Published:Updated:

மகள் ஜான்வி கபூரை தமிழில் அறிமுகப்படுத்தும் போனி கபூர்?#Ajith60 அப்டேட்ஸ்

அஜித் நடிக்கும் `நேர்கொண்ட பார்வை' வரும் வியாழக்கிழமை (8-8-2019) வெளியாகிறது. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Ajith - H.Vinoth
Ajith - H.Vinoth ( Nerkonda Paarvai )

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான `பிங்க்'கின் ரீமேக்கான இப்படத்தை போனி கபூர் தயாரித்தார். அதுமட்டுமின்றி இதே தயாரிப்பாளர் - நடிகர் - இயக்குநர் கூட்டணி, அடுத்த படத்திலும் இணைகிறது. `சதுரங்க வேட்டை', `தீரன் எண் அதிகாரம் ஒன்று' ஆகிய இரு படங்களின் மூலம் தனக்கான தனித்துவத்தைப் பெற்றுவிட்டார், இயக்குநர் ஹெச்.வினோத். `நேர்கொண்ட பார்வை', `பிங்க்' படத்தின் ரீமேக் என்பதால் கதையில் பெரிதாக மாற்றம் இருக்காது.

Jhanvi Kapoor
Jhanvi Kapoor

இருப்பினும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்குத் தகுந்தார்போல் சில மாறுதல்களைச் செய்திருப்பதாக ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அடுத்த படத்தில்தான் அவருடைய சொந்தக் கதையை வைத்து அஜித்தை இயக்கப் போகிறார். தற்போது `அஜித் 60' என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங், ஆகஸ்ட் மாதமே தொடங்க உள்ளதாகவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், அஜித் நடிக்கும் இப்படத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது. `தடக்' எனும் படம் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார், ஜான்வி கபூர். முதலில் சிம்பு நடிக்கும் `மாநாடு' படத்தில் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதன் பின்னர் கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கமிட்டானார். இந்த முறை தன் அப்பா தயாரிக்கும் படமான `அஜித் 60' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவார் என்று கூறப்பட்டுவருகிறது. மேலும், அஜித்தின் மகளாக ஜான்வி கபூர் நடிக்கலாம் என்றும் கோலிவுட் கிசுகிசுத்து வருகிறது.