Published:Updated:

சினிமா விகடன்

ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

கொரோனா வந்ததால் அந்தப் படமும் ரிலீஸாகலை. அடுத்து நான் கமிட் பண்ணின படங்களோட ஷூட்டிங்கும் ஆரம்பிக்கலை.

சினிமா விகடன்

கொரோனா வந்ததால் அந்தப் படமும் ரிலீஸாகலை. அடுத்து நான் கமிட் பண்ணின படங்களோட ஷூட்டிங்கும் ஆரம்பிக்கலை.

Published:Updated:
ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

‘வீரா’, ‘தமிழ்ப்படம் - 2’, ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனனிடம், ‘இந்த 2020 உங்களுக்கு எப்படி இருந்தது?’ எனக் கேட்டோம்.

ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன்

“பிப்ரவரி மாதம் ஹிப் ஹாப் ஆதியோடு நான் நடிச்ச ‘நான் சிரித்தால்’ படம் ரிலீஸாகி நல்ல ரெஸ்பான்ஸ் வந்ததுக்கு அப்புறம், அசோக் செல்வனோடு நான் நடிச்சிருந்த ‘வேழம்’ படமும் ரிலீஸாக இருந்துச்சு. ஆனால், கொரோனா வந்ததால் அந்தப் படமும் ரிலீஸாகலை. அடுத்து நான் கமிட் பண்ணின படங்களோட ஷூட்டிங்கும் ஆரம்பிக்கலை. படம் சார்ந்த வேலைகள் நடக்காமல் இருந்த மாதிரி, பர்சனல் வேலைகளான ட்ரிப், ஷாப்பிங்கும் போக முடியாமல் போயிடுச்சு. ஆனால், கொரோனா நம்ம உடல்நிலையை நல்லபடியா வெச்சுக்கணும்னு நமக்கே புரிய வெச்சிருக்கு. ரிலாக்ஸா யோசிக்க நேரம் கிடைச்சது. இப்படி சில நல்ல விஷயங்களும் கொரோனாவால நடந்திருக்குன்னு சொல்லலாம். லாக்டெளன் நாள்களில் சில போட்டோஷூட் பண்ணியிருந்தாலும், ‘ரோலிங்’னு சொன்னதும் கேமரா முன்னாடி நடிக்கிறதை ரொம்பவே மிஸ் பண்ணியிருக்கேன். சீக்கிரம் என் படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிப்பாங்கன்னு காத்திட்டிருக்கேன் ப்ரோ” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism