Published:Updated:

'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி

விகடன் விமர்சனக்குழு
'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி
'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதர்வாவின் ஈட்டி ரிலீஸுக்கு ரெடி, அதுகுறித்து அதர்வாவிடம் பேசினால், ”நீங்கா சேஃப்ஃபா” என முதல் வார்த்தையாகக் கேட்டார்.... வெள்ளம்லாம் கொஞ்சம் குறைஞ்சு நார்மல் ஆயிடுச்சுங்க.. படமும் ரிலீஸ் ஆகப்போகுது நிறைவா இருக்கு என கொஞ்சம் ரிலாக்ஸாகப் பேசினார்...

நாங்க சேஃப்...நீங்க எப்படி இருக்கீங்க?

’நானும் சேஃப்...அதனால தான் இங்க சில நடிகர்கள் ஃப்ரண்ட்ஸ்லாம் சேர்த்து உதவிகள்லாம் செஞ்சுகிட்டு இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு பொது மக்களே, சக மனிதர்களுக்கு உதவி செய்யறத பாக்கும் போது’!

வெள்ளம் உங்களுக்கு என்ன மாதிரி அனுபவமா இருந்துச்சு?...இந்த நிலைல இப்போ படம் ரிலீஸ் வேற, ரெடியா இருக்கீங்களா?

’நான் பாஸிட்டிவாதான் இருக்கேன்...இன்னொன்னு ரிலீஸ் தேதி நம்ம ஒருத்தர் முடிவு கிடையாது இல்லையா.கண்டிப்பா ’ஈட்டி’ எல்லாரையும் சந்தோஷப்படுத்தும். அதுல முழு நம்பிக்கை இருக்கு’!

'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி

ஈட்டி என்ன மாதிரியான படம்?

’இது முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் படம்...ஹர்ட்ல்ஸ் விளையாட்டச் சேர்ந்த படம். தஞ்சாவூர் பையன் சென்னைக்கு ஹர்ட்ல்ஸ் போட்டியில கலந்துக்க வரான் அவன் சந்திக்கிற பிரச்னை தான் படம்’!

நிறைய ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்துருக்கே ‘ஈட்டி’ எப்படி வித்தியாசப் படப்போகுது?

’’ஹர்ட்ல்ஸ்’... விளையாட்டே இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வராத கான்செப்ட்டா தான் நான் பாக்கறேன். அப்பறம் முக்கியமா ஸ்போர்ட்ஸ் சார்ந்த பொழுதுபோக்குப் படமா இருக்கும். என் கூட ஸ்ரீதிவ்யா நடிச்சுருக்காங்க. எங்க ஜோடியும் புதுசு’!

ஸ்ரீதிவ்யா பத்தி சொல்லுங்களேன்?

’செம பெர்ஃபாமர்ங்க... மத்த நேரத்துல ரொம்ப சைலண்டா இருப்பாங்க.இந்தப் படத்துல அவங்க ஒரு சிட்டி பொண்ணு. எனக்கு சப்போர்ட் பண்ணி தைரியம் குடுக்கற கேரக்டர்ல வராங்க’!

'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி

அதர்வா எப்பவுமே சைலண்டா, மத்த ஹீரோக்கள் கூட்டணிக்குள்ள வராத மாதிரியே இருக்கே?

’(சிரிக்கிறார்)....அந்த மாதிரியெல்லாம் இல்ல. சினிமாவ நான் பிறந்ததுல இருந்தே பாக்கறேன். எல்லாருமே எனக்கு ஃப்ரண்ட்ஸ் தான். எல்லார் கூடவும் டச்ல இருக்கேன். மத்தபடி எந்த உள்நோக்கமோ, இல்ல கெத்தல்லாம் கிடையாது. நடிக்க வந்தோம் அத சரியா செய்யணும். அப்பா பேரும் கெடக்கூடாதுல்ல’!

வெள்ளம் உங்களை எந்த அளவுக்கு பாதிச்சது?

’எப்படி சொல்றதுன்னு தெரியல...பாதிக்கப்பட்டவங்களும் ஒண்ணுமே இல்லாதவங்க இல்ல. எல்லாம் இருந்து இப்போ இல்லாம கஷ்டப் படறாங்க. என்ன வேணும்னு நாமலே கேட்டாக் கூட யோசிச்சுட்டு கொஞ்சம் சங்கடத்தோட அவங்க தேவையக் கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் எங்களால முடிஞ்சத குடுத்துட்டு இருக்கோம். எல்லாமே இப்போ தேவைதான். எது கொடுத்தாலும் அவங்களுக்கு உதவும். அவங்கள கேட்டு சங்கடப்படுத்தி குடுக்கறத விட நம்மகிட்ட இருக்க பொருட்கள சத்தமே இல்லாம குடுத்துட்டு வந்துடறதுதான் நல்லது. ,முக்கியமா வாலண்டியர்ஸ்க்கு நன்றி’!

'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி

சென்னை வெள்ளம் உங்களுக்கு என்ன கத்துக்கொடுத்துருக்கு?

’நல்ல ரிலேஷன்ஷிப்ப காமிச்சிருக்கு... யார் யாரோ எப்படியெல்லாமோ ஹெல்ப் பண்றாங்க அந்த பாண்டிங் எனக்கு பயங்கர ஆச்சர்யத்தக் கொடுத்துருக்கு. சாப்பாடே இல்லாதவங்க கூட மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றத பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எங்க வீட்லயே எங்க அக்கா வீட்டுக்குள்ள தண்ணி போயிடுச்சு நாங்களும் பாதிக்கப்பட்டுருக்கோம்னு சொல்லலாம். ஆனால் எல்லாரும் சேர்ந்து உதவி பண்ணது சென்னையோட உண்மையான மனநிலை இந்த வெள்ளத்துல தெரிஞ்சிடுச்சுன்னு கூட சொல்லலாம்’!

”எல்லாத்தையும் மீறின மனிதம் என் கண்ணுக்குத் தெரிஞ்சது”....

- ஷாலினி நியூட்டன் -