Published:Updated:

"தமிழ் சினிமாவுல இந்த ரெண்டு நடிகருக்குத்தான் ஃபைட் நல்லா வரும்!"- ஜூடோ ரத்தினத்துடன் ஓர் உரையாடல்

நமது எல்லாக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் அளிக்கிறார் ஜூடோ ரத்தினம். வீடியோவை முழுமையாகக் காண...

ஜூடோ ரத்தினம்... இந்திய சினிமாவின் 50 ஆண்டுகால வரலாற்றாவணம். ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஸ்டண்ட் டைரக்டர். ரஜினிக்கு 46 படங்களில் சண்டை பயிற்சியளித்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றுத்தந்தவர். ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் ஆக்கியவர். கமலுக்கு ஆக்ஷன் அந்தஸ்து பெற்றுத்தந்தவர். கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு 52 படங்களில் சண்டை பயிற்சி கொடுத்து கர்நாடகத்தின் ஆக்ஷன் கிங்காக ஆக்கியவர். 1000 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் டைரக்டராகப் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினத்துக்கு இப்போது 92 வயதாகிறது. சென்னையின் பரபரப்புகளை விட்டு ஒதுங்கி தன் பிறந்த ஊரான குடியாத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஜூடோ ரத்தினம்
ஜூடோ ரத்தினம்

குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள ஒரு மூன்றடிக்கு வீட்டின் கதவைத் தட்டுகிறோம். மெல்ல வாசற்படியிறங்கி வந்து கதவைத் திறந்து விழியிடுக்கிப் பார்க்கிறார் ஜூடோ ரத்தினம். 'ஆனந்த விகடன்' என்று அறிமுகம் செய்துகொண்டதும் முகம் மலரச் சிரித்து கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார். முன் அறையில் 'முரட்டுக்காளை' தொடங்கி 'முந்தானை முடிச்சு' வரை பல நூறு படங்களின் வெள்ளி விழாக்களில் வழங்கப்பட்ட கேடயங்கள் நிறைந்திருக்கின்றன. கோவிந்தம்மாள் என்று பெயரிடப்பட்ட பெரிய படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நிஞ்சா, வாள் கருவிகள் சுவர்களில் மாட்டப்பட்டுள்ளன. அறையின் மையத்தில் இருக்கும் ஒற்றை இருக்கையில் அமர்ந்தபடி நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கும் ஜூடோ ரத்தினத்திடம் உரையாடினோம்!

ரஜினி படம்னா பைட் ஜூரோ ரத்தினம்தான்னு சொல்ற அளவுக்கு அவர்கூட நிறைய படங்கள்ல ஸ்டண்ட் அமைச்சிருக்கீங்க... அந்த அனுபவத்தைப் பகிர்ந்துக்குங்களேன்?

கமல்ஹாசனுக்கு பைட் சொல்லிக்கொடுத்த அனுபவம்?
எந்த நடிகருக்கு பைட்டே வராது...? ரொம்ப சிரமப்பட்டு கத்துக்கொடுக்க வேண்டியிருக்கும்?

எம்ஜிஆரோட சமகாலத்துல சினிமாவுல இருந்திருக்கீங்க... அவரோட நீங்க ஸ்டண்ட் டைரக்டரா வேலை செய்யவேயில்லையே ஏன்?

ஜூடோ ரத்தினம்
ஜூடோ ரத்தினம்

எந்த நடிகருக்கு அதிகம் டூப் போட்டு ஷூட் பண்ணுவீங்க?
பாக்யராஜ்க்கு நீங்கதான் ஸ்டண்ட் குரு. அவரைப்பத்திச் சொல்லுங்க?

ராமராஜன் சண்டையெல்லாம் வித்தியாசமா இருக்கும். அவருக்கு பைட் வருமா?

என எல்லாக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் அளிக்கிறார் ஜூடோ ரத்தினம். வீடியோவை முழுமையாகக் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு