Published:Updated:

`நோய்த் தொற்றிலிருந்து உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ்பாண்ட்?' - `NO TIME TO DIE' சுவாரஸ்யங்கள்

James Bond
James Bond

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எல்லாம் ஒரே கதைதான். படத்தில் ஜேம்ஸ்பாண்ட் உயிருக்கு எப்போதும் எந்த ஆபத்தும் வரவே வராது. தப்பித்தவறி இந்த வில்லன் கும்பல் ஜேம்ஸ்பாண்டை பிடித்துவிட்டாலும், டப்பென சுட்டுக்கொள்ளாமல் சொற்பொழிவைத் தொடங்கிவிடுவார்கள்.

பாண்ட் கேர்ள்ஸ், கன் பேரள் சீக்வன்ஸ், ஆஸ்டன் மார்டின், மனி பென்னி என ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எல்லாம் ஒரே கதைதான். அதிலும் ஜேம்ஸ்பாண்ட் உயிருக்கு எப்போதும் எந்த ஆபத்தும் வரவே வராது. தப்பித்தவறி இந்த வில்லன் கும்பல் ஜேம்ஸ்பாண்டைப் பிடித்துவிட்டாலும், டப்பென சுட்டுக்கொள்ளாமல் சொற்பொழிவைத் தொடங்கிவிடுவார்கள். அதற்குள் மிஸ்டர் பாண்ட், ஏதேனும் செய்து எஸ்கேப் ஆகிவிடுவார். இப்படியே 24 படங்களையும் ஓட்டிவிட்ட ஹாலிவுட் இப்போதுதான் உண்மையை உணர்ந்து நிறைய மாற்றங்களைப் புகுத்திவருகிறது.

James Bond
James Bond

ஜேம்ஸ்பாண்ட் சீரிஸின் 25வது படமான `நோ டைம் டு டை', இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா கொடுமையினால், நவம்பர் மாதத்துக்குத் தள்ளிப்போனது. இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதில் ஜேம்ஸ்பாண்ட், உலகத்தை நோய்த் தொற்றுப் பரவலில் இருந்து காப்பாற்றும் வேலையை செய்யவிருக்கிறார் என்கிறார்கள். மேலும், இதில் 5 வயது மகளுக்கு தந்தையாகவும் வருகிறாராம். 24வது படமான, `ஸ்பெக்டர்' திரைப்படத்தில், ஜேம்ஸ்பாண்டுக்கும் டாக்டர் மேட்லின் ஸ்வானுக்கும் இடையே காதல் மலர்வதாக காட்டப்பட்டிருந்தது. அந்தக் காதலின் சாட்சியாகப் பிறந்த குழந்தைதான் இந்த 5 வயது மகள், மடில்டே.

James Bond
James Bond

`இதுவரைக்கும் ஜேம்ஸ் பாண்டை ஆக்‌ஷன் ஹீரோவாதானே பார்த்த, இனி சென்டிமென்ட் ஹீரோவா பார்ப்ப' என 007 ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விறுவிறுப்புக்கும், நகைச்சுவைக்கும் நாங்க இருக்கோம் என படக்குழுவும் பாஸிட்டிவ் குறியீடு காட்டியிருக்கிறார்கள். `இது கோவிட் 19 வைரஸ் பற்றி அல்ல, ஆனால் அதுபோன்ற ஒன்றுதான். டைமிங்ல அமைஞ்சுடுச்சு' என மகிழ்ச்சி கலந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள். எது எப்படியோ, படம் முடிந்து `எஞ்சாமி...' என ஜேம்ஸ்பாண்ட் தன் மகளை ஆரத்தழுவும்போது, உலகமே கண்ணீர்விடப்போகிறது!

அடுத்த கட்டுரைக்கு