Published:Updated:

`ஜீவி'யைத் தொடர்ந்து வெற்றி கமிட்டாகியிருக்கும் சைக்கோ - த்ரில்லர் படம்!

தார்மிக் லீ

`8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ஶ்ரீ கணேஷ். அதில் ஹீரோவாக நடித்த வெற்றிக்கும் அதுதான் முதல் படம். விமர்சன ரீதியாக படம், பலரால் பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து வெற்றி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், `ஜீவி'.

Vetri
Vetri ( ஜீவி )

வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், `ஜீவி'. த்ரில்லர் - டிராமா ஜானரில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெறும் பாராட்டுகளைப் பெற்றது. இதன் கதையையும், திரைக்கதையும் பாபு தமிழ் என்பவர் எழுதியுள்ளார். ஹீரோவாக நடித்த வெற்றியின் நடிப்பை பலரும் பாராட்டினர். பிரவீன் குமார் ஒளிப்பதிவு அமைக்க, கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். கருணாகரன், ரோகினி, மைம் கோபி போன்றவர்கள் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Vetri
Vetri

`8 தோட்டாக்கள்', `ஜீவி' படத்தைத் தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார், வெற்றி. சைக்கா - த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தை, சியாம் மற்றும் பிரவீன் ஆகிய இரு அறிமுக இயக்குநர்கள் இயக்குகிறார்கள். வெற்றிக்கு ஜோடியாக நடிக்கும் மேக்னா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வரும் விநாயகர் சதூர்த்தி அன்று (செப்டம்பர் 2) படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளது, படக்குழு. 45 நாள்கள் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, நாகர்கோவில், பாலக்காடு உள்ளிட இடங்களில் நடைபெற உள்ளது. படத்தின் டைட்டில், விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.