Published:Updated:

முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் அதியன்..!- `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

காலம் கடந்தும் வீரியம் குறையாத போர்களின் தீமையையும், மனிதத்தின் தேவையையும் அக்கறையுடன் பேசும் படம்தான் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.'

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இரஞ்சித்தின் தயாரிப்பு என்பதாலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கும் இந்தப் படம் எப்படியிருக்கிறது... ப்ளஸ், மைனஸ் என்ன?

தினேஷ், ஆனந்தி
தினேஷ், ஆனந்தி
அர்ஜுன் ரெட்டியாக விஜய்தேவரகொண்டா தாறுமாறு... ஆதித்ய வர்மாவாக துருவ் விக்ரம் எப்படி?!

* ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சந்திக்கும் மோசமான பிரச்னை, போர். அது ஏதோ இரண்டு நாடுகளுக்கிடையே நடப்பதல்ல. ஒவ்வொரு போரும் பூமி முழுக்கவே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அப்படி இரண்டாம் உலகப்போரின் மிச்சம் ஒன்று இன்றைய தமிழகத்தில் என்ன பாதிப்பை, எப்படி ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
கொடூரக் கொலைகள், கேங்ஸ்டர் நட்பு, டீ-ஏஜிங் புரட்சி! எப்படியிருக்கிறது ஸ்கார்சஸியின் #TheIrishman

* நூற்றாண்டுகாலப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு சொல்லிவிட முடியுமா? ஆனால், மனிதம் செல்ல வேண்டிய திசையெது எனச் சொல்ல முடியும். அந்தப் பக்கமாக நம் கைப்பிடித்து நகர வைப்பதில் வென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை. முதல் படத்திலேயே இப்படியொரு அழுத்தமான கதையையும் பிரச்னையையும் கையாளத் துணிந்ததற்கே அவரை ஆரத்தழுவலாம். படத்தின் வெற்றி, தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் கதைக்காகவே களம் அமைத்துத் தந்திருக்கும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு குடோஸ்!

* லாரி ஓட்டுநராக, துடுக்கான, துடிப்பான இளைஞனாகத் தினேஷ். கதாபாத்திரத்தின் தன்மையை உள்ளார உணர்ந்து அட்டகாசமாக நடித்திருக்கிறார். முள் குத்தினாலே சீறும் வேகம்; ஆணியே குத்தும்போது என்ன ஆகப்போகிறதோ என்ற பதற்றம் உருவாகத் தினேஷின் நடிப்புதான் காரணம். காதலுக்காக வீட்டை எதிர்க்கும் டெம்ப்ளேட் கேரக்டரில் ஆனந்தி. படத்தில் தினேஷைத் தாண்டி கவனம் ஈர்ப்பது முனீஷ்காந்த். பஞ்சராகப் பக்கா நடிப்பு. ரித்விகாவுக்கு கனமான கதாபாத்திரம். ஆனால், அவருக்கான காட்சிகள்தான் செயற்கையாக இருக்கின்றன.

அதியன், கிஷோர் குமார்
அதியன், கிஷோர் குமார்

* அதிகாரம் பலவிதம். ஓரிடத்தில் அது சாதியாக இருக்கிறது. ஓரிடத்தில் அது முதலாளித்துவமாக இருக்கிறது. ஓரிடத்தில் அது அரசின் கைகளாக நீள்கிறது. இப்படி பல வித அதிகாரங்களை கதையின் கிளைக்கதைகளாக விரித்து, இறுதியில் குண்டின் முனையில் அனைத்தையும் கட்டிப்போட்டது புத்திசாலித்தனம். ஆனால், அத்தனை அடுக்குகளையும் கோக்கும் சுவாரஸ்ய திரைக்கதை அமையாமல் போனதுதான் பிரச்னை. அரசியல் பேசும் கலைகள் எல்லா காலத்திலும் உண்டு. அவை பேசும் அரசியலின் செறிவைவிட கலைத்தன்மைதான் அதைக் கடைக்கோடி பார்வையாளனிடமும் கொண்டுபோய் சேர்க்கும். அந்தக் கலைத்தன்மை கூடிவருவதில்தான் கொஞ்சம் மிஸ் ஆகிறது 'குண்டு'.

* வசனங்கள் ஆழமானவை. அரசியல் பேசினாலும் அன்பைப் பேசினாலும் தேவையானதைக் கச்சிதமாகக் கடத்துக்கின்றன. சினிமாத்தனம் இல்லாத சாம்.பிசி-யின் சண்டைக்காட்சிகளும் த.ராமலிங்கத்தின் கலை வடிவமைப்பும் படத்தின் பலங்கள்.

* படத்தின் ஆரம்பம் மற்றும் முடிவில் இடம்பெறும் ஆவணக்காட்சிகள் நம்மை பதைபதைக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதை ஆங்காங்கே தொக்கி நிற்பது விறுவிறுப்பைக் குறைக்கிறது.

'குண்டு' திரைப்படம்
'குண்டு' திரைப்படம்
வில்லனாகவே இருந்தாலும், அப்படிப் பேசியிருக்கக் கூடாது கெளதம்! - `எனை நோக்கி பாயும் தோட்டா’ ப்ளஸ்/மைனஸ்... ப்ளீஸ்!

* 'நிலம் எல்லாம்' , 'மாவளி' பாடல்களில் கவனம் ஈர்க்கும் டென்மா, பின்னணி இசையிலும் சிறப்பு செய்திருக்கிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. ஆர்.கே.செல்வாவின் எடிட்டிங்கிலும் குறைகள் இல்லை.

* பார்த்திடாத ஒரு களம் என்ற ஆரம்ப ஆர்வத்தை படம் முழுக்கவும் தக்க வைத்திருந்தால் இந்த ஆண்டின் மிக முக்கியமான படமாகியிருக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!'

அடுத்த கட்டுரைக்கு