Published:Updated:

`கறுப்பு கவுன்களுக்குள் உடைந்த கனவுகள்!' - ஜூவி ரேப்பரும் கிருஷ்ணமூர்த்தியும்

ஜூவி ரேப்பரில் வழக்கறிஞராக போஸ் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி...
ஜூவி ரேப்பரில் வழக்கறிஞராக போஸ் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி... ( விகடன் )

ஜூனியர் விகடனின் அட்டைப் படக் கட்டுரைக்கு 1990-ம் ஆண்டு மாடலாக போஸ் கொடுத்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி.

அரசியல் ஆளுமைகள், தமிழகத்தை உலுக்கிய விஷயங்கள், பார்வைகள் குவிக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவைதான் 1990-களில் ஜூனியர் விகடனின் ரேப்பர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன. மாடலை வைத்து போட்டோ சூட் நடத்தி, கட்டுரைகளை புரொமோட் செய்யும் முயற்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்தது விகடன். உதவி இயக்குநர்களைப் போலவே வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள் சில ஜூனியர் வழக்கறிஞர்கள்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

அவர்களின் மீது பார்வையைக் குவித்து, 'தமிழகமெங்கும்... வறுமையில் வாடும் வக்கீல்கள்! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்' என்ற தலைப்பில் 04.04.1990 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். கிழிந்து, ஒட்டுப் போடப்பட்ட வக்கீல் கவுனுடன் வழக்கறிஞர் ஒருவர் சோகத்துடன் இருக்கும் போட்டோ ரேப்பரில் இடம் பெற்றிருந்தது. அன்றைக்கு மாடலாக போஸ் கொடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி.

``என்ன செய்வேன்... என் அடுத்த படத்துல கிருஷ்ணமூர்த்தி இருந்தாரே!'' - வடிவேலு

''எக்ஸ்கியூஸ்மி இந்த அட்ரஸ் எங்கேனு சொல்ல முடியுமா?'' - வடிவேலுவிடம் டயலாக் பேசிய நடிகர் கிருஷ்ண மூர்த்திதான் அன்றைக்கு ஜூனியர் விகடன் ரேப்பரை அலங்கரித்தவர்.

வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி
வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி

'சிக்கலான பிரச்னைகள் பலவற்றை எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடி மிகுந்த தொழில்களுள் வக்கீல் தொழிலும் சேர்ந்துவிடும் என்கிற பரிதாபா நிலை உருவாகி வருகிறது' என்கிற முன்னோட்டத்தோடு எழுதப்பட்டிருந்தது' வறுமையில் வாடும் வக்கீல்கள்' கவர் ஸ்டோரி.

"வடிவேலு சர்ச்சை, `புள்ளிராஜா' விளம்பரம், இழந்த சொத்துகள்..." - கிருஷ்ணமூர்த்தி #RIPKrishnamoorthy

``ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் பெயில் எடுத்தும் தரும் நிலையில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்'' என ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கட்டுரையில் சொல்லியிருந்தார். தொழில் போட்டி காரணமாக புரோக்கர்கள் அதிகமானது பற்றியும் அலசியது கட்டுரை. வழக்கறிஞர்கள் தாமரைச் செல்வி, வைகை, வெங்கடாசலம், சட்டக் கல்வி இயக்குநர் மாஸ்டர் சங்கரன் வக்கீல்கள் சங்கத் தலைவர் காந்தி, ஜூனியர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜேம்ஸ் ஆகியோரின் பேட்டிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

ஜூவி கவர் ஸ்டோரி...
ஜூவி கவர் ஸ்டோரி...
விகடன்

ரேப்பரில் மட்டுமல்ல... கட்டுரையின் உள்ளேயும் மாடல் கிருஷ்ணமூர்த்தியின் போட்டோ இடம்பெற்றிருந்தது. கட்டுரையை டி.அருள்செழியன் எழுதியிருந்தார். படங்களை அழகுராமனும் ஆர்.விஜியும் எடுத்திருந்தார்கள். இவர்களின் பெயர்களோடு 'மாடல் எ.கிருஷ்ணமூர்த்தி' என்கிற பெயரும் இடம்பெற்றிருந்தது. கட்டுரையின் உள்ளே இடம்பெற்ற புகைப்படத்தில் கவுன் அணிந்தபடி மரத்தடியில் சாய்ந்து நின்று கொண்டிருப்பார் கிருஷ்ணமூர்த்தி.

ஜூனியர் விகடனின் இந்த கவர் ஸ்டோரி வெளியான போது வழக்கறிஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. நீதிமன்றங்களில் வக்கீல்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். வழக்கறிஞர் தொழிலைக் கொச்சைப்படுத்தி விட்டதாகச் சொல்லி, ஜூனியர் விகடன் மீது வழக்குகள் போடப்பட்டன. விகடனின் அன்றைய நிர்வாக இயக்குநரும் ஆசிரியருமான எஸ். பாலசுப்ரமணியன், இணை ஆசிரியர் மதன், துணை ஆசிரியர் ராவ், பொறுப்பாசிரியர் சுந்தரம், கட்டுரையாளர் டி.அருள்செழியன் புகைப்படக்காரர் அழகுராமன், மாடல் கிருஷ்ணமூர்த்தி எனப் பலரின் மீது வழக்குகள் பாய்ந்தன.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி
விகடன்
ஷூட்டிங்கின்போது மாரடைப்பு! - நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

புரடக்‌ஷன் மேனேஜராக இருந்து பிறகு நடிகராக மாறினார் கிருஷ்ணமூர்த்தி. கடந்த வாரம் டி.அருள்செழியனைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அந்த கவர் ஸ்டோரிக்குள் 'இன்னொரு தலைப்பும் இடம்பெற்றிருந்தது. அது 'கறுப்பு கவுன்களுக்குள் உடைந்த கனவுகள்'

கனவு தொழிற்சாலையில் உடைந்துபோன கிருஷ்ணமூர்த்தி மீண்டும் வரமாட்டார்.

அடுத்த கட்டுரைக்கு