Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"சீரியல்னா தினம் புது டிரஸ்னு நினைச்சேன். ஆனா, நடந்தது என்னன்னா?!’’ - ஸ்ருதி ராஜ் ஃப்ளாஷ்பேக்

நடிகை ஸ்ருதி ராஜ்

“நான் புகழ்பெறணும், சொந்த கால்ல நின்னு சாதிக்கணும்னு அப்பா ரொம்பவே ஆசைப்பட்டாரு. ஆனா, அதைப் பார்க்க அவர் உயிரோட இல்லை. ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவுகளோடு என் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கேன்” என நெகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார், நடிகை ஸ்ருதி ராஜ். சன் டிவியின் ‘தென்றல்’ சீரியலில் துளசியாக நம்மைக் கவர்ந்தவர், இப்போது, ‘அபூர்வ ராகங்கள்’ பவித்ராவாக அசத்திவருகிறார். 

“உங்க ஆக்டிங் என்ட்ரி எப்படி ஆரம்பிச்சது?” 

“ஏழாவது படிச்சுட்டிருந்தப்போ ஒரு மலையாளப் பத்திரிகையில் வந்த என் போட்டோவைப் பார்த்து, ‘மாண்புமிகு மாணவன்’ தமிழ்ப் படத்தில் முக்கியமான ரோல் கிடைச்சுது. ஸ்கூல் பொண்ணான நான், அந்தப் படத்தில் காலேஜ் ஸ்டூடண்ட்டாக நடிச்சது வித்தியாசமான அனுபவம். அடுத்து, சில தென்னிந்திய படங்களில் ஹீரோயினா நடிச்சேன். தாய்மொழியான மலையாளத்தில் நடிகர் மம்முட்டி சாரின் படத்தில் முக்கிய ரோல் பண்ணினேன். படிப்புல கவனம் செலுத்தறதுக்காக, சினிமாவுக்கு ப்ரேக் விட்டேன்.” 
 

நடிகை ஸ்ருதி ராஜ்

“நடிகர் விஜய்யை சந்திச்சுப் பேசறது உங்க பெரிய கனவாமே...” 

“ ‘மாண்புமிகு மாணவன்’ படம் விஜய் அண்ணாவுக்கு, ஹீரோவாக ஆரம்ப கட்டம். நாங்க அண்ணா, தங்கச்சின்னுதான் கூப்பிட்டுக்குவோம். அப்போ அவரோட பிறந்தநாளுக்கு வீட்டுக்குப் போய் வாழ்த்துச் சொன்னேன். அவரும் அவரோட பேரண்ட்ஸூம் ரொம்ப கேஷுவலா, ஜாலியா பழகுவாங்க. விஜய் அண்ணாவின் தங்கச்சி இறந்த சோகத்தை, அவர் எப்பவுமே மனசுக்குள்ள வெச்சிருப்பாரு. எனக்கும் அண்ணன் இல்லாத ஃபீலிங் இருந்துச்சு. அதனால், இப்போ வரை அவரைச் சொந்த அண்ணனாகவே நினைக்கிறேன். இப்போ மாஸ் ஹீரோ ஆகிட்டாரு. ரொம்ப வருஷம் ஆனதால், அவருக்கு என்னை ஞாபகம் இருக்கான்னு தெரியலை. அவரைச் சந்திக்கணும். ஒரு தங்கையாக கண்ணீர்விட்டு அழுது, அவருடன் பழகின நினைவுகளையும் பேசணும்.” 

“சினிமாவைவிட சீரியல்தான் உங்களுக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்குபோல....” 

“உண்மைதான். சினிமாவுக்கு வரணும்ங்கிற எந்த இலக்கும் எனக்கு இருந்ததில்லை. எதேச்சையாக நடந்தது. ஒரு கட்டத்தில் சினிமாதான் கெரியர்னு முடிவெடுத்தபோது, சரியான அடையாளம் கிடைக்கலை. 2009-ம் வருஷம் சன் டிவி ‘தென்றல்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சுது. தமிழிலும் தெலுங்கிலும் ஆறு வருஷம் ஒளிபரப்பான அந்த சீரியல், பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. இப்போ வரை என்னைப் பார்க்கும் ரசிகர்கள் ‘தென்றல்’ துளசின்னு சொல்லித்தான் பாராட்டறாங்க." 

நடிகை ஸ்ருதி ராஜ்

“ஆரம்பத்தில் ‘தென்றல்’ சீரியலில் நடிக்க தயங்கினீங்களாமே...” 

“மனசுக்குள்ளே தயக்கமும் பயமும் இருந்தது உண்மைதான். ஏன்னா, ‘தென்றல்’ சீரியலுக்கு முன்னாடி அந்த பிரைம் டைமில், விகடன் தயாரிப்பில் தேவயானி மேம் நடிச்ச ‘கோலங்கள்’ பெரிய ஹிட் ஆகியிருந்துச்சு. அவங்க பெரிய ஹீரோயின். அந்த அளவுக்கு மக்களைத் திருப்தி பண்ண முடியுமானு பயம். ஆனால், கொஞ்ச நாளிலேயே சீரியல் பெரிய ஹிட் ஆகிடுச்சு. பல வருஷங்கள் நடிக்கப்போகும் சீரியல். நிறைய டிரெஸ், ஜூவல்ஸ் போட்டுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா, கதைப்படி நான் ஒரு மிடில் கிளாஸ் பாட்டியின் வளர்ப்பில் வாழும் பேத்தி. மூணே மூணு தாவணியும், ஒரு சாதாரண கழுத்துப் பாசியும்தான் கொடுத்தாங்க. பல வருஷங்களுக்கு அதுதான் எனக்கான காஸ்ட்டியூம். ஒரு கட்டத்துக்குப் பிறகு அதுவே எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துடுச்சு." 

“அப்பாவை நினைச்சு தினமும் வருத்தப்படுறீங்களாமே...” 

“நான் பெரிய சினிமா ஆர்டிஸ்டா வரணும்னு அப்பா ஆசைப்பட்டாரு. ‘தென்றல்’ சீரியல் ரெண்டு வருஷத்தைக் கடந்து பெரிய ரீச்சோடு இருந்த நேரத்தில் இறந்துட்டார். ரொம்பவே நிலைகுழைஞ்சுட்டேன். இப்போ நான் நல்ல நிலையில் இருக்கிறதைப் பார்த்து சந்தேஷப்பட அப்பா இல்லையேன்னு அடிக்கடி வருத்தப்படுறேன்.” 

நடிகை ஸ்ருதி ராஜ்

“அடுத்து என்ன மாதிரியா ரோலுக்காக வெயிட்டிங்...” 

“ ‘தென்றல்’ சீரியலில், என் சித்தியா வரும் சாதனா அம்மா, ஒருசமயம் என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்திடுவாங்க. அதை நிஜம்னு நினைச்ச நிறைய பெண்கள், ‘நீ என் வீட்டுக்கு வந்துடு. உன்னை நான் பத்திரமா பார்த்துக்கிறேன்’னு சொன்னாங்க. அப்போ எனக்கு வந்த உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. சீரியல் முடியும் நேரத்தில் எனக்குள் பெரிய தவிப்பும் கஷ்டமும் இருந்துச்சு. என் லைஃப்ல மறுபடியும் ‘தென்றல்’ மாதிரியான ரோல் கிடைக்கணும்னு எதிர்பார்ப்புடன் இருக்கேன்.” 

“இப்போ என்னென்ன புராஜெக்ட்ஸ் போயிட்டு இருக்குது?” 

“ ‘தென்றல்’ முடியும் சமயத்திலேயே, விஜய் டிவியின் 'ஆபீஸ்' சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அடுத்து ஜீ தமிழில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்'. இப்போ, சன் டிவியின் ‘அபூர்வ ராகங்கள்’ ரெண்டு வருஷமா வந்துட்டிருக்கு. எனக்கான ஆடியன்ஸை தொடர்ந்து தக்கவெச்சுக்கிட்டு இருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி ராஜ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement