பாவக் கதைகள் மூலம் அறிமுகமாகி, விக்ரம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜாபர் சாதிக். தான் நடிக்கும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் ஜாபரிடம் விக்ரம் படம் குறித்து உரையாடியதிலிருந்து...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`விக்ரம்' அனுபவம் எப்படி இருந்தது?
தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற என்னோட முதல் படம் விக்ரம்தான். `பாவக் கதைகள்' சீரிஸுக்கு முன்னாடியே விக்ரம் டீசர் வந்துருச்சு. பாவக் கதைகள் ரிலீஸ் ஆனதும் லோகேஷ் அண்ணா அதைப் பார்த்துட்டு, 'இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு. கமல் சார்கூட பண்ணனும். பண்றீங்களா?' ன்னு கேட்டாரு. எப்போ செட்டுக்கு போவோம்னு இருந்துச்சு. செட்டுக்கு போனதும் ரொம்பவே பயமாயிடுச்சு. என்னைத் தவிர அங்க இருந்த எல்லாருமே எனக்கு சீனியர்ஸ். அதனால பயந்து பயந்து தான் நடிச்சேன். கூடவே ஒரு தன்னம்பிக்கையும் இருந்துச்சு. இல்லைனா இந்தப் படம் பண்ணியிருக்கவே முடியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் படத்திலேயே கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
கமல் சார் கிட்ட நான் க்ளைமாக்ஸ் சூட் பண்ணும்போதுதான் பேசினேன். லோகேஷ் அண்ணாகிட்ட போய் `என்னை சார் கிட்ட இன்ட்ரோ கொடுங்கண்ணான்னு கேட்டேன். உடனே அவரு `படமே முடியப்போகுது. இன்னுமா நீ பேசல' னு கேட்டு, சார் கிட்ட இன்ட்ரோ கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் எப்ப என்ன கமல் சார் பாத்தாலுமே ஒரு ஸ்மைல் பண்ணுவாரு. இந்த சிரிப்பே நமக்கு போதுமேனு சொல்ற மாதிரி தான் இருக்கும். செட்ல எப்பவுமே நல்லா கம்பீரமாதான் இருப்பாரு.
இந்தப் படத்தில் கிட்டத்தட்ட விஜய் சேதுபதிக்கு தளபதி போல நடித்திருப்பீர்கள். அவருடன் நடிக்கும்போது ஏதாவது சுவையான சம்பவங்கள் நடந்ததுண்டா?
விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்வார். அவர் பேசும்போது அவருடைய ஐடியாலஜி பத்தியும் சொல்வார். என்னை பேசவிட்டு என்னோட ஐடியாலஜி பத்தித் தெரிஞ்சிப்பாரு. பகத் சார்கிட்டலாம் ஆரம்பத்தில பேச ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அப்பறம் அவரே மச்சினு சொல்லி பேச ஆரமிச்சிட்டாரு. கிட்டத்தட்ட செட்ல எல்லாருமே நல்லா பழகக்கூடியவங்கதான்.
படத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் சூர்யாதான். ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சிலிர்ப்பாக இருந்தது. செட்டில் உங்களுக்கு எப்படி இருந்தது?
உங்களை மாதிரிதான் எங்களுக்கும் கடைசி வரைக்கும் சூர்யா சார் கேரக்டரை டைரக்டர் எங்களுக்கு சொல்லவே இல்ல. சூர்யா சார் செட்டுக்கு வரும்போதுதான் எனக்கே தெரியும். அவர் வருவதற்கு முன்னாடி பல பெயர்களை சொல்லுவாங்க. யாரு இந்த ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்துல நடிக்கிறாங்கன்னு ஒரே குழப்பமாவே இருக்கும். அதுக்கு அப்பறம் சூர்யா சார்கிட்ட ஒரு போட்டோ எடுத்து ட்விட்டர்ல போட்டேன். உடனே நிறைய பேரு நிறைய கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
அடுத்து என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?
`வெந்து தணிந்தது காடு' படத்தில் இப்போ நடிச்சிட்டு இருக்கேன். அதுக்கு அப்பறம் தெலுங்குல ஒரு வெப் சீரியஸ்ல நடிச்சிட்டு வரேன்.