Published:Updated:

'தேய்பிறையை பெத்தெடுத்த' எனும் 'ஜகமே தந்திரம்' பாடல் : ஆன்மாவை உலுக்கிய மீனாட்சி இளையராஜா யார்?

மீனாட்சி இளையராஜா

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' என தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பாடி வரும் மீனாட்சி இளையராஜா யார் ?

'தேய்பிறையை பெத்தெடுத்த' எனும் 'ஜகமே தந்திரம்' பாடல் : ஆன்மாவை உலுக்கிய மீனாட்சி இளையராஜா யார்?

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' என தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பாடி வரும் மீனாட்சி இளையராஜா யார் ?

Published:Updated:
மீனாட்சி இளையராஜா

முன்பெல்லாம் குரலை வைத்தே இந்தப் பாடலை பாடியது இவர்தான் என சொல்லிவிடலாம். ஆனால், இப்போது அப்படியில்லை. எண்ணற்ற பாடகர்கள் சினிமா துறையில் அறிமுகமாகி தங்களின் குரலை பதிய வைத்து வருகின்றனர். அதிலும் சில குரல்களை கேட்கும்போது, அவர்கள் யார் என இணையத்தில் தேடத் தோன்றும். அப்படியொரு குரலுக்கு சொந்தக்காரர் மீனாட்சி இளையராஜா. 'கர்ணன்' திரைப்படத்தில் 'தட்டான் தட்டான்' பாடலில் குறைந்த நேரமே இவரது குரல் ஒலித்திருந்தாலும் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. இப்போது 'ஜகமே தந்திரம்' படத்தில் இடம்பெற்ற 'தேய்பிறை' பாடலிலும் அவரின் குரல்தான். யார் இந்த மீனாட்சி இளையராஜா என்பதை விசாரித்து அவரை தொடர்புகொண்டு பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''எனக்கு சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்துல இருக்கிற ஒலக்கூர்னு ஒரு கிராமம். சின்ன வயசுல இருந்தே இசை மீது ஆர்வம். என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஸ்கூல் டீச்சர். இருந்தாலும் அவங்களுக்கும் இசை மேல ஆர்வம் அதிகம். ஆனா, அவங்க முறையா இசை கத்துக்கலை. எனக்கும் அதுல ஆர்வம் இருந்ததனால மியூசிக் காலேஜ்ல சேர்த்துவிட்டாங்க. அப்படிதான் அடையார் இசை கல்லூரியில கர்நாடக சங்கீதம் படிச்சேன். அங்கேயே டீச்சர் டிரெய்னிங்கும் எடுத்துக்கிட்டேன். தவிர, அங்க இருக்கிற நிறைய கோர்ஸ்கள்ல சேர்ந்து படிச்சு முடிச்சேன்.

வேல்முருகன், அந்தோணிதாசன், சின்னப்பொண்ணு ஆகியோருடன் மீனாட்சி இளையராஜா
வேல்முருகன், அந்தோணிதாசன், சின்னப்பொண்ணு ஆகியோருடன் மீனாட்சி இளையராஜா

அப்பப்போ கச்சேரிகளுக்கு போய் பாடுவேன். அப்புறம் கல்யாணமாகி திருச்சிக்கு போனதால சில வருஷம் கேப் விழுந்திடுச்சு. அந்த சமயத்துல, நான் படிச்ச இசைக் கல்லூரியில குரலிசை விரிவுரையாளர் வேலைக்கு இடம் காலியா இருந்தது. அதுக்கு அப்ளை பண்ணி ஒப்பந்த அடிப்படையில படிச்ச காலேஜ்லயே வேலைக்கு சேர்ந்துட்டேன். 2012-ல இருந்து இப்போ வரை குரலிசை விரிவுரையாளரா வேலை செஞ்சுட்டு இருக்கேன்.

என்னுடைய கணவர் பெயர் இளையராஜா. எங்களுடையது காதல் திருமணங்கிறதுனால, ரெண்டு பேருடைய குடும்பத்துல இருந்தும் பெருசா ஆதரவு கிடையாது. அதனால, நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா வாழ்க்கையை ஆரம்பிச்சோம். எனக்கு இருக்கிற ஆர்வத்தை புரிஞ்சுக்கிட்டு எனக்கு வாய்ப்பு தேடி நிறைய ஸ்டூடியோவுக்கு என் கணவரும் ஏறி இறங்கினார். அப்போ இசையமைப்பாளர் தாஜ்நூர் சார் திருக்குறளை கிராமிய வடிவத்துல பாடணும்னு நாட்டுப்புற பாடகர்களுக்கு ஆடிஷன் மாதிரி வெச்சார். அதுல நான் கலந்துக்கிட்டேன். அந்த இடத்துலதான் அந்தோணிதாசன் அண்ணா, சின்னப்பொன்னு அக்கா எல்லோரையும் சந்திச்சேன். என்னுடைய காலேஜ் ஜூனியர்தான் வேல்முருகன். அந்தத் தம்பியும் வந்திருந்தார். இவங்களுடன் நட்பாகி இவங்க கூடவே கச்சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன்.

கச்சேரி குழுவுடன் மீனாட்சி இளையராஜா
கச்சேரி குழுவுடன் மீனாட்சி இளையராஜா

அந்தோணிதாசன் அண்ணாவும் அவருடைய மனைவி ரீட்டா அண்ணியும்தான் எங்களுக்கு பெரிய சப்போர்ட். ஃபேமிலி ஃப்ரெண்டாகிட்டாங்க. இந்தப் பொண்ணு நல்லா பாடுது. ஆனா, வழி தெரியாமல் இருக்குனு நிறைய இசையமைப்பாளர்கள்கிட்ட என்னைப் பத்தி சொல்லி என் குரலை போட்டுக்காட்டி, 'இந்த குரலை பயன்படுத்தமுடியுமானு பாருங்க'னு என்னை ரெக்கமண்ட் பண்ணுவார், அந்தோணிதாசன் அண்ணா. அதேமாதிரி வேல்முருகன் நிறைய இடங்கள்ல என்னை சொல்லிவிடுவார். அந்தோணிதாசன் அண்ணாக்கூட நிறைய கச்சேரிகள் பாடிருக்கேன். தவிர, அவர் இசையமைச்ச 'எம்.ஜி.ஆர் மகன்' படத்துல 'ஜில்லா அசந்து'னு ஒரு பாட்டு பாட வெச்சார்.

அந்தோணி தாசன் அண்ணன் சொல்லித்தான் சந்தோஷ் நாராயணன் சாருக்கு என்னைத் தெரியும். போன வருஷம் லாக்டெளன்ல திருச்சியில இருந்தேன். அப்போ எனக்கு சந்தோஷ் சார் போன் பண்ணி, 'அந்தோணிதாசன் உங்க நம்பர் கொடுத்தார். தனுஷ் சாரோட 'ஜகமே தந்திரம்' படத்துல அம்மா பாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு. பாடுறீங்களா?'னு கேட்டார். உடனே சரிங்க சார்னு சொல்லிட்டேன். நான் திருச்சியிலயும் அவர் சென்னைலயும் இருந்து ரெக்கார்ட் பண்ண பாட்டுதான் 'தேய்பிறை'. 'நீங்க பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்தோணிதாசன் சொல்லி தெரியும்.

சந்தோஷ் நாராயணனுடன் மீனாட்சி இளையராஜா மற்றும் அவரது கணவர், குழந்தை
சந்தோஷ் நாராயணனுடன் மீனாட்சி இளையராஜா மற்றும் அவரது கணவர், குழந்தை

இந்தப் பாடல் உங்களுக்கு பெரிய டர்னிங் பாயின்டா இருக்கும்'னு ரெக்கார்டிங் முடிஞ்சவுடன் என்கிட்ட சந்தோஷ் நாராயணன் சார் ரொம்ப நல்லா பேசினார். அவருடைய மனைவி மீனாட்சி மேம், தீ பாப்பா எல்லோரும் நல்லா பழகினாங்க. அப்புறம், 'கர்ணன்' படத்துல 'தட்டான் தட்டான்' பாடலை பாட வெச்சார். ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. தனுஷ் சார் பாடுறதை தனியா நான் பாடுறதை தனியா எடுத்தாங்க. அதனால, அவரை சந்திக்க முடியாமல் போயிடுச்சு. நான் சினிமாவுல பாடுறது என்கூட வேலை செய்ற ஆசிரியர்கள், என் ஸ்டூடன்டஸ், அவங்களுடைய பெற்றோர்கள்னு எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.

இது எல்லாத்துக்கும் முன்னாடி தேவா சார் ட்ரூப்ல லைட் மியூசிக் பாடியிருக்கேன். ஆனா, எனக்கு சினிமாவுல முதன்முதல்ல வாய்ப்பு கொடுத்தது தாஜ்நூர் சார்தான். 'பொம்மிவீரன்' படத்துல ஒரு பாடல் பாடினேன். சத்யா சார் மியூசிக்ல விகடன் தயாரிச்ச 'நாயகி' சீரியலுக்கு பாடியிருந்தேன். அதை பார்த்துட்டு, 'தேள்'னு பிரபுதேவா சாருடைய படத்துல பாட வெச்சிருக்கார். இன்னும் அது ரிலீஸாகலை. தவிர, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்துலயும் பாடிருக்கேன். என் குடும்ப சூழல் எல்லோருக்கும் தெரியும். நான் காலேஜ்ல வேலை செய்றதனால பெரும்பாலும் எனக்கு சாயந்திரத்துக்கு மேலதான் ரெக்கார்டிங் வைப்பாங்க. அந்த வகையில, நான் கொடுத்து வெச்சவதான். எனக்கு வாய்ப்பு கொடுத்த எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதை நோக்கி சந்தோஷமா பயணிக்க இருக்கேன்'' என்று நம்பிக்கையோடு பேசினார் மீனாட்சி இளையராஜா.