Published:Updated:

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

விகடன் விமர்சனக்குழு
இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!
இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

தீபாவளி வந்தாச்சு...இதோ நம் அபிமான ஹீரோக்களின் தீபாவளி ப்ளான்கள் என்னென்ன...

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

என் பையன் தான் ஸ்பெஷல்...

ஸ்ரீகாந்த்:

இந்த வருஷம் கொஞ்சம் சிம்பிள் தான். ஷூட்டிங்காக ஹைதராபாத்ல இருக்கேன். சௌகார்பேட்டை ஆன் தி வே. செம ஹேப்பியா இருக்கு, ரொம்ப வித்தியாசமான கேரக்டர் வேற. எனக்கு பட்டாசுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுலயும் என்னோட பையன் கையப் பிடிச்சுகிட்டு நான் வெச்ச பட்டாசு அந்தத் தருணம் இருக்கே, சான்ஸே இல்ல. இப்போ நினைச்சாலும் எக்ஸைட்டா இருக்கு. அப்பறம் தல தீபாவளியிலயே இந்த சம்பவம் நடந்துச்சு. டபுள் சந்தோஷம். சின்ன வயசுல தாங்க தீபாவளி. நிறைய சேட்டை பண்ணியிருக்கேன். பிரின்சிபல் எல்லார் பையிலயும் பட்டாசு இருக்கான்னு செக் பண்ணிக்கிட்டு வந்தாங்க. என்னைப் பார்த்து அவருக்கு செம டவுட்டு. அவர் டவுட்டானது உண்மைதான் என் கிட்ட பட்டாச எடு நீ வெச்சிருக்கன்னு . சொன்னாரு. அத வெளிய எடுக்கும் போது தவறுதலா கை பட்டு வெடிச்சுடுச்சு. அவ்ளோ தான் முட்டி போட வெச்சு,பனிஷ்மெண்ட் குடுத்து ஒரே நாள்ல ஸ்கூல் ஃபேமஸ். என் அண்ணன் தான் என்ன வந்து காப்பாத்தினான். எங்க வீட்ல ஒரு சம்பிரதாயம் இருக்கு தீபாவளி அன்னிக்கு எங்க வீட்ல ஆம்பளைங்களுக்கு கால்ல பொட்டு வெச்சு, குங்குமம்லாம் வெச்சு ஒரு நலுங்கு பண்ணுவாங்க. அத இனிமே கடைபிடிக்கக்கூடாதுன்னு இருக்கேன்.பொண்ணுங்களுக்கு செய்யற மாதிரி இருக்கும். இன்னொன்னு ஃப்ரண்ட்ஸோட பழைய மாதிரி ஒரு தீபாவளி கொண்டாடணும். இந்த வருஷம் வேதாளம், தூங்காவனம் ரெண்டு படங்களும் பார்க்கணும். பார்ப்போம். குட்டிப் பையனுக்கு வாழ்த்துக்கள்

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

செம டேஸ்ட்டியா சாப்பிடணும்

ஆதி:

எங்க வீட்ல தீபாவளின்னா எங்கயுமே இல்லாத அளவுக்கு செம டேஸ்ட்டியான சாப்பாடு இருக்கும். அம்மா சூப்பரா ஸ்வீட்ஸ் செய்வாங்க. அப்படி ஒரு சாப்பாட்ட நான் இதுவரைக்கும் எங்கயும் சாப்பிட்டதே இல்ல. என்னோட சாய்ஸ் எப்பவும் ஜீன்ஸ், ஒரு நல்ல டி-ஷார்ட். அதுதான் இந்த வருஷமும். சின்ன வயசுல நானும் என் அண்ணாவும் போட்டி போட்டு பட்டாசு வெடிப்போம். நீ , அதிக பட்டாசா நான் அதிக பட்டாசான்னு. இப்பல்லாம் கொஞ்சம் சுற்றுச்சூழல் மேல அக்கறை வந்துடுச்சு. பட்டாசு ஆசையெல்லாம் போயிடுச்சு. குடும்பத்தோட ஒரு படம் பார்ப்போம். இந்த வருஷம் எங்க அம்மாவோட சாய்ஸ் வேதாளம். எங்களுக்கும் அதுதான். கண்டிப்பா எப்படியாவது பாத்துருவோம்.அப்பறம் ஃபேமிலில எல்லாரும் மீட் பண்ணுவோம். சின்ன வயசுதான் தீபாவளிங்க. நாங்க பாட்டுக்கு பட்டாசு வெடிச்சுகிட்டே இருப்போம்.ஆனாலும் அம்மா கொஞ்சம் பட்டாசெல்லாம் எடுத்து வெச்சு கார்த்திகை அன்னிக்கு எங்களுக்கு சர்ப்ரைஸ் குடுப்பாங்க. அதெல்லாம் வேற மாதிரி இருக்கும். எங்களுக்கும் ஸ்வீட்ஸ் பார்சல் பாஸ்.

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

அக்காவுக்கு தல தீபாவளி

அசோக் செல்வன்:

அக்காவுக்கு தல தீபாவளி. கிஃப்ட்லாம் வாங்கி வெச்சுட்டேன். அக்காவுக்கு ஒரு ஹேண்ட் பேக், மாமாவுக்கு வாட்ச். எப்படி. சர்ப்ரைஸ் ப்ளீஸ் சொல்லிடாதிங்க. எப்பவும் ஊருக்குப் போவேன். இந்த வருஷம் அக்கா கூட தீபாவளி. அப்பறம் வேதாளம், தூங்காவனம் ரெண்டு படங்கள்.. முக்கியமா வேதாளம் பாக்கணும்.சின்ன வயசுல மொத்த ஃபேமிலியும் ஒண்ணா சேர்ந்து தீபாவளி கொண்டாடுவொம். இப்போ நினச்சாலும் ஹேப்பி மொமெண்ட் அது. இப்போ எல்லாரும் வளர்ந்துட்டோம். அவங்கவங்க வாழ்க்கையத் தேடி வேற வேற நாடு, ஊருன்னு இருக்கோம். திரும்ப அந்த மாதிரி குடும்ப தீபாவளி கொண்டாடணும் பாக்கலாம். அதுவும் என் மாமா ஒருத்தர்தான் என்னோட ஃபேவரைட். சேர்ந்தோம்னா செம களேபரம் தான்.அதுவும் எனக்கு தீபாவளியை ஒட்டித்தான் பிறந்தநாளும் வரும். ஏய்...ரெண்டு ட்ரஸ்ஸுன்னு அது ஒரு சந்தோஷம் வேற இருக்கும். இப்போல்லாம் பட்டாசெல்லாம் பெரிசா ஆசை இல்ல. கொஞ்சம் ஊருக்கு நல்லது பண்ணுவோமே. அப்பறம் பாதுகாப்பா கொண்டாடுங்க ஃப்ரண்ட்ஸ்.ஹேப்பி தீபாவளி. உங்களுக்கும் வாழ்த்துகள் அசோக்

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

நான் ஹாங்காங் போறேனே

சேதுராமன்:

தீபாவளி அன்னிக்கு நான் ஹாங்காங் போறேன். அதனால தீபாவளிய சாக்கா வெச்சு நிறைய பர்சேஸ் பண்ணியாச்சு. எந்த வருஷமும் இல்லாத ஹெவி ஷாப்பிங். டாக்டரா என்னோட க்ளினிக்ல இருக்க எல்லாருக்கும் ஸ்வீட்ஸ்லாம் குடுத்தாச்சு.ஆனா இந்த வருஷம் மழை வேற அதனால வீட்ல ஃபேமிலியோட கொண்டாடப்போறேன். அப்பறம் ஒரு சீக்ரெட் எனக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்க. அனேகமா அடுத்த வருஷம் தல தீபாவளின்னு நினைக்கிறேன். யார் கிட்டயும் சொல்லக்கூடாது சரியா. ஸ்கூல் டைம்ல முழுக்க ஹாஸ்டல் வாழ்க்கை. ஒரு ரெண்டு நாள் நான் என்னோட வீட்டுக்கு வரேன்னா அது தீபாவளிக்குத்தான். சும்மா ஊரவே அதிர விட்டுட்டுப் போவேன். ஒரு தடவ வீட்ல இருந்து கூப்பிட வரல. தீபாவளி ஹாஸ்டல்லதான் மணிப்பூர், அப்ராடுனு பசங்க எல்லார் கூடவும் கொண்டாடினேன். ஹாஸ்டல்லயும் பட்டாசெல்லாம் குடுத்தாங்க. அது செம ஹேப்பி மொமெண்ட்ங்க. அப்பறம் இந்த வருஷம் அஜித் படம் பார்த்துட்டு தான் ஃப்ளைட் ஏறுவேன். அதுல மட்டும் உறுதியா இருக்கேன்.. ச்சும்மா தெறிக்கவிடணும். ஹேப்பி ஜர்னி சேதுராமன்...

இந்த வருஷம் சும்மா தெறிக்கவிடணும்...ஹீரோக்களின் ஜாலி தீபாவளி ப்ளான்!

எனக்குப் பொண்ணு பார்த்துட்டாங்க

சந்திரன்:

என்ன ஸ்பெஷலா? நல்லா கேட்டீங்க. ஆளவந்தானுக்கு அப்பறம் இப்பதான் தீபாவளி ரிலீஸா உலக நாயகன் படம். டை ஹார்ட் வெயிட்டிங். ரெண்டு ஷோ பார்ப்பேன். மத்தபடி ஃபேமிலி ஸ்வீட்ஸ், கொஞ்சம் பட்டாசு ஆசை யெல்லாம் போயிடுச்சு. எனக்குப் பொண்ணு பார்த்துட்டாங்க. இந்த மாசம் கடைசியில நிச்சயதார்த்தம். கண்டிப்பா கூப்டுவேன். அப்பறம் தீபாவளின்னா அம்மா காலைல சாரி மிட் நைட்ல மூன்றரை மணிக்கே எழுந்து ரெடியாகிடுவாங்க. நாங்களும் ரெடியாகணும். யோசிச்சுப் பாருங்க மூன்றரை மணி. அப்புறம் கோவிலுக்குப் போவோம். காலைலயே பூஜையெல்லாம் முடிச்சுட்டு. முக்கியமா குடும்பத்தோட சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்ப்போம். அப்பதான் தீபாவளி முழுமையாகும்.  அப்படியே கிளம்பி ஃப்ரண்ட்ஸோட எல்லா புதுப்படமும் பார்த்துட்டு சுத்திகிட்டு இருப்பேன். பட்டாசு வழக்கமா எல்லாரும் சொல்றதுதான் ஆசை இல்ல. அதெல்லாம் சின்ன வயசுல, வெடிக்காத பட்டாசே இல்ல. எல்லா பட்டாசும் எப்படி வெடிக்கும்னு தெரியும் அப்பறம் ஏன் அதப் போயி வேடிக்கை பாத்துகிட்டு. இப்போ அண்ணா பசங்க வெடிப்பாங்க கொஞ்சம் சொல்லிக் கொடுப்பேன் அவ்ளோ தான். ஜீன்ஸ் பிளாக் சர்ட்.. அதுதான் முதல்ல வாங்குவேன். அப்பறம் எல்லா மீடியா நண்பர்கள் கிட்டயும் நல்ல பேரு வாங்கணும். அதுதான் என்னோட தீபாவளி திட்டம். உண்மையாவே நீங்க நல்ல பையன் தான் பாஸ்

- ஷாலினி நியூட்டன் -