Published:Updated:

விஜய்சேதுபதிபோல் ஆகிறாரா சிவகார்த்திகேயன்?

விஜய் சேதுபதி வழியில் இறங்குகிறாரா சிவகார்த்திகேயன்?

விஜயசேதுபதிபோல் ஆகிறாரா சிவகார்த்திகேயன்?
விஜயசேதுபதிபோல் ஆகிறாரா சிவகார்த்திகேயன்?

ஆர்.டி.ராஜா தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கிவரும் சிவகார்த்திகேயன் படத்துக்கு பண ரீதியான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சிவாவுக்கும் ராஜாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது படத்துக்குப் பணம் கொடுத்த பைனான்ஸியர்கள் ராஜாவை நெருக்கி வருகிறார்கள் என்றொரு செய்திவர, தமிழ்நாடு சினிமா பைனான்ஸியர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்டோம். ``சிவகார்த்தியேனுக்கும் ஆர்.டி.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு என்று சொல்வது தவறு"

ஆர்.டி. ராஜா , சிவகார்த்திகேயன்
ஆர்.டி. ராஜா , சிவகார்த்திகேயன்

``ரவிக்குமார் இயக்கும் படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் இப்போதைக்குப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக பைனான்ஸியர்களிடம் ஆர்.டி. ராஜா பெற்றிருக்கும் பணத்துக்கு தான் பொறுப்பு ஏற்பதாக சிவகார்த்திகேயன் சொல்லியிருக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கிவரும் சிவகார்த்திகேயன் படம் செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸாகிறது.

அடுத்து மித்ரன் டைரக்‌ஷனில் சிவா நடித்துவரும் திரைப்படம் டிசம்பர் 24-ம்தேதி வெளியாகிறது. ரவிக்குமார் இயக்கிவரும் திரைப்படம் குழந்தைகளைக் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருப்பதால் அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்'' என்று பதில் சொன்னார். ஒரு படத்தில் நடித்து முடித்து ரிலீசான பிறகே அடுத்த படத்தில் நடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார், சிவகார்த்திகேயன்.

ரவிக்குமார், சிவகார்த்திகேயன் பட பூஜை
ரவிக்குமார், சிவகார்த்திகேயன் பட பூஜை

ஆனால், ஜனநாதனின் லாபம், வெங்கட் கிருஷ்ணா படம், சங்கத்தமிழன் என ஒரே சமயத்தில் மூன்று படத்தில் நடித்துவருகிறார் விஜய்சேதுபதி. இதே பாணியை இப்போது சிவகார்த்திகேயனும் பின்பற்றுகிறார்.