Published:Updated:

"முத்தையா முரளிதரனுக்காக விஜய் சேதுபதியை மிரட்டியது சரியா?!" - பார்த்திபன் - 21

ஆண்Line பெண்Line Thought காம் | பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 21.

"முத்தையா முரளிதரனுக்காக விஜய் சேதுபதியை மிரட்டியது சரியா?!" - பார்த்திபன் - 21

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 21.

Published:Updated:
ஆண்Line பெண்Line Thought காம் | பார்த்திபன்

''விஜய் சேதுபதி ஹீரோவாகவும் நடிக்கலாம், வில்லனாகவும் நடிக்கலாம். அதேபோல் அவர் முரளிதரனாகவும் நடிக்கலாம், பிரபாகரனாகவும் நடிக்கலாம். அவர் ஒரு நடிகர், அது ஒரு படம் அவ்வளவுதானே... இதற்கு நீங்கள் உள்பட பல்வேறு இயக்குநர்களும் விடுத்த தடை கோரிக்கைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதில்லையா?"

- சதீஷ், ஆவடி

விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன்

"சத்தியமா இல்லை சதீஷ். என்னவா நடிக்கலாம்கிறது அவங்கவங்க விருப்பம். ஆனா, எனக்கு இருந்தது என் நண்பர் மேல இருந்த அக்கறை. சோஷியல் மீடியால வந்த கன்னாபின்னா வார்த்தைப் பிரயோகங்கள் பார்க்கும்போது ரொம்ப டென்ஷன் ஆச்சு. எதுக்காகப் போராடுறோம்கிறதுன்னு ஒண்ணு இருக்கு. சுதந்திரத்துக்காகப் போராடலாம். ஆனால், இந்த விஷயங்களுக்கெல்லாம் போராடுறது எப்படின்னு எனக்குத் தெரியல. இந்தப் படம் சகோதரத்துவத்தை அதிகப்படுத்துமான்னும் யோசிச்சேன். விஜய் சேதுபதியும் முழுசா கதை கேட்டுட்டதால நடிச்சே தீருவேன்னு இருந்தார். என்னுடைய அறிக்கைகூட விருப்பமா, விண்ணப்பமா இல்லாம அவர் விலகுடுவார்ன்ற கணிப்புதான். அவர் அப்படித்தான் சொல்லப்போறார்னு சொன்னேன். ஆமா, நான் பண்ணப்போறேன்னு இருந்த விஜய் சேதுபதி... இல்லை நீங்க பண்ணாதீங்கன்னு முரளிதரன் சொல்லி 'நன்றி வணக்கம்'னு போட்டாச்சு. 'நன்றி வணக்கம்'னா முடிஞ்சி போச்சுன்னு அர்த்தம். இந்தக் கேள்வி, பதில் எல்லாமே!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''கல்யாணம் பண்ணலாம்னா பயமா இருக்கு... பெண்களை எப்படித்தான் மெய்ன்டெய்ன் பண்றது?''

- விக்னேஷ்வரன், சிவகாம்பூர்

''விக்னேஷ் சிவனா... ஓ விக்னேஷ் வரனா... விக்னேஷ் சிவனுக்கு ஏன் இந்த மாதிரி கேள்வின்னு நினைச்சேன். விக்னேஷ் வரனா மாறும்போது அவருக்கு கல்யாணம் பண்ணிக்கலாமான்றது பிரச்னையா இருக்கு. உங்களைப் பார்த்து அந்தப் பொண்ணுதான் பயப்படணும். பெண்களை ஏன் மெய்ன்டெய்ன் பண்ணனும்? ஒரு பெண்ணோடதான் வழணும். எதுக்கு பெண்கள்ன்னு ப்ளூரல். இது விளையாட்டுத்தனமான பதில். கல்யாணம் ரொம்ப அவசியமான்னு ரொம்ப யோசிச்சுப்பாருங்க. திருமணம் பெரிய கமிட்மென்ட். திருமணமான எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களான்னா அது ஒரு கேள்விக்குறி. கணவன், மனைவி எல்லோருக்குள்ளும் ஒரு இடைவெளி வரும். அதை சரிசெய்றது குழந்தைகளாத்தான் இருக்கமுடியும். குழந்தைகளை எப்படி வளர்க்குறதுன்றது ரெண்டு பேரோட ரெஸ்பான்சிபிளிட்டி. தான் தோன்றித்தனமா வளர்த்திடாம, அவங்களோட நிறைய நேரம் செலவு பண்ணணும். என் மகள் கீர்த்தனா 'வோட்கா'னு ஒரு நாய்க்குட்டி வெச்சிருக்காங்க. அதுக்கு 12, 13 வயசு இருக்கும். அதுக்கு உடம்புல பல பிரச்னைகள். ஆனா, அதை கைவிடமாட்டாங்க. அதை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிடுப்போறதுன்னு ஒரு குழந்தை மாதிரி அதிகமா பார்த்துப்பாங்க. நான் அதை பிரச்னையா பார்ப்பேன், ஆனா அவங்க அதை பிள்ளையா பார்க்குறாங்க. சுஜாதா சார் சொன்ன மாதிரி 'ஒரு பாட்டில் பீருக்காக, ஒரு பாரை விலைக்கு வாங்குறதா'ன்னுலாம் பேசலாம். ஆனால், திருமண பந்தம் நல்லது. ஆனா, அதை தீப்பந்தமா மாற்றிடக்கூடாது. அது தித்திப்பான பண்டமா மாறணும். இதுல செல்ஃபிஷா இருந்தா கஷ்டம்.''

பார்த்திபன்
பார்த்திபன்

''பழையன மறக்காத வன்மம் ஆண்களை விட பெண்களிடம் இருப்பதேனோ?''

- கவிஞர் ராம்க்ருஷ், சென்னை

"ராம் க்ருஷ்... நீங்க காதல்ல சிக்கி ரொம்ப க்ரஷ் ஆகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஆண் - பெண் பேதங்கள்லாம் எதுவும் இல்லைங்க. பெண்கள் அமைதியானவங்க, தியாகதீபங்கள்ன்னு நாமளே சொல்லி அவங்களை எங்கேயோ கொண்டுபோய் உயரத்துல வெச்சி, அவங்க அப்படித்தான் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கிறதும் ஒரு ஆணாதிக்கம்தான். குழந்தைகளைப் பாருங்க. ஆண், பெண் குழந்தைகள்னு எல்லா குழந்தைகளுக்கும் சந்தோஷம் ஒண்ணுதான். பெண் குழந்தைகள் இன்னும் புத்திசாலிகளா இருப்பாங்க. ஆண்களுக்கும் வன்மம் இருக்கும். அந்த வன்மத்துல ஒரு புரயோஜனமும் இல்லைன்னு கொஞ்ச காலம் போனதுக்குப்பிறகுதான் தெரியும். கடந்த கால வன்மத்தைவிட எதிர்கால இன்பத்தை நோக்கி நகருங்கள்.''

''திரு பார்த்திபன், உங்களை தகப்பனா, நடிகனா, கணவனா (ஒரு இடத்தில் கூட உங்கள் முன்னாள் மனைவியை பற்றி தவறாகப் பேசியது இல்லை) சக மனிதனாக ரொம்ப பிடிக்கும். நீங்கள் உங்களுக்கு என்று எதுவும் சேர்த்து வைக்காமல் உங்க வப்பாட்டி சினிமாவுக்கு கொடுப்பது என்ன கணக்கு, வப்பாட்டி நிரந்திரம் இல்லா ஒன்று சார்... என்றும் நீங்க அதை பற்றி கவலைப்பட்டது இல்லையா?

- சஞ்சனா, கனடா

பார்த்திபன்
பார்த்திபன்

"சஞ்சலம் ஏற்படுத்தும் சஞ்சனாவின் கேள்வி. எது நிரந்தம்? என்னுடைய 'இரவின் நிழல்' படத்துல கூட என்னைவிட்டுப் பிரிஞ்சிப்போன காதலி மறுபடியும் வந்து என்னோட சேர்ந்துதான் இருக்கணும்னு விருப்பப்படும்போது, என்கிட்ட 'உன்கூடயே நிரந்தரமா இருக்கணும்'னு கேட்பாங்க. 'என்ன ஒரு 500 வருஷமா'ன்னு கேட்பேன். அதுதான் நிரந்தரம். என்ன சேர்த்து வெச்சிருக்கீங்கன்ற இந்தக் கேள்விக்கு உலகம் முழுக்க தன்னை 'எப்படி மதிக்கிது இந்த உலகம்'னு தெரிஞ்சிக்கிறதுக்கு எல்லோருக்குமே ஒரு ஆர்வம் உண்டு. கெட்டவனா இருந்தாக்கூட தன்னை நல்லவனா புரொஜெக்ட் பண்ணிக்க முடியுமான்னு நினைக்கிறது மனித இயல்பு. நீங்க நல்ல மனிதனா இருக்கீங்கன்னு நீங்க சொல்றதைவிட நான் என்ன சொத்து சேர்த்துட முடியும். வப்பாட்டி வீட்டுக்கு நைட்ல போவாங்க. ஆனா, இப்பக்கூட காலைல எழுந்து லொக்கேஷன் பார்க்கப் போறேன். சஞ்சனாவின் மூலமா நிறைய பேருக்கு என்னுடைய மனம் புரியும்னு நினைக்கிறேன்.

டெடிகேட்டடா இருக்கணும்கிறது கட்டாயம், விருப்பம். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டுறதுக்குப் பேருதான் காதல். இதுல கஷ்டம்னு எதுவுமே இல்ல. 'இரவின் நிழல்' ஒரு சிங்கிள் ஷாட் ஃபிலிம். இந்தப் படத்துக்காக்க ஐஸ்வர்யா ராஜேஷ்கிட்ட டேட் கேட்டுட்டு இருந்தேன். ஆனா, டேட் செட் ஆகல. அவங்க, இங்கப்பாருங்க நிறையப் பேர் சிங்கிள் ஷாட் பிலிம் எடுக்கிறாங்கன்னு ஜாலிக்கு மெசேஜஸ் அனுப்புவாங்க. 'ஒத்த செருப்பு' படத்துக்குப்பிறகு நிறைய புதிய முயற்சிகள் எடுக்கிறாங்க. அதுக்கு நாம ஊக்கமாக இருக்கிறோம்கிறதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்க முடியாது. இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய எண்ணம் அதை நோக்கி நான் நகர்கிறேன். இந்தக் கேள்வி காலைலயே என்னை உற்சாகப்படுத்தியிருக்கு.

கடந்த காலம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்ல. குற்றவுணர்ச்சி இருந்தா மட்டும்தான் யோசிப்பேன். சில குற்றங்கள் இருக்கு. ஆனால், எனக்கு அந்த வயசுல அது தெரியாது. எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாமப் போச்சு. சில தவறுகள் நடந்திருக்கு. தெரியாம நடந்துக்கு நான் காரணம் இல்ல. என்னுடைய முன்னாள் மனைவி பத்தி தவறாப் பேசுறதுக்கு எந்த விஷயமும் இல்ல. என் வாழ்க்கையில அவங்க வந்திருக்கவேண்டாமோ, வராமயிருந்திருந்தா அவங்க வாழ்க்கை சிறப்பா இருந்திருக்குமோன்னுதான் யோசிக்கிறேன். 'நல்ல நடிகையா இருக்கீங்க, நிறைய நடிக்கலாம், தேசிய விருது வாங்கலாம், நானே ஸ்கிரிப்ட் பண்றேன்'னு சொல்லியிருக்கேன். ஆனா, அவங்களுக்கு அப்ப விருப்பம் இல்லை. நான் சரின்னு அவங்க தேர்ந்தெடுத்தாங்க, அதனாலதான் அவங்க இவ்ளோ கஷ்டப்படவேண்டியதா இருந்ததோன்னு தோணும். அதுக்கு காரணம் நானா இல்லாமல் இருந்திருப்பேனேன்னு யோசிச்சிருக்கேன். நான் அவங்களுக்கு சரியான சாய்ஸ் இல்லைன்னு தோணுது. இப்ப என் வாழ்க்கை ரொம்ப இனிமையா சந்தோஷமா இருக்கு.''

"சார் வணக்கம், 'புதிய பாதை' பார்த்திபன், 'உள்ளே வெளியே' பார்த்திபன், 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்திபன், இந்த மூன்று பார்த்திபனில் உங்களுக்கு மிகவும் பிடித்த பார்த்திபன்?''

- ஆர்.அழகுராஜா, பொம்மிடி

'' 'ஆயிரத்தில் ஒருவன்' பெருமையெல்லாம் அந்த இயக்குநரையே சேரும். 'புதிய பாதை' முதல் பிரசவம். அதுல இருந்த வலிகள்,வேதனைகள் எல்லாமே நியாயமானவை. என்னுடைய அஸ்திவாரம் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்குன்னா அதுக்குக் காரணம் 'புதிய பாதை'. அந்தப் 'புதிய பாதை' பார்த்திபனை திரும்பப் பார்க்கமுடியுமான்னு தெரியாது. போருக்குப் போகணும்னா கையில வாள் இருக்கணும். அப்படி எனக்கு நானே ஆயுதமா போனப் போர்தான் 'புதிய பாதை'. இந்த ரெண்டு பெருமைகளைவிட 'உள்ளே வெளியே' பெருமை அதிகம். இதுக்கு முந்தைய படமான 'சுகமான சுமைகள்' பெரிய நஷ்டம். இனி படம் யாரும் நடிக்கவே கூப்பிடமாட்டாங்கன்ற சூழல்ல, எனக்கு நானே தைரியமா, துணிச்சலா, அதிகமான பொருட்செலவுல இப்படி ஒரு படம் பண்ணலாம்னு பண்ணது 'உள்ளே வெளியே'. அந்தத் துணிச்சலான பார்த்திபனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

''சார்... நீங்க ஹீரோவா தமிழ் சினிமால சரியா கையாளப்படலைன்னு நான் நினைக்கிறேன்... அந்த வருத்தம் உங்களுக்கும் உண்டா??''

நிஜாம் முகமது ஹனிஃபா, மலேசியா

''நிஜாம் முகமது நிஜம்தான். அந்த வருத்தம் எனக்கு இருக்கு. மிகப்பெரிய இயக்குநர்களோட கைகளுக்குபோய், பெரிய பெரிய படங்கள்னு பண்ணி வேற ஒரு இடத்தை அடைஞ்சிருக்கலாமோ, அது கிடைக்காம போயிடுச்சோன்ற வருத்தம் வருவது உண்மைதான். அதை மீறியும் இத்தனை வருஷம் சினிமால நிலைச்சி நிக்கிறதுக்கு காரணம் கடுமையான உழைப்பும், சுயசிந்தனையும். அதனால் இதையே தொடரலாம்னு நினைக்கிறேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.