Published:Updated:

`மூன்று மொழிகளுக்கும் ஒரே பெயரே இருக்கட்டுமே..!’ - கங்கனாவின் ரெக்வஸ்ட்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்க ஒரு போட்டா போட்டியே நடந்தது என்று சொல்லலாம்.

kangana ranaut
kangana ranaut

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ’தி அயர்ன் லேடி’ என்கிற பெயரில் நித்யா மேனனை வைத்து, ஜெ.வின் வாழ்க்கையைப் படமாக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அந்தப் படம் எந்த நிலையில் இருக்கிறது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. ஆனால், இயக்குநர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகிறது.

thalaivi title look
thalaivi title look

`தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கு `தலைவி’ எனவும், இந்தி வெர்ஷனுக்கு ’ஜெயா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்தப் பெயர்கள் குறித்த தன்னுடைய கருத்தை, இயக்குநர் விஜய்யிடம் கங்கனா தெரிவித்துள்ளார்.

`ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும்போது, அவை மூன்றுக்கும் ஒரே பெயர் வைப்பது தானே சரியாக இருக்கும். அதனால், இந்தி வெர்ஷனுக்கும் `தலைவி’ என்கிற பெயரையே வைக்கலாம்’ என கங்கனா ரெக்வஸ்ட் வைக்க, இது குறித்து படக்குழு யோசித்து வருகிறதாம். 'தலைவி' என்கிற பெயரில் இந்தி வெர்ஷனின் டைட்டில் லுக் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.