Published:Updated:

``எனக்கு கொரோனாவா?!'' - ஐசரி கணேஷ் பதில்

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா எனத் தகவல் வந்தது. இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

உலகம் முழுக்க கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி வந்தால்யொழிய கொரோனா பயம் குறையாது என்ற நிலையில் பெரும் தலைவர்கள் சிலரும் இந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னணி பாடகர் எஸ்.பி.பி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா எனத் தகவல் வந்தது. இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

"இது முற்றிலும் பொய்யான தகவல். நான் நல்லாயிருக்கேன். என் உடம்பு ஆரோக்கியமா இருக்கு. என்னோட அம்மாவை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிட்டு போனேன். இதை தவறாக புரிந்து கொண்ட சிலர், 'எனக்கு கொரோனா'னு பொய் செய்தி பரப்பிட்டாங்க" என்றார்.

மேலும் "என்னோட 'மூக்குத்தி அம்மன்' படமும் ஓடிடி-ல ரிலீஸாகும்னு சொல்ற செய்தியும் பொய். தியேட்டர் ஓப்பனாகும் போதுதான் 'மூக்குத்தி அம்மன்' ரிலீஸாகும். மக்கள்லாம் தியேட்டர்ல இதை பார்க்கலாம். அக்டோபர்ல தியேட்டர் ஓப்பன் ஆகும்னு நம்புறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு