கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஒரே நாளுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வாழும் ஹீரோ!

ஜாங்கோ படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாங்கோ படத்தில்

ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சவுடன், ‘இதுக்கு எந்தத் தயாரிப்பாளர் நம்பி முன்வருவாங்க, அவங்களுக்குப் புரியுமா’ன்னு சந்தேகம் இருந்தது.

‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார், ‘மரகத நாணயம்’ ஏ.ஆர்.கே.சரவணன் எனத் திருப்பூரிலிருந்து கிளம்பி வந்து தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர்களின் பட்டியலில் மனோ கார்த்திகேயனின் பெயரும் இணையவிருக்கிறது.

‘‘ரவி கடையிலதான் நின்னு ஓயாம சினிமாக் கதை பேசிட்டு இருப்போம். இந்த கேங்கில் முதலில் சென்னைக்கு வந்தது நான்தான். முறையா சினிமா கத்துக்கணும்னு நினைச்சு அறிவழகன் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். ராம் ‘முண்டாசுப்பட்டி’ பண்ணும்போது போய் இணை இயக்குநரா வேலை செஞ்சேன். எங்களுக்குள்ள யார் புதுசா கதை எழுதினாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆலோசிச்சு அதை மெருகேத்துவோம். ஆத்மார்த்தமான நட்பு எங்களை வழிநடத்துது’’ என்கிற மனோ கார்த்திகேயனின் ‘ஜாங்கோ’வும் சயின்ஸ் ஃபிக்‌ஷன்தான்.

ஒரே நாளுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வாழும் ஹீரோ!
ஒரே நாளுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வாழும் ஹீரோ!

``முதல் படமே டைம் லூப் வெச்சு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானர்ல பண்றீங்க?’’

‘‘ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதைதான் பண்ணி வெச்சிருந்தேன். பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரிய ஹீரோன்னு ஒப்பந்தமாகி எல்லாம் சரியா போய்க்கிட்டிருந்த சமயத்துல டீமானிடைசேஷன் வந்து அது தள்ளிப்போச்சு. அதுக்குள்ள வேறொரு கதை பண்ணலாம்னு ஆரம்பிச்சதுதான் இந்தப் படம். ‘நிறைய த்ரில்லர் படங்கள் வருது. நாம வித்தியாசமா ஏதாவது கொடுக்கணுமே’ன்னு யோசிச்சப்போ வந்த ஐடியாதான், டைம் லூப் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர். எக்கச்சக்க வேலை இருக்கும்னு தெரிஞ்சுதான் ஆரம்பிச்சேன். ஆனா, நான் நினைச்சதைவிட அதிக வேலை வாங்கிடுச்சு. டைம் லூப் கதைங்கிறதனால ஒரு இடத்துல மாற்றம் பண்ணினா, இன்னொரு இடத்துல இடிக்கும். ஹாலிவுட்ல நிறைய டைம் லூப் படங்கள் வந்திருந்தாலும் நம்ம ஊருக்கு இது புதுசு. இது எப்படி வொர்க் அவுட்டாகும்னு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. நண்பர்கள்கிட்ட கொடுத்துக் கருத்து கேட்கும்போது, அவங்க சொன்னதுதான் எனக்கு நம்பிக்கை தந்தது.’’

ஒரே நாளுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வாழும் ஹீரோ!
ஒரே நாளுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வாழும் ஹீரோ!

``சி.வி.குமார் இதில் தயாரிப்பாளரா எப்படி வந்தார்?’’

‘‘ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சவுடன், ‘இதுக்கு எந்தத் தயாரிப்பாளர் நம்பி முன்வருவாங்க, அவங்களுக்குப் புரியுமா’ன்னு சந்தேகம் இருந்தது. அதே சமயம், சி.வி.குமார் சார் இதைப் புரிஞ்சு முன்வருவார்னு நம்பிக்கை இருந்தது. நான் நினைச்ச மாதிரியே, கதையைப் படிச்சுட்டு உடனே ஆபீஸுக்குக் கூப்பிட்டு ‘நான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்’னு சொல்லிட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்தது.’’

மனோ கார்த்திகேயன்
மனோ கார்த்திகேயன்

`` ‘ஜாங்கோ’ படத்துல என்ன சுவாரஸ்யம்?’’

‘‘ஒரே காலகட்டத்துக்குள்ளயோ அல்லது ஒரே சம்பவத்துக்குள்ளேயோ மாட்டிக்கிட்டு இருக்கிறதுதான் எல்லா டைம் லூப் கதைகளிலும் வரும். அந்த மாதிரி, திரும்பத் திரும்ப ஒரே நாளுக்குள்ளேயே வாழ்ந்துகிட்டிருக்கார் இந்தப் பட ஹீரோ. அந்த நாளுக்குள்ள என்னவெல்லாம் நடக்குது, ஏன் நடக்குது, அதிலிருந்து எப்படி வெளியே வர்றாங்க என்பதை சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கேன்.

‘ஜாங்கோ’ங்கற ஜெர்மன் வார்த்தைக்கு ‘மீண்டும் எழுவேன்’னு அர்த்தம். இந்த வார்த்தை கதைக்கும் சரியா இருந்தது. சி.வி.குமார் என்கிட்ட ‘புதுமுக ஹீரோவை வெச்சுப் போலாமா’ன்னு கேட்டார். எனக்குத் தயக்கமா இருந்தது. உடனே, ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ், ‘குரங்கு பொம்மை’ நித்திலன், ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார்னு நண்பர்கள்கிட்ட கேட்டேன். ‘இவங்களால பண்ண முடியும்னு நம்புனீங்கன்னா பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. சதீஷ் நிஜத்தில் ஒரு பிசினஸ் பர்சன். அவருடைய தோற்றம் டாக்டர் கேரக்டருக்கு சரியா பொருந்திப் போச்சு. மிருணாளினியை டப்ஸ்மாஷ் பார்த்துதான் கமிட் பண்ணினோம். ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. கருணாகரன், வேலு பிரபாகரன் சார், ‘நக்கலைட்ஸ்’ தனம் அம்மான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்ச கார்த்திக் தில், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் ஷான் லோகேஷ்னு பலமான டீம் அமைஞ்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம்.’’