Published:Updated:

`ஜெயம்' ரவியின் 25வது படம்! - டைட்டிலை இறுதிசெய்த படக்குழு?

`கோமாளி’ கொடுத்த வெற்றி உற்சாகத்தில், தனது 25வது படத்தை விறுவிறுவென முடித்திருக்கிறார், ’ஜெயம்’ ரவி.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் சமீபத்திய படங்களில் கோமாளி அவருக்கு ஒரு நல்ல வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில், தனது 25-வது படத்தை விறுவிறுவென முடித்திருக்கிறார்.

Vikatan

தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் `தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கமிட்டாகியிருந்தார், `ஜெயம்’ ரவி. இதுதான் அவரது 25-வது படமாக இருக்கும் என எதிர்பார்த்தால், ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களின் டைரக்டர் லக்‌ஷ்மண் இயக்கத்தில், தனது 25-வது படத்தை ஜெயம் ரவி தொடங்கினார்.

அடங்கமறு படத்தைத் தயாரித்த, ஜெயம் ரவியின் அத்தைதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க, இமான் இசையமைக்கிறார். டட்லி ஒளிப்பதிவில் படம் தயாராகியிருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வமாக படத்தின் பெயரை அறிவிக்கவில்லை என்றாலும், இந்தப் படத்திற்கு `சர்வாதிகாரி’ என பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 26-வது படத்திற்கு `ஜன கண மன’ என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான், தற்போது பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி.