Published:Updated:

``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க 'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி

வே.கிருஷ்ணவேணி

"நான் புதுசா ஏதாவது பண்ணாலோ, எங்காச்சும் போனாலோ என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்ல அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, இப்போ ஷேர் ஆகிட்டு இருக்கிற இந்தப் படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்னாடி எடுத்தது."

``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க  'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி
``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க 'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி

`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், நடிகை சுஜா வரூணி, கடந்த வருடம் சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சிவக்குமாரைத் திருமணம் செய்துகொண்டார். `பிக் பாஸ்' சமயத்தில் இந்தத் தம்பதிக்கு நடிகர் கமல் தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். `எனக்குப் பிடித்த டிஷ்ஸை நீங்களும் ஒருநாள் சமைத்துக் கொடுக்கவேண்டும்' என்று சுஜா - சிவக்குமார் தம்பதியிடம் சொல்லியிருந்தார், கமல். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்ற அப்டேட்டிற்காக சுஜா வரூணியிடம் பேசினேன்.

``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க  'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா, அண்ணன் போன்ற எந்த ஆண் துணையும் இல்லாமலேயே இத்தனை வருடம் வாழ்ந்துட்டேன். எனக்கு அப்பா என்கிற ஃபிலீங்கைக் கொடுத்தது, கமல் சார்தான். முதலில் அவரைச் சந்தித்த உடனே அந்த அன்பு தெரிந்தது. அடுத்து என் கணவர் சிவக்குமார். ஒரு ஆண் நமது வாழ்க்கையில் வந்தால், இப்படித்தான் வாழ்க்கை முழுக்க மாறும் என்பதை இவர் மூலமாகத்தான் தெரிஞ்சுக்கிறேன். 

``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க  'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி

நான் தாய்மையடைந்த தருணத்திலிருந்து என்னை அப்படிப் பார்த்துக்கிறார், சிவக்குமார். ரஜினி, மீனா நடித்த `எஜமான்' படத்தில் மீனா தாய்மையடைந்திருப்பதாகத் தெரிந்ததும், அவருக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். அதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும்னு நினைச்சிருக்கேன். ஆனால், இப்போது நிஜத்தில் நடக்குது. சிவக்குமாருக்கு அம்மா என்றால் அவ்வளவு இஷ்டம். அம்மா இப்போது உயிரோடு இல்லை. அதனால் எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது தன் அம்மாவின் மறுபிறவியாகவே இருக்கும் என நினைக்கிறார்.'' என்ற சுஜா, தொடர்ந்தார்.

``கமல் சார் வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் முதன் முதலில் அவருக்கு நான் தாய்மையடைந்த விஷயம் தெரிந்தது. என் வயிற்றில் கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது என் அப்பா இருந்திருந்தால் எப்படி சந்தோஷப்பட்டிருப்பாரோ, அந்த சந்தோஷத்தை அவரது கண்களில் பார்த்தேன். என் வீட்டிற்கு அவர் வருவதாகச் சொல்லியிருந்தார். கமல் சார் வீட்டுக்குப் போனபோது நிறைய பேசினோம். அதுவே எங்களுக்கு முழு மன நிறைவைக் கொடுத்தது. பிஸியாக இருக்கும் அவரை அடிக்கடி அழைப்பது சரியாக இருக்காது என்பதால், அவரை மீண்டும் அழைக்கவில்லை. இப்போது எனக்கு ஐந்தரை மாதம் ஆகிடுச்சு. கூடிய விரைவில் எனக்கு வளைகாப்பு நடத்தப்போறாங்க." என்றவரிடம், சமீபத்தில் சுஜா வரூணியின் போட்டோ ஷூட் படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருவது குறித்துக் கேட்டேன். 

``அது பழசுங்க... அப்படி போட்டோ எடுக்க  'அலைபாயுதே' ஹீரோயினா நான்?'' - சுஜா வரூணி

``நான் புதுசா ஏதாவது பண்ணாலோ, எங்காச்சும் போனாலோ என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்ல அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, இப்போ ஷேர் ஆகிட்டு இருக்கிற இந்தப் படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்னாடி எடுத்தது. இதை இப்போ ரீஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். அவங்க அன்புக்கு நன்றி சொல்லிக்கிறேன். கல்யாணம் ஆனதுக்குப் பிறகு இதுவரை தாலி, குங்குமம் இரண்டையும் நான் மறப்பதே இல்லை. எனக்கு அதன் மீது அவ்வளவு நம்பிக்கையும், கணவர் மீதான பாசமும்  அதிகம் இருக்கிறது. படங்களில் வருவதுபோலவோ, ஃபேஷன் என்கிற பெயரிலோ தாலியைக் கழற்றி வைத்துவிட்டு ஃபோட்டோஷூட் நடத்த, நான் `அலைபாயுதே' ஷாலினியும் கிடையாது'' என்று சிரிக்கிறார் சுஜா வரூணி.