Election bannerElection banner
Published:Updated:

திருமணப் பந்தத்தில் இணைந்த விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி... பிரபலங்கள் வாழ்த்து!

ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்
ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்

இவர்களின் திருமணம் இன்று ஹைதாரபாத்தில் நடைப்பெற்றது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தின் மூலமாக தனக்கென ஓர் இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். 'ராட்சசன்' படம் அவர் கரியரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'காடன்' திரைப்படம் ரிலீஸானது. நடிகர் ராணாவுடன் இணைந்து இப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரஸ்மீட்டின் போது விரைவில் தனக்கும் இந்திய பேட்மின்ட்டன் வீரர் ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷ்ணு தெரிவித்திருந்தார்.

ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்
ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்

மேலும், 'காடன்' படத்தின் தெலுங்கு விழாவில் கலந்துகொண்டபோது, ”நானும் ஜுவாலா கட்டாவும் விரைவில் இணைய இருக்கிறோம். ஆம், நான் தெலுங்கு தேச அல்லுடு (தெலுங்கு தேசத்தின் மருமகன்) ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் விரைவில் திருமண தேதியை அறிவிக்கிறேன்" என்று பேசியிருந்தார். அதன்படியே, `ஏப்ரல் 22 திருமணம்... எங்களை வாழ்த்துங்கள்!' என்று இருவருமே இன்ஸ்டாவில் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

`தவறான சிகிச்சையா?' - ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்... தொடர் சிகிச்சையில் ரைசா!

இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று ஹைதாரபாத்தில் நடைப்பெற்றது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்
ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்

இவர்களின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் அணிவித்த வைர மோதிரத்தையும் ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு