Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘எங்க டீமை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுப்பாருங்க..!'' - 'As I'm Suffering From Kadhal' சனந்த் அண்ட் சஞ்சனா

பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் 'As I'm Suffering From Kadhal' எனும் வெப் சீரியஸ் மக்களிடயே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. அதில் ஏராளமானோருக்குப் பிடித்த லிவிங் டுகெதர் ஜோடி பத்ரி - திவ்யாவுடன் ஒரு ஜாலி சாட்!  

As I'm Suffering From Kadhal

''எப்படி இந்த வாய்ப்பு வந்தது?''

''எனக்கு இதோட ஆடிஷன் நடக்குதுனு கால் பண்ணினாங்க. அதுல நான் செலக்ட் ஆனது பாலாஜி மோகன் பண்ணின சந்தோஷ் கேரக்டருக்குதான். ஆனா அது கொஞ்சம் கல்யாணம் ஆன மாதிரி இருக்கணும்ங்கிறதால பத்ரி ரோல் கிடைச்சது, ப்ளஸ் எனக்கு அது சூட்டும் ஆச்சு. எனக்கு இருந்த காமெடி சென்ஸுக்கும் அது செமயா செட் ஆச்சு" என சனந்த் அவருக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிப் பகிர்ந்தார். ''நானும், பாலாஜி மோகனும் ஏற்கெனவே ஒரு ஷார்ட் ஃபிலிம்ல வொர்க் பண்ணதுனால இந்த வாய்ப்பு கிடைச்சது. ஆடிஷன்ல எனக்கும் நக்‌ஷத்ரா பண்ணவேண்டிய ரோல்தான் மொதல்ல வந்தது. அப்புறம் சில காரணங்களால திவ்யா ரோலே பெட்டரா இருக்கும்ன்னு அதையே பண்ணேன்'' என்று தனக்கு வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்தார் சஞ்சனா. 

''உங்க ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி எப்படி வொர்க்அவுட் ஆச்சு?''

சிரித்தபடி இருவரும், "நாங்க இதுக்கு முன்னாடி பார்த்துருக்கோம் ஆனா பெருசா பேசிக்கிட்டது இல்ல. முதல் நாள் ரெண்டு பேருக்கும் சுத்தமா செட் ஆகாம 10 டேக் வரைக்கும் போயிடுச்சு. அப்புறம்தான் கொஞ்சம் செட் ஆகி நல்லபடியா முடிஞ்சது. எங்க ரெண்டு பேரோட கேரக்டரும் ஜாலியா இருந்தனால பாக்குறவங்களுக்கும் கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. ஷூட்டிங் போயிட்டு இருக்கும்போது ராகவ் தன்விதான் எல்லாருக்கும் பிடிச்ச ஜோடியா இருப்பாங்கன்னு ஃபீல் ஆச்சு, ஆனா அவங்களவிட எங்களுக்கு நிறைய பாராட்டுகள்லாம் கிடைச்சது''. 

''வெப் சீரிஸ்... எப்படி யோசிக்காம பண்ணணும்னு தோனுச்சு?''

''எல்லா நடிகர்களுக்குமே வெப் சீரிஸ்னு வரும்போது தயக்கமும், பயமும் இருக்கும். அதைக் கொஞ்சம் மாத்தலாம்னுதான் நான் தைரியமா எடுத்துப் பண்ணேன். அது மட்டுமில்லாம ஆன்லைன் மீடியம் நிறைய வந்துருச்சு. புதுசா நிறைய சேனல்களும் வந்துருச்சு. எல்லா நடிகர்களுமே எல்லாத்துலேயும் நடிக்கணும்ங்கிறதுதான் என் ஆசை. ஒரு டைரக்டர் பாயின்ட் ஆஃப் வியூல பாலாஜி ஸ்கோர் பண்ணிட்டார். ஒரு நடிகனா நாங்க இதைத் தொடங்கி வெச்சுட்டோம். புதுசா ஏதாவது நடந்தாதான் ஒரு விஷயத்தை மாற்ற முடியும். பெரிய நடிகர்களும் வெப் சீரிஸ் பண்ணனும்" என்றார் சனந்த். தனக்கே உரிய டெம்ப்ளேட் சிரிப்போடு பதில் சொல்ல ஆரம்பித்த சஞ்சனா, "என்னோட ஆசையும் அதுதான். அது ஒரு வெப் சீரிஸ்ங்கிறதை மறந்துட்டு எல்லோருமே என்ஜாய் பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. பாலாஜி பண்ணிணது ரொம்ப நல்ல விஷயம். பாலிவுட் மாதிரியே தமிழ்லேயும் இது மாதிரி வெப் சீரிஸ் நிறைய வர ஆரம்பிக்கணும்.'' 

''லிவிங் டுகெதரை பற்றி பெர்சனலா உங்களுக்கு என்ன ஒப்பீனியன்?''

சனந்த் சஞ்சனா

இருவரும் குபீர் சிரிப்புடன் பதில் சொல்லத் தொடங்கினார்கள்... "பெர்சனலா... அமைஞ்சா... ஓகேதான். கிடைச்சா கண்டிப்பா நல்லாதான் இருக்கும். இப்போ வரைக்கும் ஒண்ணும் அமையவே இல்ல. அமையும் போது பார்த்துக்கலாம்.' என்றார் சனந்த். "எனக்கும் பெர்சனலா இதைப் பற்றி அப்ஜெக்‌ஷன் எல்லாம் இல்லை. இதுல பத்ரி - திவ்யா ஜோடியில திவ்யா எப்படியோ அப்படிதான் சஞ்சனாவும். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸா எடுத்துக்க மாட்டேன். எப்பவுமே ஜாலியாதான் இருப்பேன். லிவிங் டுகெதர் இப்போ வரைக்கும் ஐடியா இல்லை, வந்தா பார்ப்போம்'' என்றார்.

''மொத்தமா எல்லா எபிசோடுகளையும் இறக்கிவிட்டீங்களே, எதுவும் காரணம் இருக்கா? அடுத்த சீரிஸ்ல பத்ரி - திவ்யா இருப்பாங்களா?''

''பொதுவா இங்கிலீஷ்ல எல்லாம் சிரீஸ் பார்த்தாலும் ஒரு எபிசோட் பார்த்துட்டு அடுத்துப் பார்க்க ஒரு வருஷம் வெயிட் பண்ணனும். கேம் ஆஃப் த்ரோன்ஸ்ல ஆரம்பிச்சு எல்லாப் பெரிய நாடகங்களும் அப்படித்தான். அதுக்குக் காரணம் அதுல நிறைய ட்விஸ்ட் இருக்கும், நமக்குத் தெரிஞ்சுக்கணும்னு மண்டை குழம்பும். இது ஃபீல் குட் சீரியல்ங்கிறதால மொத்தமா விட்டுட்டோம். பெரிய ட்விஸ்டோடதான் முடிச்சுருக்கோம். அதுவும் எங்களோடதான் முடியுது, அதனால கண்டிப்பா திவ்யா - பத்ரி அடுத்த சீரிஸ்ல இருப்பாங்க. அப்படியே தூக்கினாலும் ரெண்டு, மூணு எபிசோட் வெச்சுருந்து அப்புறம்தான் தூக்குவாங்க உடனே தூக்கிற மாட்டாங்க. புது கேரக்டர்ஸ் வரலாம், அதுக்காக நாங்க இருக்க மாட்டோம்னு சொல்லமுடியாது. கண்டிப்பா அதுல நாங்க இருப்போம். அது எப்போன்னுதான் தெரியல'' என்றார்கள் இருவரும்.

''ஷூட்டிங்லேயும் அதே ஜாலிதானா? இல்ல சீரியஸா போகுமா?''

''அதே ஜாலி கொஞ்சம்கூட குறையாம இருக்கும். இதுவரைக்கும் நான் வொர்க் பண்ணுதுலேயே பாலாஜி மோகன்தான் ரொம்ப சைலன்ட் டைப். ரொம்ப அதிகமா பேசவே மாட்டார். தன்யா ரொம்ப ஜாலியான கேரக்டர். அவங்க அதுல நடிச்சது மட்டும் இல்லாம, இந்த சீரிஸ்ல அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்து சில வேலைகள் எல்லாம் பார்த்துருக்காங்க. ரொம்ப ஹெல்ப்பிங் கேரக்டர். குறைன்னு சொல்ற அளவுக்கெல்லாம் அங்க எதுவுமே நடக்காது’' என்றார் சஞ்சனா. 'நான் ஏற்கெனவே  டிமாண்டி காலனி படத்துல வொர்க் பண்ணதால அபிஷேக் கூட நடிச்சது ஈஸியாதான் இருந்தது, ரொம்ப ஜாலியா இருந்தது. நக்‌ஷத்ரா கூடவும் நான் வொர்க் பண்ணியிருக்கேன். அதனால அந்த ஜோடியோட நடிச்சதுல செம ஜாலிதான். முதல் ரெண்டு நாள்கள் கொஞ்சம் தயக்கம் இருந்தது, பழகின பிறகு ஜாலியாதான் இருந்துச்சு'' என்றார் சனந்த்.

''ரெண்டு பேருக்கும் இதை வைத்து வேற எதுவும் பட வாய்ப்புகள் வந்துச்சா?''

''நான் கார்த்திக் சுப்பராஜ் படத்துல லீடிங் ரோல்ல நடிச்சிட்டு இருக்கேன். நான் ஏற்கெனவே சில படங்கள்ல நடிச்சதால வாய்ப்புக் கிடைக்கிறது ஈசியாதான் இருக்கு'’ என்றார் சனந்த். '’எனக்கு இதுவரைக்கும் பெரிய வாய்ப்புகள் வரல. ரெண்டு, மூணு படங்கள் வந்துச்சு. ஆனா கொஞ்சம் பார்த்துட்டு நடிக்கலாம்னு இருக்கேன்’ என்று சஞ்சனா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது 'என்ன இப்படி சொல்றீங்க... நீங்கதான் டாக் ஆஃப் தி டவுன்னு சொல்றாங்க... பசங்க எல்லாரும் திவ்யா, திவ்யானு அலையுறாங்க' என்று கலாய்த்தார் சனந்த். 

பிக் பாஸ் பார்க்குறீங்களா..?

‘’இன்னும் ஒரு எபிசோடுக்கூட பார்க்கலை. ஆனா, அது சம்பந்தமா வர ட்ரோல் வீடியோ எல்லாம் பார்த்திருக்கேன். அந்த வீட்டுகுள்ள எல்லாரும் ரொம்ப சீரியஸா இருக்காங்க. 100 நாள் ஒரு வீட்டுக்குள்ள ஜாலியா இருந்துட்டு வரலாம். என்ஜாய் பண்ணிட்டு வராம, சண்ட போட்டுட்டு இருக்காங்க. எங்க டீமை மட்டும் அந்த வீட்டுகுள்ள விட்டிருந்தா, செம ரகளையா இருந்திருக்கும்’’ என்றார் சனந்த். 

''இது சனந்துக்கான கேள்வி... படத்துல நடிச்சுட்டு இருக்கும் போது திடீர்ன்னு ஏன் வெப் சீரிஸ் உள்ள வரணும்னு தோனுச்சு?''

Sananth

''இதுல எனக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு, ஆரம்பத்துல எனக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செஞ்சது, இல்லைன்னு சொல்லல. நல்லா யோசிச்சுப் பார்த்தேன். இதைக் கண்டிப்பா நாமதான் ப்ரேக் பண்ணி ஆகணும். எல்லா நடிகர்களும் இதுலேயும் வரணும்னு ஒரு சின்ன ஆசையிலதான் நடிக்க முன்வந்தேன். நிறைய மக்கள் இருக்கிற இடத்துல இருந்தே படமும், சீரிஸும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் இல்லாம நம்ம ஊர் ஆளுங்களுக்கு இங்கிலீஷ் சீரியல் மேல ஒரு சின்ன ஈர்ப்பு இருக்கு. அது ஏன் நம்ம ஊர்ல இருந்து வந்ததா இருக்கக்கூடாதுன்னு பண்ண ஆரம்பிச்சேன். நான் ஆரம்ப காலத்துல நிறைய ஷார்ட் ஃப்லிம்ல நடிச்சுருக்கேன். இங்க வெப்ல நடிக்கிறதையும் நான் சினிமா மாதிரிதான் பாக்குறேன்.''

''இது சஞ்சனாவுக்கான கேள்வி, இதுல நடிக்க வர்றதுக்கு முன்னாடி சஞ்சனா யாரு?''

Sanchana

''நான் விஸ்காம் முடிச்சுட்டு மாடலிங், ராம்ப் வாக் பண்ணிட்டு இருக்கேன். நான் ராஜ் டி.வி-யில ஒரு ஷோவில் கலந்துகிட்டேன். அது மூலமாதான் எனக்கு பாலாஜி மோகனைத் தெரியும். பாலாஜி சக்திவேல் சாரோட படத்துல நடிச்சுட்டு இருந்தேன். இன்னும் அந்தப் பட ஷூட் முடியல. நாலு வருஷம் ஆச்சு சில பல காரணங்களால இன்னும் ஹோல்டுலேதான் இருக்கு. படம் பெயர் ரா ரா ராஜசேகர் என்று சஞ்சனா சொன்னதும், 'ஓஹோ நீங்கதான் அதுல ஹீரோயினா' என்று கலாய்த்தார் சனந்த். 

''இந்த லிவிங் டுகெதர் ஜோடிக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது? வீட்டுல என்ன சொன்னாங்க?''

''இது ரிலீஸ் ஆனதும் ஒரு வாரம் நான் ஊர்ல இல்ல, அதனால எனக்குத் தெரியல. ஊருக்கு வந்த அப்புறம் நிறையபேர் பாராட்டினாங்க. சோஷியல் மீடியாவுல கொஞ்சப்பேர் கழுவியும் ஊத்துனாங்க. நல்லவேளை எங்க ஸ்க்ரிப்ட்டுல பெருசா கெட்டவார்த்தை இல்ல. அதனால நாங்க எஸ்கேப் ஆகிட்டோம். வீட்டுல நான் இதைப் போட்டுவிட்டு மாடிக்குப் போயிட்டேன்.  பார்த்துட்டு நல்லா இருக்குனு சொன்னாங்க, ஆனா எனக்குத் தெரியும் அவங்களுக்கு பிடிச்சுருக்காதுன்னு. ஏன்னா இது முழுக்க யூத்துக்கு பிடிச்ச ஒரு விஷயம்" என்று சனந்த் தனது வீட்டில் நடந்த அனுபவத்தைக் கூறினார். "எங்க வீட்டுல அப்படியே ஆப்போசிட். எப்படியும் நாலு தடவ பார்த்துருப்பாங்க. எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்கிட்டயும் போட்டுக் காட்டிட்டு இருந்தாங்க. போர் அடிக்கும்போது எல்லாம் இதை ஜாலியா பார்த்து சிரிச்சுட்டு இருப்பாங்க'' என்று தன் வீட்டின் அனுபவங்களையும் பகிர்ந்தார் சஞ்சனா.

''ஸ்க்ரிப்ட்ல இல்லாம நீங்களா ஏதாவது சேட்டை பண்ணீங்களா?''

''கார்ல இடிக்கிறமாதிரி ஒரு சீன் வரும். நைட் எடுத்த அந்த ஷாட்தான் அன்னைக்குக் கடைசியா எடுத்தது. அது ஒரே ஷாட்ல ஒரு ஃப்ளோவா போயிட்டே இருக்கும். அந்த சீன் நாங்க பண்ணும்போது முழு திருப்தியில்லை. பாலாஜிகிட்ட கேட்டா, 'இல்ல இல்ல இது நல்லாதான் வந்துருக்கு சூப்பரா இருக்கு'னு சொல்லிட்டார். சனந்துக்கு அந்த சீன்ல கொஞ்சம் உடன்பாடு இல்லாம இருந்தது. ’இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுக்கலாமோன்னு தோணுது’னு சொன்னார். ரிலீஸானதுக்கு அப்புறம் எங்க ஜோடியோட கனெக்ட் பண்ணின சீன்னு அதைதான் சொல்லணும் அந்தளவுக்கு ரொம்ப நல்லா வந்து இருந்தது'' என்றார் சஞ்சனா.

''சீரியலுக்கு முன்னாடி, பின்னாடி உங்க பழக்கம் எப்படி இருக்கு?''

Sananth - Sanchana

''நாங்க பழகுன முதல் நாள் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆரம்பத்துல ரெண்டு நாள் அவங்க ஒரு பக்கம் இருப்பாங்க நான் ஒரு பக்கம் இருப்பேன், ரெண்டு பேருக்கும் சீன் வரும்போதுதான் பேசிக்குவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் க்ளோஸா பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாத்துக்கும் நான் கலாய்க்க ஆரம்பிச்சுட்டேன், இவங்க லொட லொடனு பேசிக்கிட்டே இருந்தா நான் அப்படியே நடந்து போயிடுவேன். இதுனால ரொம்பக் கஷ்டப்படாம இயல்பா ரெண்டு பேருக்கும் நடிக்க வந்தது. அந்த சீரியல்ல பத்ரி கொஞ்சம் இன்னஸன்ட்டா இருப்பான், திவ்யா அதிகமா பேசுவா. நிஜ வாழ்க்கைலேயும் அப்படித்தான். அதுக்காக லிவிங் டுகெதரான்னு கேட்காதீங்க. ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான்'' என்று கண் அடித்தபடி சொல்லி முடித்தார் சனந்த்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்