Published:Updated:

"ஒலிம்பிக்ல மொத்தம் எத்தனை கேம்ஸ் "- இது ' ராட்சசி' ஜோதிகா

அலாவுதின் ஹுசைன்

ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' படத்தின் டிரெய்லர்

ஜோதிகா நடிப்பில் கெளதம்ராஜ் இயக்கியுள்ள 'ராட்சசி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

'காற்றின் மொழி' படத்துக்கு பிறகு கணவர் சூர்யா தயாரிப்பில் ' ஜாக்பாட்' படத்தில் நடித்து வந்த ஜோதிகா அந்தப் படத்தை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ராட்சசி'.

ஜோதிகா
ஜோதிகா

போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காலையில் வெளியிட்ட படக்குழு, தற்போது 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

சத்யன், அருள்தாஸ், பூர்ணிமா பாக்யராஜ், கவதா பாரதி, ஹரிஷ் பரேடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோதிகா, கீதா ராணி என்னும் அரசுப் பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்வித்துறை மற்றும் பள்ளிகளில் இருக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்ள பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார். படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலாவுதின் ஹுசைன்