெடி பண்ணுனேன். அது அவங்களுக்கும் பிடிச்சிருந்தது, தயாரிப்பாளர்களுக்கும் பிடிச்சிருந்தது. அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.” 

 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நயன்தாரா அதிக ஆர்வம் காட்டிட்டு வராங்க. அந்த வரிசையில் இந்தப் படம் அவங்க கேரியர்ல எந்த மாதிரியான படமா இருக்கும்..? 

“இது கமர்ஷியலான பேய்ப்படம்தான். வாராவாரம் வந்துட்டு இருந்த பேய்ப்படங்கள் எப்போ குறைஞ்சதோ அப்போ தான், நான் இந்த பேய்ப்படத்தை ஸ்டார்ட் பண்னேன். மத்த பேய்ப்படங்களில் மக்கள் பார்க்காத விஷயங்களை இந்த படத்தில் காட்டணும்னு ஆரம்பத்தில் இருந்தே ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். காரை வச்சு நிறைய பேய்ப்படங்கள் வந்திருக்கு. அதிலிருந்தும் இந்தப் படத்தை எப்படி வித்தியாசப்படுத்தலாம்னு யோசிச்சேன். முன்னாடியெல்லாம் பேய்ப்படங்களை பார்க்கும்போது மக்கள் பயப்படுவாங்க. ஆனால், சமீபத்துல பேய்ப்படங்களை அதிகமா பார்த்து பார்த்து பேய் வந்தாலே சிரிக்கிறாங்க. ஒரு ஷாட்டுல கேமரா மெதுவா மூவ் ஆகி போய்கிட்டு இருந்தாலே, ‘ஏய் பேய் வரப்போகுது’னு சிரிக்கிறாங்க. அதை நானே தியேட்டர்ல பார்த்திருக்கேன். அது மாதிரியான விஷயங்கள் இந்த படத்தில் இருக்காது. பேயைப் பார்த்து சிரிச்சவங்க எல்லாரும் ‘டோரா’வையும் நயன்தாராவையும் பார்த்து பயப்படுவாங்க.

Nayanthara

‘மாயா’ படத்தோட ஹிட்டுனால, நயன்தாரா மேடம் பெரிய மார்க்கெட் கிரியேட் பண்ணி வச்சிருக்காங்க. அதை நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். அது எனக்கும் பயன்பட்டுச்சு. இந்த படத்தோட டீசர்ல பார்த்தீங்கன்னா, ஹீரோ மாதிரி சட்டை கையை மடிச்சு விட்டு நயன்தாரா நடந்து வருவாங்க. அதே மாதிரியான மாஸ் மொமென்ட் படத்தில் அதிகமா இருக்கு. அது எல்லாமே கதையோட கலந்த மாதிரி வரும்.” 

‘டோரா’ படத்தின் ஸ்பெஷலா நீங்க நினைக்கிறது..?

“பேய்தான் ஸ்பெஷல்னு நினைக்கிறேன். ரெகுலரான படம் மாதிரி இது இருக்காது. படம் பார்க்கும்போது வித்தியாசமான உணர்வு கிடைக்கும்னு நினைக்கிறேன். அதுதான் இந்தப் படத்தில் ஸ்பெஷலா நான் நினைக்கிறது.”

‘டோரா’ படத்தில் யாரெல்லாம் முக்கியமான வேடங்களில் நடிச்சிருக்காங்க..?

“நயன்தாரா மேடம் பவளக்கொடிங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. பவளக்கொடிக்கு அப்பாவாக தம்பி ராமையா நடிச்சிருக்கார். ஹரீஷ் உத்தமன் போலீஸா நடிச்சிருக்கார். ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’ படத்தில் வில்லனா நடிச்சவர், இந்த படத்திலும் வில்லனா நடிச்சிருக்கார். இவங்களைப் போல காரும் இந்தப் படத்தில் ஒரு முக்கியான ரோல்.”

Nayanthara

படம் எப்படி வந்திருக்கு..?

“நான் என்ன நினைச்சு எடுத்தேனோ, அப்படியே படம் வந்திருக்கு. தயாரிப்பாளரும் நயன்தாரா மேடமும் படம் பார்த்துட்டாங்க. அவங்களுக்கும் படம் பிடிச்சிருக்கு. அவங்க ஹாப்பினா நானும் ஹாப்பி தான்.” 

நயன்தாராவை பற்றி வெளியில் தெரியாத விஷயம் ஒண்ணு சொல்லுங்க..?

“யாருக்கும் தெரியாத விஷயம்னு எதுவும் எனக்கு தெரியலை. எல்லாரும் சொல்றதுதான். ரொம்ப டெடிக்கேஷன், ஹார்ட் ஒர்க் பண்ணுவாங்க. என்னை ஒரு புதுமுக இயக்குநராகவே அவங்க நினைக்க மாட்டாங்க. அந்தளவுக்கு மரியாதை கொடுத்தாங்க. எனக்கு மட்டும்னு இல்ல, யாராயிருந்தாலும் அப்படித்தான். எல்லாருக்கும் மரியாதை கொடுத்து, அவங்களை மதிப்பாங்க. அவங்ககிட்ட நான் கத்துக்கிட்டது இந்த விஷயத்தை தான்.” 

படம் எப்போ ரிலீஸ்... உங்களோட அடுத்தப்படம் ப்ளான் பண்ணிட்டீங்களா..?

“மார்ச் 31ம் தேதி ரிலீஸ் பண்ணலாம்னு பேசிட்டியிருக்கோம். இன்னும் உறுதியாகலை. இந்தப் படம் ரிலீஸ்க்கு அப்பறம்தான் என்னோட அடுத்தப்படத்தை ப்ளான் பண்ணணும்.”

வாழ்த்துக்கள் பிரதர்...

- மா.பாண்டியராஜன்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close