Published:Updated:

“என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி

மா.பாண்டியராஜன்
“என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி
“என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி

‘வாவ்... நம்ம டி.டியா இது!?’ - பாரம்பர்யம், எத்னிக், க்ளாஸிக், ரெட்ரோ... அத்தனை ‘லுக்’குகளிலும் மிளிர்கிறது திவ்யதர்ஷினியின் புதிய போட்டோ ஷுட்.  மஞ்சள் ஸ்டுடியோ பொட்டிக்கின் விளம்பர போட்டோஸ் அது. அதற்கு நிரஞ்சனி அகத்தியனின் டிசைனிங்கில் ‘அவ்ளோ அழகாக’ இருக்கிறார் டிடி. அதற்கு ‘லைக்ஸ்’ கொடுத்துவிட்டு, ’காபி வித் டிடியில பல பேரை நீங்க கேள்வி கேட்டிருப்பீங்க. இப்போ காபி வித் டிடிக்கு நீங்களே கெஸ்ட்டா வர்றீங்க. பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா..’ என எடுத்த பேட்டி இது.

’’ரொம்ப நாளா நீங்க பேட்டி எடுக்கணும்னு ஆசைப்பட்ட ஒரு பிரபலம்..?
“நாகேஷ் சாரை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அது முடியாம போச்சு. இப்போ இருக்கிற பிரபலங்கள்ல, முதலமைச்சரை பேட்டி எடுக்கணும்னு ஆசைப்படுறேன்.” 

உங்ககிட்ட எத்தனை 500,1000 ரூபாய் நோட்டுகள் இருக்கு..?
“நான் எப்போதுமே கையில காசு வெச்சுக்க மாட்டேன். கார்டுதான் யூஸ் பண்ணுவேன். இப்போ என்கிட்ட 4000 ரூபாய் இருக்கு. ஆனால், அதுல எத்தனை 500,1000னு தெரியலையே!” 

’ஸாரி அண்ட் தேங்க்ஸ்’... யாருக்கு சொல்லணும்னு நினைக்கிறீங்க..?
“இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் மிச்சம் வைக்கிறதே இல்லை. சாரி அண்ட் தேங்க்ஸை உடனே சொல்லிடுவேன்.” 

’’இப்போ ராபிட் ஃபயர் ரவுண்ட்..!’’

*விஜய் டிவி: “ஸ்டார் மேக்கர்ஸ்”
*சிவகார்த்திகேயன்: “அவரோட வெற்றி எங்களுக்கு பெருமை”

*கடவுள்: “கடவுள் இருக்கான் குமாரு”
*பொம்மை: “குழந்தைகள்”

*சோஷியல் மீடியா: “வெரி பவர்ஃபுல்”
*மீம்ஸ்: “யார் மனசையும் கஷ்டப்படுத்தாம இருந்தால் நல்லது”
*ஜெயலலிதா: “அயர்ன் லேடி”

நீங்க சின்ன வயசுல இருந்து பத்திரமா பாதுகாத்திட்டு வர்ற ஒரு பொருள்...?
“எனக்கு ஒரு வயசு இருக்கும்போது எனக்காக எங்க அப்பாவே டிசைன் பண்ணி தைச்ச டிரெஸ். இன்னைக்கு வரைக்கும் பத்திரமா வச்சிருக்கேன்.” 

நீங்க மாத்திக்க நினைக்கிற கெட்ட பழக்கம் ஒண்ணு..?
“நிறைய இருக்கு. ஒண்ணு சொல்லணும்னா, இப்போ போன் ரொம்ப பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். அதை மாத்திக்கணும்.” 

உங்ககிட்ட மாறாமல் இருக்கும் நல்ல பழக்கம் ஒண்ணு..?
“நல்ல விஷயங்களை பார்த்தா கண்டிப்பா பாராட்டிடுவேன். அது என்கிட்ட மாறாம இருக்கு. இனிமேலும் மாறாமா இருக்கணும்.” 

டிடிக்கு இன்னொரு முகம் இருக்கா..?
“நான் ரொம்ப அமைதியான பொண்ணு. வீட்டுக்குள்ள இருக்கும்போதல்லாம் பேசவே மாட்டேன். வெளியப்போனாலும் அப்படித்தான். என்னை பார்க்கிற பல பேர், 'ஏன் ரொம்ப அமைதியாவே இருக்கீங்க, ஏன் பேசவே மாட்டிக்கிறீங்க' னு கேட்பாங்க. இன்னைக்கு பெட்ரோல் பங்க்ல ஒருத்தர், என் கார் கண்ணாடியை தட்டினார். நான் கண்ணாடியை இறக்குனதும், ‘என்ன மேடம், டிவில அப்படி பேசுறீங்க. நேர்ல பேசவே மாட்டிக்கிறீங்க’னு கேட்டார். பெட்ரோல் பங்க்ல நான் யார்கிட்ட என்ன பேச முடியும். ஆனாலும் நான் அவங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு இருப்பேன்.” 

உங்ககிட்ட கேட்கக்கூடாத கேள்வி..?
“ ஏன் ரொம்ப அமைதியாவே இருக்கீங்க, ஏன் பேசவே மாட்டிக்கிறீங்கனு யாரும் என்கிட்ட கேட்கக்கூடாதுனு நினைப்பேன். ஏன்னா, அதுக்கு ஒரு பதில் சொல்லணும்ல.”

’’உங்களோட அவுட்ஃபிட் எல்லாத்தையும் பல பெண்கள் க்ளோஸா வாட்ச் பண்றது உங்களுக்கு தெரியுமா..?

“யா... டிவியில நான் போட்டுட்டு வர அவுட்ஃபிட்டை பல பெண்கள் வாட்ச் பண்றாங்க. அதே மாதிரி டிரெஸ் எங்களுக்கும் வேணும்னு கேட்கிறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு. அவங்களுக்காகவே நான் ரொம்ப காஸ்ட்லியான டிரஸ்களை செலக்ட் பண்றது இல்லை. அப்புறம் அவங்களும் நிறைய செலவழிக்கணும். இப்போ மஞ்சள் ஸ்டுடியோ விளம்பரத்துக்காக நான் கட்டியிருக்கிற ஸாரி, ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டு குவியுது. அந்த சேலைகளும் ரொம்ப காஸ்ட்லி இல்லை. மஞ்சள் ஸ்டுடியோ டிசைனர் நிரஞ்சனி எனக்கு ரொம்ப நல்ல பழக்கம். அவங்களோட டிசைன்ஸ்ல கலர் காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும். அந்த டிசைனுக்குத்தான் இப்போ டிமாண்ட்!’’ 

இப்போ உங்க வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணி, அதுல நாலாவதா இருக்கிற மெசேஜ் என்னன்னு சொல்லுங்க..?
“நாலாவதா ஒரு குரூப்தான் இருக்கு. அதுல கடைசி மெசேஜ், நடிகர் ஜெகன்தான் அனுப்பியிருக்கார். ‘ஹவ் ஸ்டுப்பிட்’ -இதுதான் அவர் அனுப்பிச்சது. சூப்பர் மெசேஜ்ல!’’ 

- மா.பாண்டியராஜன்