Published:Updated:

"ஆக்ச்சுவலா மொட்டைமாடி போட்டோஷூட்ல என்ன நடந்துச்சுனா...!?'' வைரல் க்ளிக் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

தோனி. ப்ரஷ்ஷரைக் கையாளுற விதம் அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம். கேப்டன்னாலே, தோனிதான். அவரும் அவர் குழந்தை ஸிவாவும் பண்ற வீடியோக்களுக்கு ரம்யா பாண்டியன் பெரிய ரசிகை

'ஜோக்கர்' படத்தில் மல்லிகாவாக, 'ஆண் தேவதை' படத்தில் ஜெர்ஸிகாவாக நடித்த ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் செம வைரல். அதுகுறித்தும் அவரது கரியர் குறித்தும் ஒரு ஜாலி சாட்!

உங்களுடைய போட்டோஷூட் சோஷியல் மீடியா முழுக்க வைரல். அதைப் பார்க்கும்போது எப்படி இருக்கு?

"எப்பவும் போலதான் கேஷுவலா போட்டோஷூட் எடுத்து அப்லோடு பண்ணேன். ஆனா, இந்த அளவுக்கு வைரலாகும்னு நினைக்கல. எங்க வீட்டு மொட்டைமாடியிலதான் அந்த போட்டோஷூட் எடுத்தோம். சுரேந்தர்னு ஒருத்தர்தான் அந்த போட்டோக்களையெல்லாம் எடுத்தார். அவர் இயக்குநர் ஆகணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். நடிப்பு வகுப்புக்கு போனப்போ, எனக்குப் பழக்கம். சும்மா ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு நினைச்சு பண்ணதுதான் இது. ஸ்டூடியோவுக்குப் போய் மேக்கப் போட்டு எடுக்கிறதைவிட, கேஷுவலா எடுக்கலாம்னு அவர்தான் ஐடியா கொடுத்தார். இந்த போட்டோக்கள் வைரல் ஆகியிருக்குனு சொல்லும்போது, கலாய்க்கிறாங்கன்னு நினைச்சேன். அப்புறம்தான் உண்மைனு தெரிஞ்சது. நான் எதிர்பார்க்காத சந்தோஷம் இது."

அடிக்கடி ஹீரோயின்கள் போட்டோஷூட் பண்ணுவது ஏன்?

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

"ஒரு சேஞ்ச் ஓவர் காட்டுறதுக்குதான். படத்துல அந்தக் கேரக்டரா நடிக்கிறோம். ஆனா, நிஜத்துல எப்படி இருக்கோம்னு காட்டத்தான் போட்டோஷூட் பண்றோம். சிலபேர் அவங்களோட ஆசைக்காக போட்டோஷூட் பண்ணுவாங்க. உதாரணத்துக்கு, கொஞ்சம் கலர் ஆகி, உடல் எடை குறைச்சிருக்கோம்னா, அந்த சேஞ்ச் ஓவரை காட்டி, தங்களைப் பதிவுபண்றதுக்காகப் பண்றாங்க."

நீங்க நடிச்ச ரெண்டு படங்களும் விமர்சனரீதியா நல்ல பெயர் வாங்கியிருக்கு. உங்களுக்கான இடம்னு நீங்க நினைக்கிறது என்ன?

"ஆர்ட் ஜானர் படங்கள்தான் நான் பண்ணுவேன்னு பலபேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. எனக்கு வர்ற கதைகளும் அப்படித்தான் இருக்கு. இப்படித்தான் நடிக்கணும்னு எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வித்தியாசமான கதைக்களம், வெவ்வேற ஜானர்னு எல்லாவிதமாவும் நடிக்கணும்னுதான் நினைக்கிறேன். எனக்கான இடம் இப்படித்தான் இருக்கணும்னு நான் யோசிக்கிறதில்லை. ஆனா, போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு."

'ஜோக்கர்' படத்துக்கு கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு?

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

"படம் பார்த்துட்டு வந்தவங்க, சோமசுந்தரம் சார்கிட்டதான் பேசுனாங்க. என்னை அவங்களுக்கு அடையாளமே தெரியல. அதுவே பெரிய சந்தோஷம். சினிமாவுல இருந்து பலபேர் பாராட்டினாங்க. படம் வெளியாகி ஒரு மாதம் கழிச்சு, 'நான் ஏதோ பெங்காலி பொண்ணுனு நினைச்சேன். சூப்பரா பண்ணியிருந்தீங்க'னு பா.ரஞ்சித் சார் பாராட்டினார். தர்மபுரியில ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தப்போ, கார்த்தி சார் வந்திருந்தார். அவர் என்னை 'அந்தப் பொண்ணு நல்லா நடிக்குது'னு சொல்லியிருக்கார். ரஜினி சார் பாராட்டினதா, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சொன்னார். அதைக் கேட்டதும் செம ஹாப்பி!"

'ஆண் தேவதை' படத்துல கத்துக்கிட்ட விஷயம் என்ன?

" 'ஜோக்கர்' படத்தைவிட 'ஆண் தேவதை' படத்துல நிறைய வசனங்கள் இருந்தது. டயலாக் டெலிவரி பத்தி நிறைய கத்துக்கிட்டேன். தாமிரா சார், சமுத்திரக்கனி சார், விஜய் மில்டன் சார்... மூணு இயக்குநர்களும் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க."

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

அடுத்து என்ன படம்?

"இதுவரை எதுவும் கமிட் பண்ணலை. ஆனா, ஒரு பெரிய படத்துல நடிக்க பேச்சுவார்த்தை போய்கிட்டு இருக்கு. சீக்கிரமே சொல்றேன்."

உங்க மாடித்தோட்டம் எந்த அளவுல இருக்கு?

"சென்னையில தண்ணிப் பிரச்னை இருக்கிறதால, தற்காலிகமா மாடித் தோட்டத்துல ஒண்ணும் போடலை. தினமும் ரெண்டு மணி நேரம்தான் தண்ணி வருது. அது நமக்கே சரியாகிடுது. தண்ணிப் பிரச்னை தீர்ந்த பிறகு, மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிக்கணும்."

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஃப்ரீயா இருக்கிறப்போ, உங்க பொழுதுபோக்கு என்ன?

"படம் பார்க்கிறதும் புத்தகம் படிக்கிறதும்தான் என் ஹாபி. இப்போ சினிமா தொடர்பான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சார்லி சாப்ளின் வாழ்க்கையைப் பத்தி இப்போ படிச்சுக்கிட்டிருக்கேன்."

யார்கூட செல்ஃபி எடுக்க ஆசை?

"தல தோனி. ப்ரஷ்ஷரைக் கையாளுற விதம் அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம். கேப்டன்னாலே, தோனிதான். அவரும் அவர் குழந்தை ஸிவாவும் பண்ற வீடியோக்களுக்கு நான் பெரிய ரசிகை!"

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஃபேன்-கேர்ள் மொமென்ட்?

"நான் விஜய் சேதுபதியின் ரசிகை. குறிப்பா, அவருடைய டயலாக் டெலிவரிக்காகவே 'விக்ரம் வேதா' படத்தை தியேட்டர்ல நாலைஞ்சு முறை பார்த்தேன். 'ஆண் தேவதை' விழாவுல அவரை சந்திக்கும்போது, நான் அவருடைய ரசிகைனு சொன்னேன். அப்போ அவர்கூட எடுத்த செல்ஃபிதான் என் ஃபேன்-கேர்ள் மொமென்ட்."

'இந்தப் பழக்கத்தைக் கைவிடணும்னு நினைக்கிறேன். ஆனா முடியல'னு நீங்க நினைக்கிறது என்ன?

"அடிக்கடி மொபைல் எடுத்து யாராவது மெசேஜ், கால் பண்ணியிருக்காங்களானு செக் பண்றது."

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பெருமையான தருணம், அவமானப்பட்ட தருணம்?

" 'ஜோக்கர்' படத்துக்கு தேசிய விருது கிடைச்சது பெருமையான தருணம். 'ஜோக்கர்' படத்துக்கு முன்னாடி ஒரு படத்துல கமிட்டாகி ஒருநாள் ஷூட்டிங் முடிஞ்சது. அடுத்த நாள், தயாரிப்பாளர்களுக்குள்ளே ஏதோ பிரச்னைனு சொல்லி, ஹீரோயினை மாத்திட்டாங்க. அப்போ எனக்கு செம அப்செட்!"

என்ன படிச்சிருக்கீங்க?

"அண்ணா யுனிவர்சிட்டியில பயோமெடிக்கல் என்ஜினீயரிங்."

எந்த நடிகைகள் பிடிக்கும்?

"ராதிகா, சிம்ரன், அனுஷ்கா"

பிடித்த உணவு ?

"ஆல்வேஸ் பிரியாணி"

கூகுள்ல அதிகமா எதைத் தேடுவீங்க?

"உணவு பத்தியும், வொர்க் அவுட் பத்தியும்தான் தேடுவேன்,"

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பயன்படுத்தும் மொபைல், கார் ?

"மொபைல் - விவோ V1 5 ப்ரோ, கார் - ஹூண்டாய் i10"

அடுத்த கட்டுரைக்கு