Published:Updated:

ஒரு குரல அடக்கணும்னு நினைச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும் - ஜிப்ஸி டிரெய்லர்

ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது.

ஜிப்ஸி
ஜிப்ஸி

ஜிப்ஸி படத்தில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும் மிஸ் இமாச்சலபிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் , மலையாள நடிகர் சன்னி வெய்ன், இயக்குநர் லால் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், ஆரசியல் என இரண்டும் ஒருசேர் கலவையாய் இப்படம் தயாராகியுள்ளது.

ஜீவா
ஜீவா

குதிரையுடன் ஊர் ஊராக செல்லும் இசைக்கலைஞனாக நடித்துள்ளார் ஜீவா. படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது குறிப்ப்டத்தக்கது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செல்வக்குமார் ஒளிப்பதிவில் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

நடஷா சிங்
நடஷா சிங்

சி.எஸ்.பாலசந்தர் கலையமைப்பை மேற்கொள்ள படத்தின் ஸ்டன்ட் காட்சிளை தினேஷ் சுப்புராயன் வடிவமைக்கிறார். படத்தின் பாடல்களை யுகபாரதி, ராஜுமுருகன் அறிவு உள்ளிட்டோர் எழுதியுள்ளார்கள்.