"எல்லோருக்கும் அது தப்பாத் தெரியறப்போ மன்னிப்புக் கேட்கிறதுல தப்பில்லையே!" - காயத்ரி ரகுராம் அம்மா #BiggBossTamil

காயத்ரி ரகுராம் அம்மா

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்த நாள்முதலே சர்ச்சைக்கு பெயர்போனதாகியிருக்கிறது. 'பிக் பாஸ்' பற்றி தினமும் ஒரு விஷயத்தை மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'டி.ஆர்.பி-க்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள், இது ஒரு ஸ்கிரிப்டட் புரோகிராம்' எனப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது அதிக சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது காயத்ரி ரகுராம். காரணம் அவர் பேசிய வார்த்தைகள்...

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம், ஓர் இடத்தில் 'எச்சை' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார். சமீபத்தில், 'சேரி பிஹேவியர்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தபோது காயத்ரியின் அம்மா கிரிஜா அமெரிக்காவில் இருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பியவரிடம் நாம் முதன்முறையாகப் பேசி, அவரது பேட்டியைப்  ''என் பொண்ணைத் தவிர மத்த எல்லாரும் நடிக்கிறாங்க...!'' - காயத்ரி ரகுராம் அம்மா என்கிற தலைப்பில் பதிவுசெய்தோம். இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த கிரிஜா, காயத்ரி சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்பதாக கூறியிருந்தார். இது பற்றி அவரிடம் மீண்டும் பேசினோம். 

காயத்ரி ரகுராம்

'' 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கிறவங்களுக்கு வெளியில் என்ன நடக்குதுனு தெரியலை. அப்படித் தெரியுற மாதிரி இருந்தால், இப்படி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதும் திட்டுவதும் நடக்காது. என் மகள் காயத்ரி ஒரு கோபத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாரே தவிர, அதற்கு உள்நோக்கம் எதுவுமில்லை. அவள் கூறியது 'தவறான வார்த்தை' என்பதுகூட அவளுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். தன் நிலையை மீறி தவறாகப் பேசும் குணம் அவளுக்கு இல்லை. தவறுதலாக அவள் பயன்படுத்திய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. இந்நேரம் காயத்ரி வெளியில் இருந்திருந்தால், அவளும் மன்னிப்பு கேட்க தயங்கியிருக்க மாட்டாள். எல்லோருக்கும் அந்த வார்த்தை தவறாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் வருத்தமான குரலில். 

தொடர்ந்து, ''உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு என் பொண்ணைப் பற்றியே பேசறாங்க. ஒரு தாயாக எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு. வெளியில் என்ன நடக்கு எனத் தெரியாம உள்ளே என் மகள் இருக்கா. அவளைப் பார்க்கணும்னு விஜய் டி.வியில் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அனுமதிக்கலை. என் பொண்ணு எப்போ வருவானு எதிர்பார்த்துட்டிருக்கேன். மொத்தத்தில், என் பொண்ணு பலிகாடா ஆகிட்டிருக்கா. என் இடத்தில் இருக்கும் தாய்க்குத்தான் அந்த வலி தெரியும். விதிப்படி என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்'' என்றார் வேதனையாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!