Election bannerElection banner
Published:Updated:

'ஜகமே தந்திரம்' பிரச்னை முடிந்தது... தியேட்டரா, ஓடிடியா எதில் ரிலீஸ் தெரியுமா?!

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்'. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் பிரச்னை க்ளைமேக்ஸை நெருங்கியிருக்கிறது. தியேட்டர்கள் முழுமையாகத் திறந்தபிறகும், 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தப்பிறகும் நெட்ஃபிளிக்ஸில் நேரடி ரிலீஸ் எனத்தகவல் பரவ அதிர்ந்துபோனது கோலிவுட்.

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்'. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு மே 1-ம் தேதி ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தனுஷின் அடுத்தப்படமான `கர்ணன்' ஏப்ரல் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியானதும் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என முதலில் முடிவெடுத்து தயாரிப்புத் தரப்பு தனுஷுக்கு தகவல் சொன்னது. ஆனால், இடையில் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக நெட்ஃபிளிக்ஸில் பேச்சுவார்த்தைகள் நடக்க அதிருப்பதியானது நடிகர், இயக்குநர் தரப்பு.

தனுஷ்,
தனுஷ்,

தனுஷ் வெளிப்படையாகவே நேற்று ``தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறேன்'' என ட்வீட்போட பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவாக தியேட்டர் ரிலீஸ்தான் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத் தேர்தல் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டால் மே மாதம் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம், மே மாதம் தேர்தல் என்றால் மார்ச்சிலேயே படத்தை ரிலீஸ் செய்யலாம் எனப் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு