Published:Updated:

இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

இரவின் நிழல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

இப்படியொரு பெருங்கனவை முயன்று, பல்வேறு தடைகளுக்குப் பிறகு அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கு வாழ்த்துகள்.

இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

இப்படியொரு பெருங்கனவை முயன்று, பல்வேறு தடைகளுக்குப் பிறகு அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கு வாழ்த்துகள்.

Published:Updated:
இரவின் நிழல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிய பாதை அமைத்துப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் முயற்சிகள் அரிதினும் அரிதாக நடக்கும். அப்படியொரு எத்தனிப்பே இந்த ‘இரவின் நிழல்.'

50 வயதிலிருக்கும் நந்து தன் கடந்த காலத்தை, அதில் உலவிய மனிதர்களை, நிகழ்ந்த சம்பவங்களை, செய்த தவறுகளை, தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணிப் பார்த்து மருகுவதே படத்தின் சாராம்சம். மரணத்தின் பிடியிலிருக்கும் உயிருக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை இறுதியாய் ஒருமுறை, காலம் குறிப்பிடமுடியாத கோவையற்ற காட்சிகளாய்க் கண்முன் வந்து போகும் என்பார்களே... அப்படியான கதையமைப்பு என்பதால் கலைத்துப் போடப்பட்ட கட்டங்கள் வழியே நகர்ந்து முடிவிற்கு வருகிறது படம்.

பார்த்திபன் தனது டிரேட்மார்க் உடல்மொழி, நையாண்டி என எப்போதும்போல வந்து போகிறார். அவரின் கடந்தகால வெர்ஷன்களாக வரும் ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷ்வா போன்றோரும் அப்படியே பார்த்திபனை நகலெடுத்திருப்பது பலம். ஆனால் அதையே கதையின் மற்ற கதாபாத்திரங்களும் முயல்வது பலவீனம்.

இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

நாயகிகளில் பிரிகிடா சகா மட்டும் தனியே மிளிர்கிறார். சிநேகா குமாரி, சாய் பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் எனக் குறைவான நடிகர்கள். அவர்களுக்கான வெளியும் குறைவே.

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் சினிமாவிற்காக 59 செட்கள். நினைத்துப் பார்க்கவே அயர்ச்சி தரும் இக்கனவை தன் வியர்வையை விதைத்து சாத்தியப்படுத்தியுள்ளார் கலை இயக்குநர் விஜய் முருகன். பந்தயத்தில் தடங்கல் ஏற்படும்போதெல்லாம் முதலிலிருந்து தொடங்கி மற்றவர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றாய் வெற்றிக்கோட்டைத் தொடும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனின் உழைப்பு அபாரம். கிம்பல் கேமராவை இயக்கிய ஆகாஷின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. சில இடங்களில் அட்டகாசம், சில இடங்களில் பரவாயில்லை ரகம் என ஏற்ற இறக்கத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.

இப்படியொரு பெருங்கனவை முயன்று, பல்வேறு தடைகளுக்குப் பிறகு அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கு வாழ்த்துகள். முதல் 30 நிமிடங்கள் வரும் மேக்கிங்கைப் பார்க்கும்போது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஆனால் அதற்குப்பிறகு ஒன்றரைமணி நேரம் திரையில் விரியும் சினிமா அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

இரவின் நிழல் - சினிமா விமர்சனம்

வித்தியாசமான முயற்சி என்ற ஒன்றை மட்டுமே நிறுத்தி பின்னுக்குத் தள்ளப்பட்ட கதை, ஒரே டேக்கில் ஓகே ஆக வேண்டும் என்று அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட நடிப்பு, ஜீவனற்று நகரும் காட்சிகள், இரட்டை அர்த்தமும் சலிப்பூட்டும் வார்த்தை விளையாட்டும் நிறைந்த வசனங்கள். எடுத்த முயற்சியில் புதுமை இருந்தாலும், எடுக்கப்பட்ட கதை அரதப்பழசான, ஆழமாக யோசித்தால் ஆபத்தான கதையும்கூட. படத்தின் 90 சதவிகிதப் பெண் கதாபாத்திரங்கள் படைப்பில் ஆணாதிக்கமும் பிற்போக்கும்.

ஒரு புதுமையான முயற்சி என்ற அளவில் மட்டும் சுருங்கிப்போய்விடுகிறது இந்த நிழல்.