Published:Updated:

`படையப்பா'வில் நான் ஜெயலலிதாவா?! - ரம்யா கிருஷ்ணன் #AppExclusive

Ramyakrishnan
News
Ramyakrishnan
Vikatan

ஐயோ...! அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! 1999ல் ரம்யாகிருஷ்ணாவின் விகடனுக்கு அளித்த சுவாரஸ்யப் பேட்டி இது...

`படையப்பா'வில் ரஜினிக்கு அடுத்தபடியாகத் தன் காரெக்டர்தான் அதிகம் பேசப்படுகிறது என்கிற எந்தக் கர்வமுமின்றி ரொம்ப சாதாரணமாகக் காட்சியளித்தார் ரம்யாகிருஷ்ணன். எளிமையான குர்தா, பாண்ட்டில் இருந்தார்.

காதில், கழுத்தில் எதுவும் அணிந்து இருக்கவில்லை. கைவிரல்களில் மட்டும் தாமரைக்கனியை நினைவுபடுத்தும் பெரிய சைஸ் மோதிரம். மோதிரத்தில் ஷீரடி சாய்பாபா ("நான் பாபா பக்தை")! காலில் கொலுசு அணியும் இடத்தில் ஒரு கறுப்புக் கயிறு! அதேபோல, வலதுகரத்திலும் ஒரு ரட்சை ("எல்லாமே கண் திருஷ்டிக்காக அம்மா கட்டினது... எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு" என்று வெட்கமாகச் சிரிக்கிறார்).

ரம்யாவின் முன்னிரண்டு பற்களில் ஒரு பல் இன்னொன்றின்மீது ஏறத்துடித்த தருணத்தில் பிரம்மா `ஹோல்டான்' சொல்லியிருப்பார் போலும்! இருந்தாலும், சிரிப்பின் வசீகரத்துக்குக் குறைவில்லை.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP